சில்லுன்னு ஒரு பனிப்பால் குழைவு
ஐஸ் கிரீமின் நன்மைகளை விவரிக்கும்,
விஷ்ணுபிரியா ஸ்ரீகாந்த்: இன்றைய விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள்
அனைத்தும், ஐஸ் கிரீமோடு நிறைவு பெறுகின்றன. நாளுக்கு நாள், ஐஸ் கிரீம்
சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை உயர்வதால், அதை பற்றிய சந்தேகங்கள்
அதிகரிக்கின்றன. குழந்தைகள் ஐஸ் கிரீம் சாப்பிட்டால், பல் சொத்தையாகும்,
சளி பிடிக்கும், உடல் குண்டாகும் என, நமக்குள்ளேயே தவறான எண்ணம் உள்ளது.
பாலில், கொழுப்பாக உள்ள பாலாடையை நீக்கி, ஐஸ் கிரீம் செய்வதால், உடல்
குண்டாவதை தடுத்து, பாலின் கால்சியம் சத்தை அதிகம் தருகிறது.ஐஸ் கிரீம்
சாப்பிட்டால், தலைவலி, ஜலதோஷம் வராது. ஏற்கனவே, இவை இருக்கும் போது
சாப்பிட்டால் மட்டுமே, அதை தீவிரப்படுத்தும். எனவே, அச்சமயங்களில்
தவிர்ப்பது நல்லது. ஐஸ் கிரீம் சாப்பிடுவதால், பற்கள்
பாதுகாக்கப்படுகின்றன. பல்லின் ஈறுகள் வலு பெறுகின்றன. அதனால் பல்
மருத்துவர்கள், பல்லைப் பிடுங்கியவுடன், ஒரு மணி நேரம் கழித்து, ஐஸ் கிரீம்
சாப்பிடச் சொல்கின்றனர். ஒரு கரண்டி ஐஸ் கிரீமில், வைட்டமின், ஏ, டி, கே
மற்றும் பி12 போன்ற, சத்துக்கள் உள்ளன. ரத்த ஓட்டம் சீராக இயங்க, பார்வைக்
கோளாறு, சிறுநீரகக் கோளாறு இருந்தால், அதை தீர்க்க, நல்ல மருந்தாக உள்ளது.
பி12 நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.உடலுக்கு தேவையான புரோட்டீன்
எளிதில் கிடைப்பதால், உடலில் உள்ள தசை, திசுவை தினமும் சரி செய்யும்
ஆற்றல், இந்த புரோட்டீன்களுக்கு உண்டு.விண்வெளியில் உள்ள, சர்வதேச விண்வெளி
ஆராய்ச்சி நிலையத்தில் தங்கியுள்ள, சுனிதா வில்லியம்ஸ் போன்ற
ஆய்வாளருக்கு, தனியார் விண்கலம் மூலம், ஐஸ் கிரீம் அனுப்பப்பட்டது. ஆய்வின்
போது, உடல்நிலையை சீராக வைக்க, ஐஸ் கிரீம் உதவும் என்பதே இதற்குக்
காரணம்.ஐஸ் கிரீம் தயாரிப்பில் பின்பற்றப்படும் தரம் தான், உடலுக்கு
நன்மையா, தீங்கு விளைவிக்குமா என, தீர்மானிக்க முடியும். சுத்தமான தண்ணீர்,
கெட்டுப் போகாத பால், சரியான அளவு எசன்ஸ், ஜெலட்டின் பவுடர் ஆகியவற்றை ஐஸ்
கிரீம் தயாரிப்பில் சேர்க்க வேண்டும். எனவே, நல்ல தரமான நிறுவன ஐஸ்
கிரீம்களை உண்பதே சிறந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக