வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

மழை வருமா, வராதா? நத்தைகள் சொல்லிவிடும்


மழை வருமா, வராதா? நத்தைகள் சொல்லிவிடும்

இலண்டன்: "வானிலை நிலவரத்தை முன்கூட்டியே தெரிவிப்பதில், நத்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன' என, லண்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.லண்டனின், யார்க் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் ஆன்ட்ரி கர்லோ இது குறித்து கூறியதாவது:ஒரு தாவரத்தையோ அல்லது கம்பத்தையோ நோக்கி நத்தை நகருகிறது என்றால், நிச்சயமாக மழை வரப்போகிறது என்று அர்த்தம்.வானிலை யில் ஏற்படும் மாறுபாடுகளை தெரிவிப்பதில் நத்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மத்தியதரை கடல் நாடுகளின் பகுதிகளில் உள்ள குகைகளில் கண்டறியப்பட்ட நத்தைகளின் ஓடுகளை பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டதில், அவை பல்வேறு காலகட்டத்தில், ஈரப்பதத்துடன் இருந்தது தெரியவந்தது.
இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில், விவசாயிகள் முதன் முறையாக கால்பதித்தபோது, அங்கு, இப்போ து உள்ளது போல்,அவ்வளவு வெப்பம் மிகுந்த பகுதிகளாக இல்லை. மாறாக, மிகவும் இதமான சூழல்தான் நிலவிவந்தது. மத்தியதரை கடல் நாடுகளின் பெரும்பாலான பகுதிகளில், நத்தைகளின் ஓடுகளை காண முடிந்தது. நிலத்தில் வாழும் நத்தைகள், மனிதர்களின் குணாதிசயங்களை தெரிவிப்பவையாகவும் உள்ளன. ஸ்பெயின் மற்றும் இத்தாலியில், நத்தைகளை பல்வேறு காலகட்டங்களில் ஆய்வு செய்ததில், அவை வெவ்வேறு விதமான வானிலை நிலவரத்தை தெரிவிப்பவையாக இருந்தன. இந்த சோதனையின் மூலம், ஒவ்வொரு பகுதியிலும் ஏற்படும் வானிலை மாறுபாடுகளையும் நத்தைகளால் தெரிவிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தோம்.இவ்வாறு ஆன்ட்ரி கர்லோ கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக