செவ்வாய், 29 ஜனவரி, 2013

இலங்கைக்கு எதிராக மற்றொரு தீர்மானம் அமெரிக்கா முடிவு

 கொழும்பு:இலங்கைக்கு எதிராக மற்றொரு தீர்மானத்தை, சர்வதேச மனித உரிமை கமிஷனில் கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.

இலங்கையில், 2009ல், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதி கட்ட சண்டை நடந்தது. இந்த சண்டையின் போது போர் குற்றம் நடந்ததாக புகார் கூறப்பட்டது.இலங்கை நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரையை செயல்படுத்த தவறி விட்டதாகக் கூறி, கடந்த ஆண்டு, இலங்கை அரசுக்கு எதிராக, ஜெனிவாவில், மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தை ஆதரித்து, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஓட்டளித்தன.

இதற்கிடையே, இலங்கையில் தமிழர் பகுதியில் நடக்கும் சீர்திருத்த நடவடிக்கைகளை, அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் ஜேம்ஸ் மூர் தலைமையிலான குழு நேற்று பார்வையிட்டது.

அப்போது ஜேம்ஸ் மூர் குறிப்பிடுகையில், ""இலங்கையில், 2009ல் நடந்த போர் குற்றங்கள் குறித்து, ராணுவ அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, மற்றொரு தீர்மானத்தை, சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக