சொல்கிறார்கள்
மாத்தி யோசி!'
வெல்வெட், சணல் பைகள், தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சுசீலா: மகளிர் குழுக்களுக்கு, மதுரையில் தையல் பயிற்சி கொடுத்தனர். அதில், பங்கேற்ற போது தான், தைப்பதில் கற்பனைத் திறனை புகுத்தினால், வளமான வருமானம் பார்க்கலாம்னு புரிந் தது. பயிற்சி முடிந்த தும், அனைவரும் ஆடைகளை தைக்க களமிறங்கினர். நானும் அதே பாதையில் போனால், பந்தயத்தில் ஜெயிக்க முடியாது என, மாற்றி யோசித்தேன். அதனால், வெல்வெட், சணல் பைகள், பர்ஸ்கள் தயாரிப்பில் இறங்கி விட்டேன். ஒரு பை செய்வதற்கு, ஒரு மீட்டர் வெல்வெட் துணி, ஜிப், அவ்வளவு தான். இதற்கு, ஆகக் கூடிய மொத்த செலவு, 60 ரூபாய் முதல், 80 ரூபாய் வரை தான். அதை, 120 ரூபாய் முதல், 150 ரூபாய் வரை விற்கலாம். ஒரு பைக்கு குறைந்த பட்சம், 50 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். பைக்காக வெட்டும் போது, மீதமாகி விழும் வெல்வெட் துண்டு துணிகளை, குப்பையில் போடாமல், அதை வைத்து ஏதாவது செய்ய முடியுமா என யோசித்தேன். குழந்தைகள் விளையாடுவதற்கு சிறிய கைப் பைகள், மொபைல் போன் பவுச் என, சிறிய பொருட்கள் தயாரித்து விற்றேன்; அதன் மூலமும், உபரி வருமானம் கிடைத்தது. இந்த தொழிலில், ஓரளவிற்கு நிலையான வருமானம் கொடுக்கவே, அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தேன். சணல் பை தயாரிப்பிலும் இறங்கினேன். நல்ல லாபம் கிடைத்தது. ஒரு கட்டத்தில் தனி ஆளாக என்னால், அனைத்து வேலைகளையும் பார்க்க முடியவில்லை. தையல் தெரிந்த பெண்களுக்கு, என் ஆர்டர்களை பிரித்துக் கொடுத்து, தைத்து வாங்கினேன். தற்போது நான், ஆறு ஊர்களில் வியாபாரம் செய்கிறேன். எட்டாம் வகுப்பு கூட தாண்டாத நான், மாதம் 25 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்கிறேன். என் தொழில் முயற்சியைப் பாராட்டி, பல விருதுகளும் வாங்கி யிருக்கிறேன்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக