சனி, 16 ஜூன், 2012

aero charger for cell: அலைபேசி மின்னேற்றத்திற்குக் காற்றிலிருந்து மின்திறன்

சொல்கிறார்கள்

"தொலைத் தூரப்பயணங்களுக்கு...'

காற்றிலிருந்து மின்சாரம் தயாரித்து, மொபைல் போனை சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ள ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த பீட்டர் ஜான்: இன்றைய நிலையில், மிக அத்தியாவசியத் தேவையான மொபைல் போன்களை, நீண்ட நேர மின்வெட்டின் காரணமாக, சார்ஜ் செய்ய முடியாமல் போகிறது. இதற்குத் தீர்வு காண்பதற்காகவே, நான் காற்றிலிருந்து மின்சாரம் உருவாக்கி, அதன் மூலம் மொபைல் போன் சார்ஜ் செய்யும் கருவியைக் கண்டுபிடித்துள்ளேன். இந்த மொபைல் போன் சார்ஜர் கருவியை, பயணத்தின் போது ஜன்னல் ஓரம் வைத்தால், உள்ளே வரும் காற்று, விசிறியை சுழல வைக்கும். அந்த விசிறி, மின்சாரம் உற்பத்தி செய்யும் டைனமோவை சுழல வைக்கும்.டைனமோ சுற்றுவதால், "ஏசி' மின்சாரம் உற்பத்தியாகிறது. மொபைல் போனை, "டிசி' மின்சாரம் மூலமே, சார்ஜ் செய்ய முடியும். இதையடுத்து கிடைக்கும், "ஏசி' மின்சாரத்தை, "டிசி' மின்சாரமாக மாற்ற, சிறிய டையோடை பயன்படுத்தியுள்ளேன்.இக்கருவி, வாகனங்களில் வெகுதூரம் பயணிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இதை தயார் செய்ய, அதிகபட்சமாக, 350 ரூபாய் வரை செலவாகிறது. சைக்கிள் டைனமோ, தகடால் ஆன விசிறி, டையோடு, ஒயர், சிறிய பெட்டி ஆகிய பொருட்களைக் கொண்டு, இதைத் தயாரிக்கலாம். சில மொபைல் போன்களை சார்ஜ் செய்வதற்கு, ஐந்து வோல்ட் மின்சாரம் தேவைப்படுவதால், அதற்காக தற்போது சில மாறுதல்களைப் புகுத்தி வருகிறேன்.தற்போது, இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பேட்டரி மூலம் இயங்கும், இரு சக்கர வாகனங்களுக்கு, சார்ஜ் தீர்ந்து போனாலும், காற்றிலிருந்து மின்சாரத்தை உருவாக்கி, பேட்டரியை ரீசார்ஜ் செய்யும் கருவியை கண்டுபிடித்து வருகிறேன். இந்தக் கண்டுபிடிப்பிற்கு அதிக செலவு ஆவதால், அரசிடம் இருந்து ஊக்கத் தொகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக