வெள்ளி, 15 ஜூன், 2012

தமழர்க்குத் தேசிய மொழி தமிழே!

இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று  தவறாகக் கூற வேண்டா. இந்நாட்டில் உள்ள எல்லா மொழிகளும் அவரவர் இனத்தவரின் தேசிய மொழிதான். தமிழர்க்குத் தேசிய மொழி தமிழே. இந்தி அலுவல் மொழியாக  ஏற்கப்பட்டதும் தவறே. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
கேலிச்சித்திரத்தை அகற்ற வேண்டும்: கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல்

First Published : 14 Jun 2012 05:12:27 PM IST


சென்னை, ஜூன்.14: மத்திய அரசின் பாடப்புத்தகங்களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கிண்டல் செய்து வெளிவந்த கேலிச்சித்திரத்தை அகற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தின் சார்பில் தமிழகத்தின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில் வெளியிட்டுள்ள கேலிச் சித்திரம் குறித்து, தமிழகத்திலே உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர் களும் கண்டனம் தெரிவித்து, அந்தக் கேலிச் சித்திரம் உடனடியாக அந்தப் பாடப் புத்தகத்தில் இருந்து அகற்ற மத்திய அரசு ஆவன செய்திட வேண்டுமென்று அறிக்கை கொடுத்ததோடு, போராட்டங்களும்நடத்தி முடித்த பிறகு, தமிழக ஆளுங்கட்சியின் தலைவியும், முதலமைச்சருமான ஜெயலலிதா திடீரென விழித்துக் கொண்டு அவசர அவசரமாக ஓர் அறிக்கை கொடுத்து, அதனை தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் எல்லாம் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளன.தமிழகத்திலே 1965ஆம் ஆண்டு தமிழக மாணவர்களும், திமுகவும் மொழிப் போராட்டம் நடத்தி பல்லாயிரக்கணக்கானவர்கள் சிறை சென்ற போது கோவா கடற்கரையில் திரைப் படத்திற்கான படப்பிடிப்பிலே கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிகழ்வுகளைப் பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாமல், காட்சியில் நடித்துக் கொண்டிருந்த அம்மையார்தான் இப்போது அறிக்கை விடுத்துள்ள செல்வி ஜெயலலிதா.இந்தியை எதிர்த்து அண்ணா முழங்கியதையெல்லாம் ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நினைவாக கழக ஆட்சியில் எழுப்பப்பட்ட “அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்” என்றகட்டிடத்தை மாற்றுகிறேன் என்று சண்ட மாருதம் செய்தவருக்கு, தற்போது அண்ணா அவர்களின் பேச்சு ஞாபகத்திற்கு வந்தது ஆச்சரியம்தான். அதுபோலவே பெரியாரின் பெயரையும் குறிப்பிட்டு அவரை அவமதிக்கும் செயல் என்றும்தனது அறிக்கையில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். தமிழகத்திலே மழை இல்லை என்பதற்காக திருச்சியில் காவிரியில் அ.தி.மு.க. அமைச்சரின் முன்னிலையில் வேத ஆகம பாராயணங்களோடு மூன்று நாட்களுக்கு முன்பு யாகம் நடத்தி விட்டு, தற்போது பெரியாரின் பெயரைக் கூறி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைத்தால் திராவிடர்கள் என்ன அவ்வளவு ஏமாளிகளா? இதிலே ஜெயலலிதா அறிக்கை விடுத்தாரா இல்லையா என்பதல்ல பிரச்சினை.ஒட்டு மொத்த தமிழர்களையும், அவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் கிண்டல் செய்த கேலிச் சித்திரம் அரசின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தில் இடம் பெறக் கூடாது என்பதுதான் அனைவரின் கோரிக்கையும், வேண்டுகோளுமாகும்.எனவே மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தி, இதனைப் பெரிய பிரச்னையாக வளர்த்து விடாமல், உடனடியாக தலையிட்டுஅந்தக் கேலிச் சித்திரத்தை அகற்றுவதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன் என கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்

இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒரு கேலி கூத்துதான். இந்தியாவின் தேசிய மொழி இந்தி அனைவரும் கட்டாயம் கற்றுகொள்வது மிகவும் அவசியம். தி மு க வின் பெரிய பயம் என்னவென்றால் அனைவரும் இந்தி கற்றுக்கொண்டுவிட்டால் தேசிய கட்சிகள் தமிழ்நாட்டில் பலமாக அமைந்து ஆட்சியை பிடித்து விடும். இவர்களால் ஒட்டுமொத்தமாக நம்மை கொள்ளை அடிக்க முடியாது அடிமையாக்கவும் முடியாது. தமிழ் நண்பர்களே தமிழுடன் சேர்த்து இந்தியும் கற்று கொள்ளுங்கள்..இந்த மூளை கெட்ட அரசியல்வாதியின் பேச்சை இனியும் நம்பி ஏமாறாதீர்கள். இந்த மனிதரின் அனைத்து வாரிசுகளும் இந்தி படித்திருக்கிறார்கள்
By மே.கருணாநிதி
6/14/2012 8:16:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக