சனி, 17 செப்டம்பர், 2011

கனேடியப் பிரதமரின் எச்சரிக்கையால் சிறிலங்கா ஏமாற்றம்


கனேடியப் பிரதமரின் எச்சரிக்கையால் சிறிலங்கா ஏமாற்றம்

சிறிலங்காவில் 2013ம் ஆண்டில் கொமன்வெல்த் உச்சி மாநாட்டை நடத்துவதற்கு கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹாப்பர் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஏமாற்றம் வெளியிட்டுள்ளது.
ஒட்டாவாவில் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயர்ட்டை, கனடாவுக்கான சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வகீஸ்வரா சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு ரினிட்டாட் டுபாக்கோவில் நடைபெற்ற கொமன்வெல்த் தலைவர்கள் உச்சி மாநாட்டில், 2013இல் கொமன்வெல்த் மாநாட்டை சிறிலங்காவில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் நிலையில் கனேடியப் பிரதமர் எதிர்ப்புத் தெரிவிப்பது ஏமாற்றமளிப்பதாக சிறிலங்கா தூதுவர் கூறியுள்ளார்.
சிறிலங்காவில் மனிதஉரிமைகள் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், சிறிலங்காவில் நடைபெறும் கொமன்வெல்த் உச்சிமாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று கனேடியப் பிரதமர் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக