திங்கள், 12 செப்டம்பர், 2011

congressmen type two: நீதி கேட்கும் இரண்டாம் வகை காங்கிரசுகாரர்கள்…?

நீதி கேட்கும் இரண்டாம் வகை காங்கிரஸ்காரங்க…?

இன்று சென்னை ஊடகவியலாளர்கள் மத்தியில், இரண்டு காங்கிரச்கார்ர்கள் ஏற்பாட்டில், ராஜீவ்காந்தியுடன் கொல்லப்பட்ட இரண்டு காங்கிரஸ்காரர்களின் “பிள்ளைகளை” கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர்களும் “எங்களுக்கு நீதி வேண்டும்” என்று சொல்லிக்கொடுத்த வாய்ப்பாட்டை ” கிளிப்பிள்ளை” போல உச்சரித்தனர். நமது ஊடகவியலாளர்கள் அத்துடன் “திருப்தி” அடையவில்லை. அவர்களிடம் சில கேள்விகளை “தனியாக” கேட்டபோது, “பல விசயங்கள்” வெட்டவெளிச்சமாகி உள்ளன.
அதாவது இத்தனை நாள் அல்லது இத்தனை ஆண்டுகள் “எங்கே போயிருந்தீர்கள்?” என்ற கேள்விக்கு, “பத்தொன்பது” ஆண்டுகளாக “காங்கிரஸ்” தலைமையிடம் “எங்களுக்கு நீதி வேண்டும்” என்று முறையிட்டு வ்ந்தோம்.என்கிறார்கள். அந்த “பலியான” குடும்பங்களுக்கு ” இருபது ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தலைமை ஒரு அரசு வேலை கூட போட்டுக் கொடுக்கவில்லை” என்ற குமுறலை வெளிப்படுத்தினார்கள். வழக்கமாக இதுபோன்ற விபத்துகளில் மரணம் அடைந்தவர் “குடும்பத்திற்கு” அவர்களது “வாரிசுகளுக்கு” அரசு வேலை கொடுத்து, “ஆற்றுப்படுத்தல்”‘ செய்வார்களே? ஏன் இவர்கள் விசயத்தில் செய்யவில்லை?
ராஜீவ் காந்தி கொலையால் “லாபம்” பெற்ற நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, அவ்வாறு “நன்றி” அறிவிக்கும் செயலை செய்ய விரும்பவில்லையா? ராஜீவ் கொலைக்கு காரணமான, அமெரிக்காவும், அவர்களது அடிவருடியான “சுப்பிரமணிய சாமியும், சந்திராசாமியும்” தியாகியாக ஆகிவிட்ட “தமிழ்நாட்டு” காங்கிரச்காரர்களுக்கு, நன்றி தெரிவிக்கும் முகமாக அவர்களது “வாரிசுகளுக்கு” அரசு வேலை தருவதை “தடை”செய்தார்களா?” அல்லது ராஜீவ் கொலைக்கு பின்னாலிருந்து ஏற்பாடு செய்த “காங்கிரஸ் பணிக்’ குழு” வின் அலுவலக செயலாளராக அந்த நேரத்தில் இருந்த ஆந்திராவை சேர்ந்த “கல்யாண ராவ்” என்பவர் ” உடன் சென்ற காங்கிரஸ்காரர்கள் “தியாகிகள்” ஆனதை “பதிவு” செய்ய விரும்பாததால்,அவர்களதுகுடும்பங்களை ”அனாதையாக நடுத்தெருவில் விட்டுவிட்டார்களா?
அல்லது “தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள்” யாரும் ராஜீவ் உடன் “கொல்லப்படவோ” அல்லது “காயம்படவோ” இல்லையே என்ற “கருத்து”‘ மக்கள் மத்தியில் “அம்பலமாகிவிடக்கூடாதே” என்பதற்காக உண்மையில் இறந்த “”’தியாகிகள் பற்றிய செய்தியை “மறக்கடிக்க” அவர்களது “”வாரிசுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்களா? இறந்த “காங்கி’ர’ஸ்காரர்கள்” குடும்பத்தில் உள்ள வாரிசுகள், ”கோபத்தில்”‘ தலைவர்களைப் பார்த்து, ” நீங்கள் மட்டும் எப்படி தப்பித்தீர்கள்?’ என்று கேட்டுவிடுவார்கள் என்பதற்காக அந்த ” வாரிசுகளை” இத்தினை ஆண்டுகளும் ” கண்டுகொள்ளாமல்” விட்டார்களா? அல்லது அதில் சில ” வாரிசுகள்” அந்த நேரத்திலேயே அப்படி கேள்விகளை கேட்டுவிட்டதால், அவர்களை ” நடுத்தெருவில்” விட்டார்களா?
அப்படியானால் தெருவில் இறங்கி ” மூன்று தமிழர் உயிர்காப்பு ” என்று போராடும் தமிழர்கள், ” ராஜீவ் கொலையில் செத்துப்போனவர் எல்லாம் போலீஸ்காரன். எங்கே போனான் காங்கிரஸ்காரன்?” என்று கேள்வி முழக்கம் எழுப்புகிறார்களே? அதில் உள்ள “சூட்சுமம்” இப்போதுதானே புரிகிறது. அப்படியானால் காங்கிரஸ் கட்சியில் “இரண்டுரகம்” இருக்கிறார்கள். ஒன்று “உயிர் தியாகம் செய்து நடுத்தெருவில் ” நிற்பவர்கள். இரண்டாவது ” சதி செயல் தெரிந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள” ஓட்டம் பிடித்தவர்கள்.
இதில் இரண்டாவது ரகம்காரர்கள், முதல் ரகம்காரர்களின் ”வாரிசுகளுக்கு” பட்டை நாமம் போட்டுவிட்டு, இப்போது அவர்களை ”தங்கள் துருப்பு சீட்டுகளாக” பயன்படுத்துகிறார்கள். இவையெல்லாமே “அரசியல் காரணங்களுகாக” மூன்று பேர் தூக்கை ”துரிதப்படுததும்” சிதம்பரத்தின் ” சித்து விளையாட்டுகள்”.
– TSS.MANI
Short URL: http://meenakam.com/?p=34816
Share/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக