இதில் எந்தத் தவறும் இல்லை. மாநில அரசிடமிருந்த மிகுதியான பணத்தைச்சுருட்டிக் கொண்டு குறைவான பணத்தைத் தரும் மத்திய அரசு இதுபோன்ற கூட்டம் நடத்துவது மாநில உரிமைக்கு எதிரானது. தேவையெனில் மாநில அரசிடம் அறிக்கை கேட்கலாம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம். நேரடியாக அதிகாரத்தைச் செலுத்துவது தவறு. வேணும் கட்டைக்கு வேணும்! வெங்கலக்கட்டைக்கு வேணும் என்று பழமொழி ஒன்ற உண்டு. மூவர் விடுதலையை விதிமுறைக்கும் மனித நேயத்திற்கும் மாறாக மறுத்த அடிமை அமைச்சருக்கு இது தேவையான ஒன்றுதான். குறுக்கு வழியில் அமைச்சராகலாம். மக்கள் உள்ளத்தை ஆள முடியாது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
First Published : 12 Sep 2011 05:35:46 PM IST
புதுக்கோட்டை, செப். 12: மத்திய அரசுத் திட்டங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் வகையில் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் திங்கள் அன்று நடைபெறும் என உறுதி செய்யப்பட்டது.இந் நிலையில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இல்லாததால் கூட்டத்துக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர், வெறுத்துப் போய் கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினார். இதனால் காலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மத்திய அரசால் நிதி ஒதுக்கப்பட்டு மாநில அரசின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்படும் வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை செய்யும் நோக்கில் சில மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மத்திய, மாநில அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டமாக நடைபெறுவது வழக்கம்.இதன்படி, இந்த ஆண்டின் முதல் கூட்டம் திங்கள் அன்று நடத்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த மாதம் தேதி கேட்டார். அதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்தது.இந்நிலையில், திங்கள் அன்று காலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்குக்கு வந்தார் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். அரங்கு வெறிச்சோடியிருந்தது. கூட்டத்துக்கு ஆட்கள்தான் வரவில்லை என்று பார்த்தால், தலைமை ஏற்க வேண்டிய மாவட்ட ஆட்சியரே அங்கு இல்லை! அடுத்த நிலை அதிகாரிகளிடம் விசாரித்தால், ஆட்சியர் திடீர் பயணமாக சென்னை சென்றுவிட்டார் என்றனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் ப.சிதம்பரம். தொடர்ந்து இது முக்கியக் கூட்டம், ஆட்சியர் இல்லாமல் நடத்த முடியாது என கடுமையாகக் கூறிவிட்டு வெறுப்புடன் வெளியேறினார் ப.சிதம்பரம்.இதனால், அங்கே திரண்டிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரின் செயலைக் கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக குமுறலுடன் தெரிவித்தனர்.
கருத்துகள்


By kamal
9/12/2011 10:35:00 PM
9/12/2011 10:35:00 PM


By velmurugan
9/12/2011 8:41:00 PM
9/12/2011 8:41:00 PM




By அகிலன்
9/12/2011 6:28:00 PM
9/12/2011 6:28:00 PM


By maruthaiahpillai


By ராமஸ்வாமி.ச.
9/12/2011 6:19:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *9/12/2011 6:19:00 PM