தமிழ்க்கவிஞரின் நினைவுநாளில் பிறந்த தினமணியின் தலைநகரப் பிறப்பைத் தமிழகத் தலைவரின் பிறந்த நாளில் வைத்துள்ளீர்கள். ஆனால். அவர் பதவியில் இருந்திருந்தால் இதனைக் கூறியே விளம்பரப்படுத்தி இருப்பீர்கள். இப்பொழுது சொல்ல மாட்டீர்கள். இருப்பினும் தலைநகரத் தினமணி நிலைத்து வாழ வாழ்த்துகள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
ஜூன் 3-ம் தேதி முதல் தில்லியிலிருந்தும் "தினமணி'!
First Published : 02 Jun 2011 03:50:23 AM IST
புதுதில்லி, ஜூன் 1: தேசியத் தமிழ் நாளிதழான "தினமணி', தனது 8-வது பதிப்பை புதுதில்லியில் ஜூன் 3-ம் தேதி தொடங்குகிறது. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 13-வது நினைவு தினமான செப்டம்பர் 11, 1934 அன்று பிறந்த தினமணி, தற்போது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், தருமபுரி ஆகிய இடங்களிலிருந்து வெளிவருகிறது. வரும் ஜூன் 3-ம் தேதி புது தில்லியிலிருந்தும் வெளிவர இருக்கிறது. அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு புதுதில்லி ரஃபி மார்க்கில் உள்ள "கான்ஸ்டிட்யூஷன் கிளப்' அரங்கத்தில் நடைபெற இருக்கும் தொடக்கவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தினமணி புது தில்லிப் பதிப்பின் முதல் இதழை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி வெளியிட, நீண்ட நாள் தில்லிவாசியும், மூத்த குடிமகனுமான பட்டாபிராமன் பெற்றுக் கொள்கிறார். தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி, பேராசிரியர் சாலமன் பாப்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்க இருக்கின்றனர். மறுநாள் ஜூன் 4-ம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு புதுதில்லி ரஃபி மார்க்கிலுள்ள மாவ்லாங்கர் அரங்கத்தில் பேராசிரியர் சாலமன் பாப்பையா குழுவினரின் சிறப்புப் பட்டிமன்றம், "தினமணி' நாளிதழ் சார்பில் நடைபெற இருக்கிறது. "இன்றைய ஊடகங்களின் போக்கு போற்றத் தக்கதே! மாற்றத் தக்கதே!' என்பது பட்டிமன்றத்தின் விவாதப் பொருளாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக