வெள்ளி, 9 ஜூலை, 2010

மீனவர் மீது தாக்குதல்: கருணாநிதி கண்டனம்


சென்னை, ஜூலை 8: இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு தமிழக மீனவர் செல்லப்பன் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுபோன்ற செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொடுமை புரிவதென்பது இது முதல் முறையல்ல. தொடர்ந்து நடைபெறும் தொடர்கதையாக உள்ளது.தமிழக மீனவர்களின் இந்தத் துயர நிலை குறித்து, தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கும், பிரதமருக்கும், தொடர்புடைய அமைச்சர்களுக்கும் இதுவரை பல முறை நேரிலும், கடிதங்கள் மூலமும் கோரிக்கைகள் விடுத்தும் தமிழக மீனவர்களின் அவலம் நின்றபாடில்லை.கண்டிக்கத்தக்கது: தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறை சித்திரவதைக்கும், கொலைக்கும் ஆளாகும்போது மத்திய அரசிடம் நாம் முறையிடுவதும், அவர்களும் நம்மைச் சமாதானப்படுத்துகின்ற முயற்சியிலே ஒரு கடிதமோ, வேண்டுகோளோ இலங்கை அரசுக்கும் விடுப்பதும், அதற்குப் பிறகு சில நாள்களில் இப்படிப்பட்ட கொடுமை நடைபெறுவதும் வாடிக்கையாகிவிட்டது. மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். இந்திய-இலங்கை அரசுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை அண்மையில் நடைபெற்று ஒப்பந்தம் போடப்பட்ட நேரத்திலே கூட, தமிழக மீனவர்களின் இந்த நிலை குறித்து விரிவாகப் பேசப்பட்டு தமிழக மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்தால் கூட, அவர்களை தாக்குவதோ, கொலை செய்வதோ கூடாது என்றும், முறைப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர இதுபோன்ற செயல்களில் இலங்கைக் கடற்படையினர் ஈடுபடக் கூடாது என்றும்  முடிவெடுக்கப்பட்டது.ஆனால், அதற்கு மாறாக தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் இக் கொடுமையைக் களைய மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு இதுபோன்ற செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்த நிகழ்ச்சி பற்றிய உண்மை விவரத்தை தமிழக மக்களுக்குத் தெரியப்படுத்தியாக வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.திமுக நாளை ஆர்ப்பாட்டம்சென்னை, ஜூலை 8: தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, சென்னையில் திமுக சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.அந்தக் கட்சியின் மீனவர் அணி அறிவித்துள்ள இந்த ஆர்ப்பாட்டம், சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்பு நடத்தப்படுகிறது.இத் தகவலை திமுக மீனவர் அணிச் செயலாளர் ஆர்.பெர்னார்டு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளார். மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டிப்பதோடு, மத்திய அரசு இனியாவது துரித நடவடிக்கைகளை கடுமையாக எடுத்து மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இந்தப் போராட்டத்தில் தமிழக மீனவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.மீனவர் செல்லப்பன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதிஇலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான தமிழக மீனவர் செல்லப்பனின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என மாநில அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.இந்த நிதி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் மூலமாக உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

கையாலாகாத தமிழ்நாடு; கண்டுகொள்ளாத இந்தியா என்னும் நிலையால் மீனவர்கள் அழிவதைத் தடுக்க மீனவர்கள் வாழும் பகுதியை மீனவர்நாடு அல்லது மீன்கொடி நாடு எனத் தனியாகப் பிரித்துக் கொடுத்தால் வாழ்ந்தாலும் வீழ்நதாலும் அவர்கள் பொறுப்பாகும். நம் மீது பழி வராது. இல்லையேல் தொடர் கொலைக்கு முற்றுப்புள்ளி வராது. 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/9/2010 6:36:00 AM
ப.சிதம்பரம், எஸ்.எம். கிருஷ்ணா,ஏ.கே.அந்தோணிக்கும் இந்த சிங்கள கடற்படை அட்டூழியம் தெரியாத என்ன ...! எதெற்கு கடிதம் ...? தமிழன் என்றால் அவ்வளவு கேவலம் ...
By Rajakumar, Singpaore
7/9/2010 6:35:00 AM
Ban Ki Moon decides to close down the UNDP Regional Centre in Colombo [ Thursday, 08 July 2010, 06:14.54 PM GMT +05:30 ] Reports states the UNDP Regional Centre in Colombo has been authorized by United Nation Secretary General Ban Ki Moon to close down. A United Nation spokesperson said an announcement was made in New York short while ago, that Ban Ki Moon had recalled the United Nations Resident Coordinator, Neil Buhne, to New York for consultations. The UN Spokesperson had informed that Ban Ki Moon had said that he cannot accept that the Sri Lankan government authorities have failed to prevent the disruption of the normal functioning of the United Nations offices in Colombo, due to the disorderly protests organized and led by a Sri Lankan Government Cabinet Minister. Further the Secretary General Ban Ki Moon had urged the Sri Lankan government to maintain its responsibilities towards the UN as host country, to perform the vital work of the organization without any obstacles to
By Musthafa
7/9/2010 5:30:00 AM
The blind karunanithi is going for sooriyanamaskaaram. Do the Tube light karunanithi feeling the pain of the fisherman"s now?.Dont he feel shame? This black sheep is getting ready for the coming election.The tamil people,please take care of this dirty old fox.He will sale the entire tamil people for his political benefits.
By Dharumi
7/9/2010 5:10:00 AM
Hey stupids, Small water ball country's army killing many many tamils every day.., if you are not capable enough handle it, please give me power, I will disappear that tiny country within 24 hours...I do not blame central government or PM.
By ravi
7/9/2010 4:57:00 AM
If Tamilnadu people are muslims, here about 40 Muslims countries agaist Srilankan Governmet, unfortunately, Most Tamils are hindus, Hindi God also not help these people and Hindu people also not help these people. Tammils are treated as dog in this planet.Tamils must have thier own country to save Tamil people. Delhi idiots never help Tamils. Mr. karunanithi also not understand about Tamils problems around the world, also, Indian bar to interveine other countries to save Tamils. what Gandi india is this? Unless Tamils fight for the freedom, Indian(north) never allow Tamils have lives.
By Musthafa
7/9/2010 4:49:00 AM
dei nee nadigan da trisha unnaku kedaikunda.
By navin guru
7/9/2010 3:56:00 AM
தலைவரே, உங்க கூட ஆர்ப்பாட்டம் பண்றதுக்கு காங்கிரஸ்காரன் வருவானா? இல்ல இதுவும் கடைசி நேரத்துலே புஸ்ஸுன்னு போயிடுமா? ஈழத்தமிழர் பிரச்சினையிலே உங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கதை போல. எதுக்கு தலைவா இப்படி அரைகுறை ஆர்ப்பாட்டம் எல்லாம்? மக்களுக்கு இப்படி எத்ததனை நாள்தான் காதுகுத்த முடியும் தலைவா?
By மதுரைக்காரன்
7/9/2010 3:44:00 AM
பசப்புகிறான் கருநாய்நிதி எவன் செத்தால் இவனுக்கென்ன? இவன் பேரப்புள்ளைகளுக்கு பதவி கிடைத்தால் போதும் இவன் தான் மத்திய அரசின் பெரிய தலைவன் இவன் சொல்லி மத்திய அரசு கேட்கவில்லை என்பதெல்லாம் பித்தலாட்டம் ஈழ விசயத்தில் ஒன்றும் செய்ய இயலவில்லை அது வெளிநாட்டு விவகாரம் அடேய் இது உன் மக்கள் விவகாரம் இதிலும் கடிதம் எழுதினேன் அவர்கள் சமாதானப்படுத்தினார்கள் பிறகு மீண்டும் இப்படி என்று புலம்புவதெல்லாம் அசிங்கமாக இல்லை? நீ எல்லாம் ஒரு மாநிலத்தின் முதல்வன் தூ தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறதா??????????????????????????????
By manikandan
7/9/2010 2:53:00 AM
..HE..HE..HE A SIMPLE QUESTION WHY THIS CHEAP MINISTER WAS SILENT ALL THESE DAYS....????
By KOOPU
7/9/2010 1:40:00 AM
என்ன தலைவரே ! கூடுதலா ஒரு கடிதம் எழுதிடுங்க. செவிடன் காதில் திரும்ப திரும்ப சங்கு ஊதினாலும் கேக்கவா போகுது ?
By ஐஸ்கட்டி
7/9/2010 1:32:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக