ஞாயிறு, 4 ஜூலை, 2010

பல ஆயிரம் வருடங்கள் தாம் வாழ்ந்த பூமியில் சுயஅதிகாரம் கேட்கும் தமிழ் மக்களே படுகொலை செய்யப்படுகின்றனர்: த இந்தியா டெய்லி

chanal4_1
பல ஆயிரம் வருடங்கள் தாம் வாழ்ந்த பூமியில் தமக்கு சுயஅதிகாரம் வேண்டும் என தமிழ் மக்கள் கேட்கின்றனர் ஆனால் உலகின் கவனக்குறைவாலே அப்பாவி தமிழ் மக்களை சிறீலங்கா அரசு படுகொலை செய்துள்ளது என த இந்தியா டெய்லி ஊடகம் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட போர்க்குற்றங்களை மேற்கொண்ட சிறீலங்கா மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படுமா? இந்த போர்க்குற்றவாளிகள் தமிழ் மக்களை படுகொலை செய்ததை இந்தியா ஏன் அனுமதித்தது? அமெரிக்கா ஏன் மௌனமாக உள்ளது? நாசிகளை போல சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் வன்முறைகளை ஏன் உலகம் அனுமதித்தது?
ஐக்கிய நாடுகள் சபை அதன் ஆலோசனைக்குழுவை கலைக்கும் வரை கொழும்பில் உள்ள ஐ.நா அதிகாரிகளை பணயக்கைதிகளாக பிடிக்குமறு சிறீலங்கா அமைச்சர் விமல் வீரவன்சா தெரிவித்துள்ள கருத்து சிறீலங்கா அரசு மனித உரிமை மீறல்களை எவ்வாறு மேற்கொள்கின்றது என்பதை தெளிவாக காண்பித்துள்ளது.
சிறீலங்கா அரசு எதனை கூறினாலும் அது தமிழ் மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளது என்பது உண்மையானது. யூதர்களுக்கு எதிராக கிட்லர் மேற்கொண்ட வன்முறைகளுக்கு பின்னர் சிறீலங்கா மேற்கொண்டுள்ள வன்முறைகள் ஒரு இனஅழிப்பாகும்.
srilankan_army_kills_tamil01குழந்தைகளையும், பெண்களையும் கூட இரக்கம் பார்க்காது சிறீலங்கா படையினர் படுகொலை செய்துள்ளது சில இந்திய தலைவர்களை சிக்கலில் தள்ளியுள்ளது. தமிழ் மக்கள் மீதான படுகொலையை தூண்டிய தமிழக முதல்வர் கருணாநிதி ஒரு போர்க்குற்றவாளி என அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வியாழக்கிழமை (1) தெரிவித்துள்ளார்.
கருணாநிதியும் போர்க்குற்றவாளியே என்பதற்கான ஆதாரங்களை ஐ.நாவின் குழுவினர் சிறீலங்கா செல்லும் போது தாம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், சிறீலங்கா படையினரால் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்காக இதனை நாம் செய்யவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் மீதான இனஅழிப்பை இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தடுத்து நிறுத்த முன்வரவில்லை. ராஜீவ் காந்தியின் மரணத்திற்கான பழிவாங்கலாகவே காங்கிரஸ் கட்சியினர் அதனை மேற்கொண்டுள்ளர். ராஜீவ் காந்தி என்ற தனிப்பட்ட நபரின் மரணத்திற்கு ஒரு இனத்தை அழித்தது தவறானது.
சிறீலங்கா அரசின் இந்த வன்முறைகளை ஜோர்ச் புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகம் தடுக்க தவறியது ஏன்? சிறீலங்கா படையினர் அப்பாவி மக்களை படுகொலை செய்ததை ஏன் உலகம் அனுமதித்தது?
பல ஆயிரம் வருடங்கள் தாம் வாழ்ந்த பூமியில் தமக்கு சுயஅதிகாரம் வேண்டும் என தமிழ் மக்கள் கேட்கின்றனர். உலகின் கவனக்குறைவாலே அப்பாவி தமிழ் மக்களை சிறீலங்கா அரசு படுகொலை செய்துள்ளது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழாக்கம்: ஈழம் ஈ நியூஸ் (www.eelamenews.com)
}

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக