செவ்வாய், 6 ஜூலை, 2010

ஆசிரியர் பட்டயக் கல்வி கலந்தாய்வு: 3-ம் நாளில் 1,233 பேருக்கு ஆணை


திருச்சி,  ஜூலை 5: திருச்சியில் நடைபெற்று வரும் ஆசிரியர் பட்டயக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் மூன்றாம் நாளான திங்கள்கிழமை 1,233 பேருக்கு சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது.  தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பிலும், சென்னை ஆசிரியர் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி இயக்ககத்தாலும் 2010-11-ம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பட்டயக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு ஜூலை 2-ம் தேதி திருச்சியில் தொடங்கியது.  இதில், திங்கள்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்க 2,044 பேருக்கு இயக்ககம் அழைப்புக் கடிதம் அனுப்பியிருந்தது.  இவர்களில் 1,233 பேருக்கு சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது.
கருத்துக்கள்

இணையப் பொறுப்பாளர்களுக்கு இதனைக் கட்டுரைப் பகுதியில் இருந்து நீக்கிச் செய்திப் பிரிவிற்கு மாற்றுக. அன்புடன் 
இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/6/2010 3:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக