புதன், 24 பிப்ரவரி, 2010

ஏட்டிக்குப் போட்டிதான் எதிர்க்கட்சியின் பண்பாடு: கருணாநிதி விமர்சனம்சென்னை, ​​ பிப்.​ 23: ''ஏட்டிக்குப் போட்டி என்பதே இன்றைய எதிர்க்கட்சியின் பண்பாடாக உள்ளது'' என்று முதல்வர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.இதுகுறித்து,​​ செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட கேள்வி}பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:''முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள ஐவர் குழுவில் இடம்பெறுவதில்லை என்று திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.​ இதற்கு சிலர் கண்டனம் தெரிவித்து என்னை ​(கருணாநிதி)​ தாக்கி அறிக்கை விடுத்துள்ளனர்.'ஐவர் குழுவில் ஒருவராக திமுக இடம்பெறக்கூடும்' என நினைத்துக் கொண்டு அதை வன்மையாகக் கண்டித்து ஒரு நீண்ட அறிக்கை தயாரித்து வைத்திருந்தார்களாம்.​ அதற்கு வாய்ப்பு இல்லாமல் திமுக பொதுக் குழு அந்த ஐவர் குழுவில் இடம்பெறுவதில்லை என்று அறிவித்தது.இதனால்,​​ ஏமாற்றமடைந்து முதலில் தயாரித்து வைத்திருந்த நீண்ட அறிக்கையைத் தூக்கிப் போட்டுவிட்டு,​​ அவசர அவசரமாக திமுக பொதுக் குழுவின் தீர்மானத்தைக் கண்டனம் செய்து புதிய அறிக்கையை வெளியிட்டார்களாம்.இப்படி எதிலும் ஏட்டிக்குப் போட்டிதான் இன்றைய எதிர்க்கட்சியின் பண்பாடு என்பதை பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.நாடாளுமன்றக் கூட்டம்...​ நாடா​ளு​மன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பே அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து பிரதமரும்,​​ மக்களவைத் தலைவரும் பேசியிருக்கிறார்கள்.​ அவையை அமைதியாக நடத்திச் செல்ல ஒத்துழைக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.ஆனால்,​​ நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்று சில கட்சிகள் சபதம் செய்ததும்,​​ அதை நடைமுறையில் நிலை நாட்டுவதும்,​​ ஜனநாயகத்தை மலரச் செய்யாது.​ மக்கள் வாக்களித்து அனுப்பி இருப்பது அவர்கள் வாழும் பகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் நல்லது நடக்கும் என்பதற்காகத்தான்.இப்போது, ​​ தொலைக்காட்சிகளில் நாடாளுமன்றக் காட்சிகளைக் காண்போர் ஜனநாயகத்தைப் பற்றிய நம்பிக்கையை இழந்துவிடக் கூடிய சூழல் உருவாவதை உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும்.யானை மலை விவகாரம் தொடர்பாக,​​ அரசு விளக்கம் அளித்த பிறகும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருக்கிறார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்துக்கள்

பாம்பின்கால் பாமபறியும். என்றாலும் பொதுமக்கள் எண்ணம் அவ்வாறு மாறுபட்ட கட்சி அரசியல் முடிவலல. தீர்ப்பை மறுக்கவில்லை என்றால் குழுவில் சேர வேண்டியதுதானே! இஃதென்ன வேடிக்கை! மறுக்கவில்லையாம்! ஆனால் குழுவில் சேரவில்லையாம்! யாரை ஏமாற்ற இந்தக் கோமாளித்தனம். குழுவில் சேருவதால பயன்இல்லை என்றால் எதிர்பபைத் தெரிவித்துப் புறக்கணிப்பதாகக் கூறி ஐவர் குழுவையே கலைக்கச் செய்யலாமே! எனவே, ஐவர் குழுவில் சேருவதை எதிர்நோக்கிக் கண்டன அறிக்கை உருவாக்கியிருநதால் அதுவும் சரியே! இப்பொழுது தீர்ப்பை மறுக்க வில்லை என்று சொல்வதால் எதிர்ப்பதும் சரியே! காங்கிரசுதான் மத்திய அமைப்பிற்கு அடிபணிந்து தமிழ்நாட்டு உரிமைகளைப் பறி கொடுத்தது என்றால் தமிழ் தமிழ் என்று பேசும் திராவிடக் கட்டசிகளும் பதவிநலன் பறிபோகும் அச்சத்தால் காங்கிரசிற்கு அடிமையாக இருந்து நம் உரிமைகளை விட்டுக் கொடு்த்தால் யாரைத்தான் நம்புவது? காங்கிரசையும் காங்கிரசைச் சார்ந்த கட்சிகளையும் விரட்டியடிக்கும் நாளே நம் நாட்டிற்குப் ‌பொன்னாள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/24/2010 3:30:00 AM

considering Jaya's posture as opposition leader what Karunanidhi expressed may be true.

By T.N.Swaminathan
2/24/2010 3:24:00 AM

எதுவாக இருப்பினும் உங்களின் (அரசியல்வாதிகளின்) ஆணவம், போட்டி, சிறுபிள்ளைத்தனம் ஆகியவற்றை பின்தள்ளிவிட்டு தமிழக நலனை மட்டும் முன்னிறுத்தும் நேரமிது. இல்லையேல் கடமை தவறியதிற்காக ஆண்டாண்டு காலம் மன்னிக்கமாட்டோம்.

By இளந்தமிழ்
2/24/2010 2:24:00 AM

ஆகா... கருணாநிதியின் கற்பனைக்கு எல்லை இல்லை... என்பதற்கு இதுவே சாட்சி...

By INDIAN
2/24/2010 1:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தினமலர்
Front page news and headlines today

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக