சேலம், பிப்.20: தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ள சமச்சீர் கல்வி நாத்திகக் கல்வியாக இருக்கக் கூடாது என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார். சேலத்தில் அவர் சனிக்கிழமை கூறியது: அயோத்தியாப்பட்டணம் ராமர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பாளர்களின் கையில் உள்ளது. இங்குள்ள சுகவனேஸ்வரர் கோயில் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆளுங்கட்சியினர் அபகரித்துள்ளனர். இவ்வாறு தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை திரும்பப் பெறுவதற்காக இந்து முன்னணி தொடர்ந்து போராடும். பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவாவுக்கு நினைவு மண்டபம் கட்ட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது பாராட்டத்தக்கது. கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு ஆன்மிக பெரியவர்களையும் அழைக்க வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் அனுப்பினேன். அது பரிசீலனையில் உள்ளது என்று எனக்கு பதில் வந்தது. தமிழகத்தில் கொண்டுவரப்பட உள்ள சமச்சீர் கல்வி நாத்திகக் கல்வியாக இருக்கக் கூடாது. தேவாரம், திருவாசகம், ராமாயணம் போன்றவற்றையும் அதில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றார் ராமகோபாலன்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
2/21/2010 5:48:00 AM
2/21/2010 4:25:00 AM
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
2/21/2010 11:33:00 AM
2/21/2010 10:58:00 AM
2/21/2010 10:56:00 AM
2/21/2010 10:52:00 AM
2/21/2010 10:48:00 AM
2/21/2010 10:37:00 AM
2/21/2010 10:18:00 AM
2/21/2010 10:14:00 AM
2/21/2010 9:12:00 AM
2/21/2010 9:07:00 AM