ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ.,வின் உடல் கிடைத்தது?



சென்னை, பிப்.21- காணாமல் போன மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்எல்ஏ.,வுமான டபிள்யூ.ஆர். வரதராஜனின் உடல் கிடைத்துள்ளது.

போரூரில் அவரது உடல் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது.

எனினும், உடல் மிகவும் மோசமடைந்த நிலையில் இருப்பதால் அவரது வளர்ப்பு மகனால் உறுதிப்படுத்த முடியவில்லை. இதையடுத்து டிஎன்ஏ சோதனை நடத்துவதற்கு போலீஸôர் முடிவு செய்துள்ளனர்.

தற்போது டபிள்யூ.ஆர். வரதராஜனின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 11-ம் தேதியன்று அவர் காணாமல் போனார். கையெழுத்திடாத இரு கடிதங்களையும் அவர் எழுதிவைத்து விட்டுச் சென்றார். இந்நிலையில், அவரது உடல் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

மார்க்சியப் பொதுவுடைமையாளர் தற்கொலை செய்ய மாட்டார் என எழுதிச் சென்றதால் இவ்வுடல் அவருடையதாக இல்லாமல் இருக்கலாம். அப்படி அவராகத்தான் இருக்கும் எனில் அவருடைய கட்சியும் அவருடைய மறைவிற்குக் காரணமாக அமைந்தது கண்டனத்திற்குரியது. இங்கே ஐயப்பாடு வந்ததும் மரபணு ஆய்வு ஏன் செய்கிறார்கள்? உண்மையை உறுதிப்படுத்த! ஈழத்தில் தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் உடல் எனக் காட்டியபொழுது ஏன் மரபணு ஆய்வு நடத்தவில்லை? உண்மை வெளிப்படக் கூடாது எனபதற்காக! என்னும் உண்மை இப்பொழுது புரிகிறது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
2/21/2010 9:16:00 PM

Nallavaro kettavaro,Oruvarai kolai seyyum urimai nammidathil illai,manithabimaanam kettu poi vittathu

By mohamed
2/21/2010 7:23:00 PM

Communists,especially Marxists are good in Killing the 'unwanted leaders' mercilessly. This is one more. DMK Govt won't conduct proper enquiry, since they want CPM alliance.

By Nagore Babu
2/21/2010 5:38:00 PM

Unsigned letters? Smells something fishy. Who will bring the cat out? Such a nice politician and labour leader. May his soul rest in peace.

By Thondan
2/21/2010 4:38:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக