ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

மத்திய அமைச்சரவை செயலர் கன்னியாகுமரி வருகைகன்னியாகுமரி, பிப். 20: மத்திய அமைச்சரவை செயலர் சந்திரசேகரன் சனிக்கிழமை கன்னியாகுமரி வந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் அரசு விருந்தினர் மாளிகை வந்த அவரை, மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், நாகர்கோவில் கோட்டாட்சியர் நடராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர். சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் தனி படகு மூலம் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றைப் பார்த்தார். இதையடுத்து, சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசித்தார். ஞாயிற்றுக்கிழமை காலை விவேகானந்தகேந்திர கடற்கரையில் சூரிய உதயம் பார்த்துவிட்டு மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட்ட பின்னர் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் தில்லி செல்கிறார்.
கருத்துக்கள்

தனிப்பட்ட முறையில் சுற்றலாவாக வந்ததாககத்தான் உள்ளது. இத்தகைய செய்திகளை வெளியிடலாமா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/21/2010 5:24:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக