கொழும்பு, நவ. 14: இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண வேண்டுமென்று இலங்கை அரசிடம் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு "திடீர்' பயணம் மேற்கொண்டுள்ளார். கொழும்பில் சனிக்கிழமை, இலங்கை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் நினைவு உரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது:
இலங்கையில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்னையில் அனைவருக்கும் நன்மை தரும் வகையில் அரசியல் ரீதியில் தீர்வுகாண வேண்டும். இதில் எந்த ஒரு பிரிவினரும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது. மத, இன வேறுபாடு எந்த இடத்திலும் தலை தூக்கக் கூடாது.
இலங்கையில் போரில் ராணுவம் வெற்றி பெற்றிருந்தாலும், அரசியல் ரீதியாக பிரச்னைக்கு தீர்வுகாண்பதே மிகப்பெரிய வெற்றியாக அமையும். அரசியல் சாசன சட்டத்தின் கீழ் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். அதிகாரப் பகிர்வும், சம அந்தஸ்து மற்றும் சம உரிமை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.
சட்டம், சமுக நீதி, மதச்சார்பின்மை, பத்திரிகை சுதந்திரம் போன்றவை நிலைநாட்டப்பட வேண்டும். நாட்டின் இறையாண்மைக்கு உள்பட்டு அனைவருக்கும் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்று அவர் பேசினார்.
இலங்கை பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் குறைந்து வருகிறது. வர்த்தக பற்றாக்குறை இடைவெளியும் குறைந்துள்ளது என்றும் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இலங்கையில் விரைவில் நாடாளுமன்றம் மற்றும் அதிபர் தேர்தல் நடத்தப்பட உள்ளது. ராஜபட்ச இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முப்படைகளின் தளபதி பதவியிலிருந்து விலகியுள்ள சரத் பொன்சேகா போட்டியிடுவார் என்று தெரிகிறது.
இந்நிலையில் ராஜபட்ச விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த அக்டோபர் 15-ம் தேதி இந்தியப் படை ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருந்தது என்று பொன்சேகா தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் பிரணாப் முகர்ஜி, இலங்கைக்கு சென்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
கொலைகாரகக் காங்கிரசிற்கு மனச்சான்று உள்ளது. எனவேதான் தமிழ் ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது இலங்கைக்குச் செல்ல மறுத்தது. தானே தூண்டிவிட்டு எப்படி தடுக்கச் சொல்வது போல் நடிப்பது என்ற மனச்சானறே காரணம். இப்பொழுதும் சென்றுள்ள காரணம் தமிழர்நலன் மீது காட்டும் பரிவன்று. சிங்கள வெறியர்களிடையே ஏற்பட்டுள்ள பிளவால் தன்னுடைய சதித்திட்டங்கள் வெளியே தெரியக்கூடாதே என்ற அக்கறையால் ஒற்றமைப்படுத்த அல்லது தேர்தல் வெற்றிக்குப் பின் யாராக இருந்தாலும் உதவுவதற்குத் தன்னைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்று பேரம பேச. இந்திய இறையாண்மையைக் காப்பற்ற வக்கில்லாமல் அண்டை நாடுகளுக்கு எல்லைப்புறத்தைக் காவு கொடுக்கும் இந்தியம் தமிழ் ஈழ இறையாண்மையை நசுக்குவதற்கு என்னவெல்லாமோ முயல்கிறது. ஈழத தமிழரகள் அடிமை இந்தியத் தமிழர்கள் அல்லர். வென்று காட்டுவர். பின காங்கிரசிற்குத் தக்க பாடம் புகட்டுவர். வெல்க அவர்கள் முயற்சி! வெல்க தமிழ் ஈழம்! ஓங்குக ஈழ-இந்திய-உலக நட்புறவு! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
11/15/2009 2:37:00 AM
இதை நீங்கள் சாகும்வரை சொல்வீர்களா அல்லது தமிழர்கள் எல்லோரும் கொல்லப்படும்வரை சொல்வீர்களா?
11/15/2009 2:25:00 AM