வெள்ளி, 20 நவம்பர், 2009

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை
தமிழ் பாடத்தில் தூய தமிழில் வகுப்புசென்னை, நவ. 19: "தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் தமிழ் பாடத்தை தூய தமிழில் பிற மொழி கலப்பு இல்லாமல் எடுக்க வேண்டும்' என்று பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை) பணிபுரியும் ஆசிரியர்கள் இதைக் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழ் பாடத்தின்போது ஆங்கிலம் கலந்த தமிழில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் தமிழ் மொழியில் உள்ள தூய சொற்கள், வார்த்தைகள் மாணவர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது என்றும் தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் 5,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி வைத்துள்ளது. அதில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, தமிழ் பாடத்தின்போது ஆங்கிலம் மற்றும் பிற மொழி கலப்பு இல்லாமல் தூய தமிழில் வகுப்புகளை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதை தமிழ் ஆசிரியர்கள் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தூய தமிழ் சொற்களை கற்பதற்கு வழி செய்ய வேண்டும். இதன்மூலம் மாணவர்கள் புதிய தூய தமிழ் சொற்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி இயக்குநர் பெருமாள்சாமி உத்தரவின்பேரில், இந்தச் சுற்றறிக்கை வியாழக்கிழமை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துக்கள்

பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்குப் பாராட்டுகள். எத்தனை மொழிகளையும் வாய்ப்பிற்கேற்ப கற்கலாம். ஆனால், நம் மொழியைகப் பிழையறக் கற்பதற்கு வாய்ப்பு வேண்டும். அந்நல்வாய்ப்பினை ஏற்படுத்துவதற்காக அவருக்கும் தமிழக அரசிற்கும் பாராட்டுகள். இங்கே ஒருவர் தவறாக எழுதியுள்ளது போல் இந்தி நமது தேசிய மொழியன்று. குசராத்தியருக்குக் குசராத்தியும் மராத்தியருக்கு மராத்தியும் தெலுங்கருக்கும் தெலுங்கும் இவ்வாறு அவரவர்க்கு அவரவர் மொழியே தேசிய மொழியாவது போல் தமிழர்களின் தேசிய மொழி தமிழே என்பதைப் பாடங்கள் வழியாகவும் உணர்த்த வேண்டும். தமிழர்கள் எங்கு சந்தித்தாலும் ஆங்கிலத்தில் பேசும் வழக்கம் நிற்க வேண்டும். தமிழர்கள் தமிழே அறியாமல் இருப்பதைப் பெருமையாகக் கருதும் அவலமும் ஒழிய வேண்டும். தமிழில் எழுதத் தெரியாமல் அடுத்த மொழிக்கு வால் பிடிப்போருக்கு மொழிக் கல்வி பற்றி எவ்வகைக் கருத்தும் தெரிவிக்க உரிமை இல்லை என்பதையும் உணர வேண்டும். மீண்டும் உரியவர்களுக்குப் பாராட்டுகள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/20/2009 2:30:00 AM

SIR I RIGHT NOW WORKING IN A FOREIGN COUNTRY ALL INDIANS SPEAKINGS THEIR MOTHER TONGUG AND HINDHI BUT,THAMIL CITIZONS NOT SPEAKS HINDI.SO WE WERE LTITLE BITFAR AWAY FROM OUR BROTHER INDIANS.SO INCLUDING TAMIL TEACH HINDHI.HINDHI IS NATIONAL LANGAGE OF INDIA,EVERYBODY SHOULD KNOW HINDHI ALSO.

By chandrasekar
11/20/2009 1:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக