ஞாயிறு, 15 நவம்பர், 2009

1.45 லட்சம் ஈழத் தமிழர்கள் மறுகுடியமர்த்தல்: இலங்கை அரசு



கொழும்பு, நவ. 14: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்களில் இதுவரை 1.45 லட்சம் பேர் அவர்களது சொந்த ஊர்களிலேயே மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடிகளை முற்றிலும் நீக்கி, ஒழுங்கான கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதியை ஏற்படுத்திய பின்னரே ஈழத்தமிழர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை மற்றும் மனித உரிமை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
அரசு தீவிரம்: போரினால் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தஞ்சமடைந்த ஈழத்தமிழ் மக்களை அவர்களது சொந்த ஊர்களிலேயே குடியமர்த்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த வாரத்தில் மட்டும் 9,860 பேர் அவர்களது சொந்த ஊர்களில் மறுகுடியமர்த்தப்பட்டுள்ளனர்.
தற்போது வவுனியாவில் உள்ள முகாமில் 1,32,748 பேரும், யாழ்ப்பாண முகாமில் 3,373 பேரும், திரிகோணமலை முகாமில் 2,970 பேரும், மன்னார் முகாமில் 970 பேரும் உள்ளனர். இதுதவிர, இலங்கையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,100 ஈழத்தமிழர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இவர்கள் அனைவரும் எவ்வளவு விரைவில் முடியுமே அவ்வளவு விரைவில் அவர்களது சொந்த ஊர்களில் குடியமர்த்தப்படுவார்கள்.
ஈழத்தமிழர்களை மறுகுடியமர்த்தும் அதேசமயம் அவர்களுக்கு தரமான வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பதிலும் அரசு உரிய கவனம் செலுத்தி வருகிறது என்றும் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

கருத்துக்கள்

கண்ணி வெடிகளை அகற்ற 6 மாதம் ஆகும்; 1 ஆண்டு ஆகும் எனக் கூறிவந்தவர்கள் அதற்குள் அகற்றி விட்டார்களாமாம். இனிக்கவலை இல்லை. வதை முகாம் இடமாற்றம் செய்து பொய்க் கணக்ககைப் பரப்பியாயிற்று. எஞ்சிய தமிழர்களை எப்படி வதைத்துத் தொலைத்தாலும் குடியமர்த்திய பின்னர் என்ன ஆனார்கள் என்று தெரியாது என்ற தப்பிக்கலாம். கடவுளே! நீ இருக்கின்றாயா? இல்லையா? நீ இல்லை யென்றால் உன்னை நம்பிப் பயன் இல்லை. இரு்க்கின்றாய் என்றால் இருந்தும் உதவாத ஈவிரக்கமற்ற உன்னை நம்பிப் பயன் இலலை.இந்திய - சிங்களக் கூட்டுச் சதியில் இருந்து எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களாவது பிழைக்க அறிவாயுதமே துணை! தமிழகத் தலைவர்களே பகை! சிறிதளவுகூடத் தமிழ்நாட்டவரகள் மீது நம்பிக்கை வைக்காமல் புலம் பெயர்ந்த தமிழர்கள் துணையுடனும் உலக மனித நேய ஆர்வலரக்ள் ஒத்துழைப்புடனும் சொந்த முயற்சியில் இறங்கி வெற்றி காண்க! தவறான நம்பிக்கையால் இதுவரை இழந்த உயிர்கள் போதும்! இனியேனும் எஞ்சிய தலைமுறையினரை வாழ வையுங்கள். வெல்க தமிழ் ஈழம்! வளர்க தமிழ் ஈழ - இந்திய - உலக நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/15/2009 2:53:00 AM

5.50000 லட்சம் மக்களிள் 1.45 லட்சம் குடியமர்த்தப்பட்தா அதுவும் உண்னம தெரியவில்னல மிச்சம்.4.5000 லட்சம் மக்கள் என்கே???????....ஆண்டவா

By உசாந்தன்
11/15/2009 1:09:00 AM

5.50 லட்சம் மக்களிள் 1.45 லட்சம் குடியமர்த்தப்பட்தா அதுவும் உண்னம தெரியவில்னல மிச்சம்.4.5000 லட்சம் மக்கள் என்கே???????....ஆண்டவா

By usanthan
11/15/2009 1:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக