உடுமலை: உடுமலை அருகே நடுப்பாகத்தில் வெட்டப்பட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு, தண்டில் குலை தள்ளியுள்ளது அதிசய வாழை மரம்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள சிந்திலுப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது வீட்டுத் தோட்டத்தில் சில ஆண்டுகளாக பூவன் ரக வாழைகளை வளர்த்து வருகிறார். பக்க கன்றுகள் வளர்ந்து அறுவடைக்கு தயாரானவுடன், மற்றவற்றை அவ்வப்போது வெட்டி அழித்துள்ளார். மூன்று மாதத்திற்கு முன், வாழைக் கன்றுகள் அதிகளவு வளர்ந்துள்ளதை பார்த்து, அதில் ஒரு வளர்ந்த மரத்தை நடுப்பாகத்தில் வெட்டியுள்ளார். வெட்டியும் மரம் கருகாமல் இருந்துள்ளது. சில நாட்களுக்கு முன், பாதியாக இருந்த மரத்தின் நடுப்பகுதியிலிருந்து வாழைப்பூ தெரிந்துள்ளது.
சில நாட்களில் தண்டிலிருந்து வாழைக் குலை வளரத் துவங்கியுள்ளது. குறுகிய நாட்களில் வழக்கமான வாழைக் குலை தள்ளி காய்கள் முதிர்ந்து வருகிறது. வழக்கத்திற்கு மாறாக நிலத்தை நோக்கி வளர வேண்டிய வாழைத்தார், வெட்டப்பட்ட பகுதியில் இருந்து வானத்தைப் பார்த்து வளர்ந்து வருகிறது. வாழை இலைகள் இல்லாமல், உயிர் விட வேண்டிய வாழைக்கன்று வாழைப்பழங்களைத் தருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக