சனி, 21 நவம்பர், 2009

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி விரைவில் போராட்டம்: ராமதாஸ்



சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் சென்னை மாவட்ட மாநாட்டில் பேசுகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகிறார். உடன் பாமக த
சென்னை, நவ.20: "வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும்' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் சென்னை மாவட்ட மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு பேரவையின் தலைவர் கே. பாலு தலைமை வகித்தார். மாநாட்டில் ராமதாஸ் பேசியதாவது: தமிழகத்தில் தனிப்பெரும் சமூகமாக வன்னியர் சமூகம் உள்ளது. ஆனால் வன்னியர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கிடைக்காதவரை இந்த சமூகம் முன்னேறாது. எனவே, வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும். சென்னை உயர் நீதிமன்றம் தொடங்கப்பட்டு 135 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை 4 வன்னியர்கள் மட்டுமே நீதிபதிகளாக நேரடி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் பதவி உயர்வு மூலம் நீதிபதிகளானார்கள். இன்றைய சூழலில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 5 பேராவது உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும். ஆனால் போராடாமல் இது கிடைக்காது. எனவே வன்னிய சமூகத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கருப்பு அங்கிகளோடு, சென்னை நகர வீதிகளில் இறங்கி போராட தயாராக வேண்டும். 5 வன்னியர்களை நீதிபதிகளாக நியமிக்கும் வரை நமது போராட்டம் ஓயக்கூடாது. தடை விதித்தால், தடையை மீறிப் போராடி சிறை செல்வோம். தமிழகத்தில் உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார் ராமதாஸ். மாநாட்டில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, வழக்கறிஞர்கள் ஆர்.ஜி. அண்ணாமலை, பி. தாமோதரன் உள்ளிட்டோர் பேசினர்.
கருத்துக்கள்

சாதி வெறி பிடித்த வன்னியப் போக்கிலிருந்து மாறித் தமிழ் நலப் போராட்டங்களில் ஈடுபட்டஇராமதாசு தேர்தல் தோல்விக்காக மீ்ண்டும் பாதைமாறிச் சாதிக்காகக் கொடி பிடிப்பது அவருக்கும் நல்லதல்ல; தமிழ் நலத்திற்கும் நல்லதல்ல.என்னதான் பெருமப்பாலான மக்களுக்குச சாதிப்பற்று இருப்பினும் சாதி அரசியலில் இருப்பவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்பதை அவர் உணர வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/21/2009 2:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக