செவ்வாய், 4 டிசம்பர், 2012

திருக்குறள் ஆய்வுத் தேசியக் கருத்தரங்கம் - அழைப்பு


 From: M.K. Kovaimani <paamozhi@yahoo.co.in>
Subject: Fw: திருக்குறள் பதிப்பின் 200ஆம் ஆண்டு ஆய்வுத் தேசியக் கருத்தரங்கம் - அழைப்பும் சுற்றறிக்கையும்

அன்புடையீர் வணக்கம்.
திருக்குறள் பதிப்பின் 200ஆம் ஆண்டு ஆய்வுத் தேசியக் கருத்தரங்கம் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும் கோவை கௌமார மடாலயமும் இணைந்து வரும் 27,28,29.04.2013ஆம் நாள்களில் மடாலய வளாகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இதில் தாங்கள் கட்டுரை வழங்கி சிறப்பிக்க வேண்டுகிறோம்.  இதற்குரிய விதிமுறைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்புகளில் உள்ளன.  உடன் பதிவு செய்து தலைப்பினை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.  பதிவுப் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள அலைபேசி எண்ணுக்கு பதிலாக 9042511390 என்ற எண்ணைப் பயன்படுத்தவும்.
நன்றி
முனைவர் மோ.கோ.கோவைமணி
துறைத்தலைவர்
ஓலைச்சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613010
அலைபேசி-9042511390

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக