ஞாயிறு, 2 டிசம்பர், 2012

தமிழகச் சட்டமன்ற வைரவிழா ஒளிப்படக் கண்காட்சி... - எல்.முருகராசு

தமிழக ச் சட்டமன்ற வைரவிழா ஒளிப்பட க் கண்காட்சி... - எல்.முருகராசு
 
தமிழக சட்டமன்ற பேரவையின் வைரவிழா நடந்து முடிந்திட்ட நிலையில், அதன் நினைவுகளாக வலம் வருவது, வைரவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற புகைப்படக் கண்காட்சிதான். முதல்வர் ஜெயலலிதாவால் திறந்துவைக்கப்பட்ட இந்த புகைப்பட கண்காட்சியில் அரிதான பல புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

பெருமைமிகு தமிழக சட்டமன்ற பேரவையின் வரலாற்றை சொல்லும் விதத்தில் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. எளிமையின் சின்னமான பெருந்தலைவர் காமராஜர், மக்கள் திலகமான எம்.ஜி.ஆர் ஆகியோர் முதல்வராக பதவி ஏற்ற படங்களுடன், முதல்வர் ஜெயலலிதா முதன் முறையாக பதவி ஏற்றுக்கொண்டது போன்ற படங்களும் அழகுற இடம் பெற்றிருந்தன. இவற்றுடன் பேரவையில் அண்ணாதுரை பேசும் காட்சியும் இடம் பெற்றிருந்தது.
அறுபது ஆண்டு கால பேரவையில் அன்று முதல் இன்று வரையிலான முதல் அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர்களின் படங்களும் வரிசைப்படி இடம் பெற்றிருந்தது.

கம்பீரம் குன்றாமல் காணப்படும் தலைமைச் செயலக கட்டிடத்தின் பழைய படமும் பல்வேறு கோணங்களில் இடம் பெற்றுள்ளது. பழைய பேரவை கட்டிடத்தின் அருகில் கண்ணுக்கு எட்டியதூரம் வரை கடல்தான். ஆனால் இன்று நிறைய கட்டிடங்கள் வந்துவிட்டன. பேரவையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள் தொடர்பான படங்களும், வந்து சிறப்பித்த பல்வேறு தலைவர்கள் பற்றிய படங்களும் இடம் பெற்றுள்ளன.
பத்திரிகையில் பிரசுரமான படங்களின் பேப்பர் கட்டிங்குகள் நிறைய இடங்களில் இடம் பெற்றிருந்தன.

அறுபது ஆண்டு கால பேரவை வரலாறை தொகுத்துள்ள இந்த புகைப்பட கண்காட்சி ஒரு அபூர்வமான படங்களின் தொகுப்பைக் கொண்ட பெருமையான கண்காட்சி இங்கே உங்கள் பார்வைக்கு பரிமாறப்படுகிறது.
முக்கிய குறிப்பு: கண்காட்சியில் இடம் பெற்றிருந்த முக்கிய படங்களை பார்க்க சிவப்பு பட்டையினுள் உள்ள போட்டோ கேலரி பகுதியை "கிளிக்' செய்யவும்.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக