புதன், 5 டிசம்பர், 2012

நார்வேயில் ஆந்திர வாழ்விணையருக்கு ஒன்றரை ஆண்டு ச் சிறை

மகனைத் தண்டித்த பெற்றோர்க்குத் தண்டனை  சரிதான். ஆனால்,  பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றொழிக்கும் துணை நிற்பவர்களுக்கும் என்ன  தண்டனை? யார் வழங்குவது? நார்வே ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக மனித நேய அடிப்படையில் குரல் கொடுத்து இனப்படுகொலையாளர்களுக்குத் தண்டனை வாங்கித் தரலாமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நார்வேயில் ஆந்திர த் தம்பதிக்கு ஒன்றரை ஆண்டு ச் சிறை


ஆசுலோ :நார்வே நாட்டில், மகனை கண்டித்ததற்காக, கைது செய்யப்பட்ட, சிறுவனின் தந்தைக்கு , ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையும், தாய்க்கு 15 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்தவர் சந்திரசேகர்; நார்வே நாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவரது மனைவி அனுபமா. இவர்களது ஏழு வயது மகன், ஆஸ்லோ நகர் பள்ளியில் படிக்கிறான். சமீபத்தில் இவர்களது மகன், பள்ளியில், பேன்ட்டிலேயே, சிறுநீர் கழித்து ஈரமாக்கிக் கொண்டான். இதற்காக சந்திரசேகர், மகனை கண்டித்துள்ளார். மறுநாள், பள்ளியிலிருந்து ஒரு பொம்மையை எடுத்து வந்து விட்டான். இதனால் கோபமடைந்த சந்திரசேகர், "இது போன்று செய்தால், உன்னை, ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பி விடுவேன்' என, மிரட்டியுள்ளார்.இந்த விஷயத்தை சிறுவன், தன் பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளான். சிறுவனை, அவனது பெற்றோர் தொடர்ந்து கொடுமைப்படுத்துவதாக ஆசிரியை, போலீசில் புகார் செய்துள்ளார்.
சமீபத்தில், இந்தியா வந்த சந்திரசேகர் தம்பதியர், மகனை, ஐதராபாத்தில், உறவினர் வீட்டில் விட்டு சென்று விட்டனர்.நார்வே திரும்பிய, சந்திரசேகரையும், அவரது மனைவியையும், அந்நாட்டு, போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து நார்வே, போலீஸ் அதிகாரி குர்த் லிர் குறிப்பிடுகையில், ""சிறுவனின் உடலில், சூடு வைத்த காயமும், பெல்ட்டால் அடித்த தழும்பும் உள்ளது. இதை வைத்து பார்க்கும் போது, சந்திரசேகர் தம்பதியர், மகனை அதிகமாகவே கொடுமைப்படுத்தியது தெரியவந்துள்ளது. எனவே, தான் அவர்களை கைது செய்துள்ளோம்,'' என்றார்.

ஆஸ்லோ மாவட்ட கோர்ட்டில், ஆஜரான அரசு தரப்பு வக்கீல்கள், சந்திரசேகருக்கு, 18 மாத சிறை தண்டனையும், அனுபமாவுக்கு, 15 மாத சிறை தண்டனையும் அளிக்கும் படி பரிந்துரைத்தனர். இதனை ஏற்ற நீதிபதிகள், அரசு தரப்பினர் கோரிய தண்டனையை அளித்து தீர்ப்பு கூறினர்.

ஆஸ்லோ மாவட்ட கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்வதற்கு, தூதரகத்தின் சார்பில், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக