மருத்துவர் தேவாம்பிகை: ஒரு பெண், கருவுற்றிருப்பது உறுதியாகி விட்ட தருணம் முதல், குழந்தையை பற்றி, கனவு காண ஆரம்பித்து விடுவாள்.கருவுற்றது உறுதியாகும் போதே, அவரது ரத்தப் பிரிவு என்ன என்று பரிசோதிக்க வேண்டும்.பெண்ணின் ரத்தப் பிரிவு, ஆர்.எச் - நெகடிவ் ஆகவும், அவர் கணவரின் ரத்தப் பிரிவு, ஆர்.எச் - பாசிடிவ் ஆகவும் இருந்தால், தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். சில நேரங்களில், தாயே, தன் குழந்தைக்கு எமனாகி விடுகிற அபாயமும் இருக்கிறது.உலக மக்கள் தொகையில், 15 சதவீதம் பேருக்கு மட்டுமே, ஆர்.எச் - நெகடிவ் இருப்பதாக, புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், இந்தப் பிரச்னையை சமாளிக்கவும் வழி செய்திருக்கிறது. அம்மாவைப் போல, நெகடிவ் ஆக இருந்து விட்டால் பிரச்னை இல்லை. அப்பாவின் ரத்தப் பிரிவை, குழந்தை கொண்டிருந்தால் சிக்கல் ஏற்படும். வயிற்றில் சிசு இருக்கும் போது, தாயின் ரத்தத்தில், சம்பந்தமே இல்லாமல், "ஆன்டிபாடி' உருவாகி விடுகிறது.எனினும், முதன் முதலாகப் பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு, வாய்ப்புகள் மிகக் குறைவு தான். அடுத்த குழந்தைக்கு, ஆன்டிபாடியே எமனாகி விடும் அபாயம் அதிகம்.தாயின் வயிற்றுக்குள்ளே இருக்கும் போதே, குழந்தைக்கு ரத்தச் சோகை, கல்லீரல், கணையத்தில் வீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.கருவுற்ற பெண், வயிற்றில் வளரும் குழந்தையையும் முன்னெச்சரிக்கையோடு கவனித்து, ரத்தப் பரிசோதனை செய்து, ரத்தப் பிரிவைக் கண்டுபிடித்து, அது நெகடிவ் வகை என்றால், அவசியமானால், குழந்தைக்கு ரத்தம் செலுத்தவும் முடியும். அந்த அளவுக்கு மருத்துவம் முன்னேறி விட்டதோடு, பிரசவ காலத்தில் தடுப்பு ஊசிபோட்டு, அடுத்த குழந்தையை சுகப்பிரசவம் ஆக்கவும் முடிகிறது. ஆர்.எச் - நெகடிவ் ரத்தப் பிரிவு கொண்ட, எல்லா பெண்களும் மிரளத் தேவையில் லை; ஆனால், பிரசவ காலத்தில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
புதன், 5 டிசம்பர், 2012
குருதி எதிர்மமா? மிரளத் தேவையில்லை

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக