வெள்ளி, 7 டிசம்பர், 2012

துரத்திய தோல்வி வென்ற மன உறுதி

சொல்கிறார்கள்

"துரத்திய தோல்வி  வென்ற மன உறுதி!'
"பேப்பர் கப்' தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தேவகி: பேராசிரியை வேலை தான், என் கனவு. அரசு வேலையில் உள்ள மாப்பிள்ளை என்ப தால், டிகிரி முடித்ததும், திருமணம் செய்து விட்டனர். கொஞ்ச நாளிலேயே, "சட்டி, பானை சுரண்டுவதிலேயே என் வாழ்க்கை கழியப் போகுதா... பணத்திற்கு கடைசி வரை, உங்க கையை தான் எதிர்பார்க்க வேண் டுமா?' என, கணவரிடம் ஆதங்கப்பட்டேன். என் எண்ணத்தை புரிந்து கொண்ட அவர், சுய தொழில் துவங்க ஆதரவளித்தார். ஐஸ் கிரீம் பார்லர் துவங்கினேன். கோடையில் ஓரளவு ஓட்டம் இருக்கும்; பின், மந்தமாகி விடும். ஒரு கட்டத்தில் என் நிலைமை கணவருக்கு தெரிய வர, குத்திக் காட்டி பேசாமல், அனுசரணையாக இருந்தார். அப்போது, குடும்ப நண்பர் ஒருவர், என் பேச்சுத் திறமையைப் பார்த்து, "எல்.ஐ.சி., முகவராகலாமே' என, யோசனை கூறினார். ஏற்கனவே சந்தித்த தோல்வியால் நான் தயங்க, என் கணவர் பணம் கட்டி, என்னை தேர்வெழுத வைத்தார்; தேர்வில் பாஸ் ஆகிவிட்டேன். ஆரம்பத்தில் தடுமாறினாலும், ஐந்து ஆண்டில், மாதம், 40 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு, தேறி விட்டேன். அடுத்து புதிதாக ஏதாவது தொழில் செய்யலாம் என, யோசித்த போது, என் கணவர், பணம் தர மறுத்து விட்டார். மனம் சோர்ந்து போகாமல், "பேப்பர் கப்' தொழில் செய்ய முடி வெடுத்தேன். ஒரே ஆளாக, "பேப்பர் கப்' தொழில் செய்யலாம் என, புரிந்து கொண்டேன். வங்கியில் கடன் வாங்கி, ஏழு லட்சம் ரூபாய் முதலீட்டில், தொழில் துவங்கினேன். தொழில் துவங்கிய போது, கேரளாவில் இருந்து வந்த, ஆர்டருக்காக, 50 ஆயிரம் கப்களை தயாரித்து, டெலிவரிக்காக வைத்திருந்தேன். சில பிரச்னையால், பொருட்கள் தேக்கம் அடைய, சோர்ந்து போனேன். சில நாளில் அந்த பிரச்னை தீர்ந்து, தயாரித்த கப்கள் அனைத்தும் விற்பனையாகின; தொழிலும் வளர்ந்தது. இப்போது, பெரிய நிறுவனங்களை நானே தொடர்பு கொண்டு, என் தயாரிப்பு பற்றி சொல்கிறேன்; "ஆர்டர்' வாங்குகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக