ஞாயிறு, 2 டிசம்பர், 2012

"வறட்சியிலும்பணம் ஈட்டும் சவுக்கு!'

 


"வறட்சியிலும்பணம் ஈட்டும் சவுக்கு!'
பத்மஸ்ரீ விருது பெற்ற விவசாயி வெங்கடபதி: என் சொந்த ஊர், புதுவை மாநிலத்திலுள்ள கூடப்பாக்கம். "கேசுரினா ஜிங்குனியானா' எனும் சவுக்கு வகையில், ஒரு ரகத்தை எடுத்து, கல்பாக்கம் அணு மின் நிலையத்தில், கதிர்வீச்சு செய்து, புதிய வகை, ஹைபிரிட் சவுக்கை உருவாக்கினேன்.கதிர்வீச்சு செய்து வளர்த்த சவுக்கு, நன்கு பலன் கொடுத்தது. அதிலிருந்து இனவிருத்தி செய்ததோடு, சவுக்கின் இலைகளில் கன்றுகளை உருவாக்க ஆரம்பித்தேன். இந்த வகை சவுக்கை பொறுத்தவரைக்கும், பூவும் பூக்காது; காயும் காய்க்காது.சவுக்கு பயிரிடுவதற்கு முன், மண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

நான் கண்டுபிடித்த புதிய வகை இனம், 50 ஆண்டுகளுக்கு மேல் பலன் தரும். பயிர் செய்து, ஐந்து ஆண்டுகளுக்கு பின், அறுவடை செய்யும் போது, பூமிக்கு மேல், 0.5 அடியை விட்டுவிட்டு, வாளால் அறுத்து விடுவேன். அறுத்த மரத்திலிருந்து வரும் துளிர்களில், நல்ல கிளையைச் தேர்ந்தெடுத்து, மற்ற துளிர்களை அப்புறப்படுத்தி விடலாம். ஐந்து ஆண்டுகள் சென்ற பின், மீண்டும் அறுவடை செய்யலாம்.

சாதாரண நாட்டு சவுக்கு மரங்கள், புயல், மழைக் காலங்களில் அடியோடு சாய்ந்து அழிந்து விடும். ஆனால், வீரிய சவுக்கு, கடும் வறட்சியிலும் வளரக் கூடியவை. தரிசு நிலங்களில் நல்ல வருவாய் கிடைக்க வழிவகுக்கும்.ஒரு ஏக்கருக்கு, 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்தால், 200 டன் மகசூல் கிடைக்கும். 1 டன் சவுக்கு, 2,500 ரூபாய்க்கு சந்தையில் விற்கப்படுகிறது. ஐந்தாண்டு முடிவில், குறைந்தபட்சம், 1.50 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.கடும் வறட்சியிலும் அதிக லாபம் கிடைக்கும் வகையில், ஹைபிரிட் சவுக்கு வகையைக் கண்டுபிடித்து, வெற்றிகரமாக பயிர் செய்ததற்காக, கடந்த ஆண்டு, அரசு, பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவித்தது. ஹைபிரிட் சவுக்கு கன்றுகளை வளர்த்து, விவசாயிகளுக்கு, ஒரு கன்று, 3 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன்.தொடர்புக்கு: 94432 26611

"வீல்சேரில்பயணிக்கும்எங்கள் கனவு!'உடல் இயக்கம் குறைந்தாலும், மனம் தளராத சகோதரிகள், இயல்இசை வல்லபி, வானவன் மாதேவி:எங்கள் சொந்த ஊர், சேலத்திலுள்ள சிவதாபுரம்.மனித உடலில், பல லட்சம் செல்கள் இறந்து, புது செல்கள் பிறக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும்.ஆனால், "மஸ்குலர் டிஸ்ட்ரபி' என்னும், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடலிலுள்ள செல்கள் இறக்கும்; மீண்டும் பிறக்காது. இதனால், ஒவ்வொரு உறுப்பும் செயலற்று போகும்.எங்கள் இரண்டு பேருக்கும், பத்து வயது இருக்கும் போது தான், நோய்க்கான அறிகுறி தெரிய ஆரம்பித்தது.

வேகமாக நடக்க முடியாது; மெதுவாக நடந்தாலும், அடிக்கடி கீழே விழுந்து விடுவோம்; கனமான பொருட்களை தூக்க முடியாது. இப்படி கொஞ்சமாக இருந்த பிரச்னை, மெல்ல வளர்ந்து, இன்று வீல்சேரில் உட்கார வைத்திருக்கிறது. தனியா டியூஷன் படிச்சு, பிளஸ் 2 முடித்து, தொலைதூரக் கல்வியில், டி.சி.ஏ., செய்தோம். ஐ.ஏ.எஸ்., இன்ஜினியரிங் படிக்கணும் என்பது, எங்களோட கனவாக இருந்தது.

இப்ப எங்களோட பொழுதுபோக்கு, புத்தக வாசிப்பு தான்.இந்நோயால் பாதிக்கப்பட்ட, ஏழைக் குழந்தைகளின் நிலை, ரொம்ப பரிதாபம். அன்றாடம் கூலி வேலைக்குச் செல்பவர்களின் குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவே, ஒரு டிரஸ்ட் துவங்க வேண்டும் என, யோசித்தோம். எங்கள் பெற்றோரும், முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். டிரஸ்ட் கட்டுவதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டோம்; 2009ம் ஆண்டு, "ஆதவ் டிரஸ்ட்' ஆரம்பித்தோம்.

இந்த டிரஸ்ட் மூலம், நோயாளிகளுக்கான விடுதி மற்றும் நோயை குறித்த ஆராய்ச்சி மையமும் கட்டவேண்டும் என்பது, எங்களுடைய மற்றொரு முயற்சி.
எங்களை ஆதரித்து, சில நல்ல உள்ளங்கள் நன்கொடை அளித்தனர்; அதை வைத்து, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, கம்ப்யூட்டர் சென்டரும், நூலகமும் வைத்திருக்கோம். மொபைல்: 99763 99403

2 கருத்துகள்:

  1. பத்மஸ்ரீ விருது பெற்ற விவசாயி வெங்கடபதி: என் சொந்த ஊர், புதுவை மாநிலத்திலுள்ள கூடப்பாக்கம். "கேசுரினா ஜிங்குனியானா' எனும் சவுக்கு வகையில், ஒரு ரகத்தை எடுத்து, கல்பாக்கம் அணு மின் நிலையத்தில், கதிர்வீச்சு செய்து, புதிய வகை, ஹைபிரிட் சவுக்கை உருவாக்கினேன்.

    வணக்கம் ஐயா... கதிர்வீச்சு செய்து உருவாக்கியிருந்தால் அந்தச் சவுக்கிலிருந்து கதிர்வீச்சு வராதா? அது மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா?
    மரபணு மாற்றத்தை நாம் எதிர்த்துக் கொண்டிருக்கின்றோம்... அப்படியிருக்கும்போது மரபணு மாற்றத்தில் உருவான சவுக்கு எப்படி சரியானதாக இருக்க முடியும்? தயவு செய்து எனக்கு விளக்கம் தேவை....

    SSDAVID63@YAHOO.COM

    பதிலளிநீக்கு
  2. இயல்இசை வல்லபி, வானவன் மாதேவி: இவர்கனை எனக்குத் தெரியும் சேலம் சென்று நேரில் சந்தித்துப் பேசியிருக்கின்றேன்... இவர்களுக்கு உதவும் நோக்கோடு சில திட்டங்களை முன்வைத்தேன்... ஆனால் சந்தர்ப்பம் ஒத்துழைக்கவில்லை...

    மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றார்கள்...

    நல்ல நிலையில் இருப்பவர்களே செய்யத் தயங்கும்போது செய்யாதபோது.. இவர்கள் மிகவும் சிறப்பாகவே செயல்படுகின்றனர்..

    பதிலளிநீக்கு