வியாழன், 20 ஆகஸ்ட், 2026

இலக்குவனார் திருக்குறள் விருது : தகுதியானவர்கள் தகவல் தரலாம்




திருக்குறள் குறித்த  கட்டுரைகள், நூற்கள், உரைகள், சொற்பொழிவுகள், அமைப்புகள், போட்டிகள், காணொளிகள், இணையத்தளங்கள், வலைப்பூக்கள், வகுப்புகள், மொழி பெயர்ப்புகள் முதலான பல வகையிலும் பரப்பி வரும் திருக்குறள் ஆர்வலர்களுக்கு இலக்குவனார் திருக்குறள் விருது வழங்கப் பெறும்.

1.) கட்டுரைகள், நூற்கள், உரைகள் 2.) சொற்பொழிவுகள், வகுப்புகள் 3.) இணையத் தளங்கள், வலைப்பூக்கள், இதழ்கள் 4.) மொழி பெயர்ப்புகள் 5.) அமைப்புகள், போட்டிகள், பிற வகைகள் ஆகிய ஒவ்வொரு பிரிவிலும் மும்மூன்று விருதுகள் வழங்கப் பெறும்.

மேலும், எல்லா வகையிலும் திருவள்ளுவர் புகழ் பரப்பிவரும் குறள்நெறியைப் போற்றி வரும் மூவருக்கு இலக்குவனார் திருக்குறள் வாணாள் அருவினை விருது வழங்கப் பெறும்.

தகுதியான பிறருக்குப் பாராட்டிதழ்கள் வழங்கப் பெறும்.

விருதிற்காகத் தொண்டாற்றவில்லை என எண்ணாமல், தகைமையாளர்கள் தங்கள் விவரங்களை அனுப்ப அன்புடன் வேண்டுகிறோம். திருக்குறள் செயற்பாட்டாளர்களை அறிந்த

பிறரும் பரிந்துரைக்கலாம்.

விருது பெற விழைவோர் thamizh.kazhakam@gmail.com மின்வரிக்கு

ஆவணி 17, 2057/ செட்டம்பர் 03, 2026 ஆம் நாளுக்குள் தங்கள் பெயர், முகவரி, மின்வரி, பேசி எண்கள் முதலிய விவரங்களைப் பதிவு செய்து கொள்ளவும்

தங்களின் திருக்குறட்பணி விவரங்களுடன் முழுமையான தகவல்களை ஐப்பசி 14, 2057 /  31.08.2026 ஆம் நாளுக்குள்

தெரிவிக்கவும்  வேண்டப்படுகின்றனர்.

வாழ்த்துகளுடன்

புதன், 19 ஆகஸ்ட், 2026

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 175 & 176 ; நூலரங்கம்: தமிழகத் தடங்கள்



தமிழே விழி!                                     தமிழா விழி!

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையா தார்.   (திருவள்ளுவர், திருக்குறள்,௬௱௫௰ – 650)

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

ஆளுமையர் உரை:

செயலர், திருவள்ளுவர் மா மன்றம்

தலைவர், நட்பு தமிழ் வட்டம்