சொல்கிறார்கள்
வழி தெரியாமல் தவிப்போருக்கு உதவுகிறோம்!
பயண வழிகாட்டியாக, இலவசமாக உதவி செய்து வரும், "ரூட்ஸ்' அமைப்பின் மேலாண்மை இயக்குனர் அஸ்வின் குமார் மற்றும் சி.இ.ஓ., பரத் சோமானி: பொது இடத்தில், சற்று நேரம் நின்றாலே, வழி தெரியாத பலர், நம்மிடம் வந்து வழி கேட்டு விசாரிப்பர். சரியான பயண வழிகாட்டுதல், விவரங்கள் இல்லாததே, பயணிகளின் பிரச்னைகளுக்கு காரணம் என தெளிந்து, கடந்த ஜூலையில், இச்சேவையை துவங்கினோம்.பயணத்திற்கான தகவல் வழங்க, வலைதளங்கள் பல இருந்தாலும், மக்கள் அனைவரும் இணையதளத்தை பயன்படுத்துவதில்லை. இணையதளத்தில் தேடி அறிந்து கொள்ள செலவிடும் நேரத்தை விட, தொலைபேசி அழைப்பு மூலம், தகவல் உடனடியாக கிடைப்பதால், நேரச் செலவும் குறைகிறது.தமிழகத்தின் எந்த நகரத்திற்கும் செல்ல பஸ், ரயில் போக்குவரத்து விவரங்களையும் அளிக்கிறோம். சென்னையில், எந்தப் பகுதிக்கு செல்ல வேண்டுமானாலும், 086959 59595 என்ற எண்ணில் அழைத்தால், பயணத்திற்கான வழிகாட்டுதலை உடனே பெறலாம். இருக்கும் இடத்திலிருந்து, இலக்கை அடைய உள்ள தூரம், பஸ் நிறுத்தம், பஸ் எண், வரும் நேரம், கட்டணம், சராசரி பயண நேரம் என, சகல விவரங்களும் அளிக்கப்படுகின்றன.தமிழகத்திலிருந்து, இந்தியாவின் பிற பகுதிகளுக்குச் செல்லவும், அங்கிருந்து தமிழகம் வரவும், ரயில், விமான வசதி குறித்த தகவல்களை வழங்குவதோடு, பயண முன்பதிவும் செய்து தருகிறோம். இவை அனைத்தையும், இலவசமாகவே வழங்கி வருகிறோம்.தற்போது, காலை, 5:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை உள்ள இச்சேவையை, 24 மணி நேரமும் வழங்குதல், சென்னையை அடுத்து, இந்தியாவின் மற்ற நகரங்களுக்கும் விரிவுப்படுத்துதல் ஆகியவையே, எங்கள் எதிர்காலத் திட்டம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக