தமிழகத்தில் நிலவி வரும்,
கடும் மின் வெட்டை
சமாளிக்கும் வகையில்,
தொழில்
முனைவோர், ஜெனரேட்டர்கள்
வாயிலாக கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ள வசதியாக, ஜெனரேட்டர்கள் மீதான, "வாட்' வரியை,
5 சதவீதமாக குறைத்து,
முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், மின் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையில்,
4,000 மெகாவாட் வரை இடைவெளி ஏற்பட்டதன்
காரணமாக, கடந்த
சில மாதங்களாக, சென்னையில், இரண்டு மணிநேரமும், மாநிலத்தின் மற்ற பகுதிகளில், 16 மணி நேரத்திற்கும்
மேலாகவும், மின்
தடை ஏற்பட்டு வருகிறது.
தொழில்கள் பாதிப்பு :
மின்தடையின்
காரணமாக, பள்ளி
மாணவர்கள், பொதுமக்கள்
கடுமையான இன்னலில் தவித்து
வருகின்றனர். ஏற்கனவே,
குறுவையை கைவிட்டு,
சம்பாவை காப்பாற்ற நினைக்கும் விவசாயிகளும், 12 மணிநேர மின்சாரத்தை
எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.தொழில்
வளர்ச்சியில் முன்னேறி வரும் தமிழகத்தில்,
மின் வெட்டு
காரணமாக, அனைத்து
தொழில்களும் பாதிக்கப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும்
சூழல் ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால்,
பொங்கலுக்கு
வழங்க வேண்டிய இலவச வேட்டி,
சேலை தயாரிக்கும் பணிகளும் பாதிப்படைந்துள்ளன.மிகப்பெரிய
நிறுவனங்கள், ஜெனரேட்டர்கள்
மூலம் ஓரளவிற்கு தங்கள்
மின் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் நிலையில்,
சிறு தொழில்களை நடத்தி
வரும் தொழில் முனைவோர்,
தங்கள் தொழிலுக்கு முழுக்கு போடும் நிலை ஏற்பட்டு விட்டது.மின்
திட்டங்கள் தாமதம்: திருப்பூரில், தொழிலாளர்கள், ஒரு லட்சம் பேர்
திரண்டு போராட்டம் நடத்தும் அளவிற்கு, மின் தட்டுப்பாடு தமிழகத்தில் நிலவி வருகிறது.
இப்பிரச்னையை போக்க, தமிழக
அரசு, மத்திய
அரசிடம் பலமுறை முறையிட்டும், டில்லி அரசு, திருப்பியளித்த மின்சாரத்தை கூட
தமிழகத்திற்கு தரவில்லை.தமிழகத்தில்
செல்படுத்தப்பட்டு வரும் மேட்டூர்,
வல்லூர் மற்றும்
வடசென்னை என, புதிய
அனல் மின் திட்டங்களும், தொழில்நுட்ப
கோளாறு, ஒப்புதல் கிடைக்காமை
உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தியை துவக்க காலதாமதமாகி வருகிறது.
முதல்வருடன் சந்திப்பு :
இந்நிலையில், நேற்று
காலை, தலைமைச்
செயலகத்தில், முதல்வர்
ஜெயலலிதாவை, தென்னிந்திய ஆலைகள்
சங்கம், கோவைமாவட்ட
சிறு தொழில்கள் சங்கம், காகிதம்
மற்றும் அட்டை ஆலைகள்
சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.அப்போது, தொழில் நிறுவனங்களின் தற்போதைய நிலை குறித்து
அவர்கள் தெரிவித்தனர். இந்த
சந்திப்பின் போது,
தொழில்துறை அமைச்சர் தங்கமணி,
தமிழ்நாடு மின்வாரிய
தலைவர் ஞானதேசிகன்,
நிதித்துறை செயலர் சண்முகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்
பங்@கற்றனர்.சந்திப்பின்
போது, மின்
உற்பத்திக்கு பயன்படும், "ஜென்செட்'கள் மீதான,
மதிப்பு கூட்டு வரியை குறைக்கவும், மாநில நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று, ஜென்செட்களை, தொழில்முனைவோர் வாங்கும் போது, அவர்கள் அளிக்க வேண்டிய பங்குத் தொகையை
குறைக்கவும் கேட்டுக் கொண்டனர்.மேலும், தொழிற்சாலைகளில், ஜென்செட்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும்
மின்சாரத்திற்கு, எரிபொருளாக
தேவைப்படும், பர்னஸ்
எண்ணெய் மற்றும்
டீசல் ஆகியவற்றிற்கு, மதிப்பு
கூட்டு வரியில் இருந்து விலக்களிக்கவும்
கோரிக்கை விடுத்தனர்.
97 கோடி
ரூபாய் வருவாய் இழப்பு :
Advertisement
இந்த கோரிக்கையை
பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, கடும்
மின் தடையை சமாளிக்கும் வகையில், தொழில் பிரிவினர், தாங்களே கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி
செய்து, அதன்
மூலம் உற்பத்தியை பெருக்கி, தொழிலாளர்களுக்கு
வேலைவாய்ப்பு வழங்கவும் சலுகைகளை
அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜென்செட்கள்
மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள, 14.5 சதவீதம் மதிப்பு
கூட்டு வரி, 5 சதவீதமாக குறைக்கப்படும்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் வாயிலாக,
கடன் பெற்று, ஜென்செட்கள்
வாங்கும் தொழில் முனைவோர், தற்போது
செலுத்த வேண்டிய, 20 சதவீதம்
பங்குத் தொகை, 10 சதவீதமாக
குறைக்கப்படும். ரூ.97 கோடி
செலவு : தொழிற்சாலைகளால், ஜென்செட்களில் பயன்படுத்தப்படும், பர்னஸ் எண்ணெய்க்கு, இந்தாண்டு, பிப்.,
1ம் தேதி முதல்,
செப்., 30ம்
தேதி வரை மதிப்புக் கூட்டு
வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த வரி விலக்கு, அக்.,
1ம் தேதியில்
இருந்து முன்தேதியிட்டு, அடுத்தாண்டு, மே,
31ம் தேதி வரை
தொடர்ந்து அளிக்கப்படும். இதனால், அரசுக்கு,
97 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக