வெள்ளி, 7 டிசம்பர், 2012

முதலையின் வாயில் காலைக் கொடுத்து மீண்ட அழகி

முதலையின் வாயில் காலைக் கொடுத்து 
முதலையின் வாயில் காலை கொடுத்து மீண்ட அழகி
மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் தாரா ஹாக்ஸ் (23). இவர் பார்க்க மிகவும் அழகாக இருப்பார். டு காங்க் பே என்ற சுற்றுலா தளத்துக்கு செல்லும் சொகுசு கப்பலில் பணியாளராக இருந்து வருகிறார். டு காங்க் பே சென்ற அவர் அங்குள்ள குளம் ஒன்றில் இறங்கி நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தார்.
 
அப்போது அங்கு திடீரென வந்த முதலை படுவேகமாக தாராவின் காலை கவ்விப் பிடித்தது. இதனால் அவர் அலறி துடித்தார். இருந்தும் முதலை அவரை விடவில்லை. காலை மெதுவாக வாய்க்குள் இழுக்க தொடங்கியது. இதைப் பார்த்து ஓடிவந்த தாராவின் நண்பர் ஆலன் முதலையின் வாயை பிளந்து காலை வெளியே எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.
 
இதையடுத்து முதலையின் கண்களில் சரமாரியாக அவர் குத்தினார். இதனால் நிலை குலைந்த முதலை வாயை திறந்து பின் வாங்கியது. உடனே ஆலனும், மற்றொருவரும் சேர்ந்து தாராவை காப்பாற்றினர். அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும் அவரது காலில் படுகாயம் ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக