என்கவுண்டர் கொலையில் நீதி விசாரணை தேவை: மார்க்சிஸ்ட் கோரிக்கை
First Published : 02 December 2012 03:59 PM IST
மதுரையில் இரு குற்றவாளிகள் என்கவுண்டரில்
கொல்லப்பட்டதற்கு நீதி விசாரணை தேவை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்தக் கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
சிவகங்கை மாவட்டத்தில் சில வாரங்களுக்கு முன்பு திருப்பாச்சேத்தி உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார். சமூக விரோதிகளுக்கு எதிராக நேர்மையாக செயல்பட்ட இந்த அதிகாரி படுகொலை செய்யப்பட்டது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேற்கண்ட படுகொலையில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரலும் எழுந்தது.
இப்பின்னணியில் ஆல்வின் சுதன் படுகொலையில் சம்மந்தப்பட்டதாக சிலர் கைது செயயப்பட்டுள்ளனர். அதில் பிரபு, பாரதி என்ற கைதிகள் மதுரை சிறையிலிருந்து சிவகங்கை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் போது காவல்துறை அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாகக் கூறி என்கவுன்டரில் கொல்லப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.
உதவி ஆய்வாளர் படுகொலையில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு தொடுத்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமே தவிர, மாறாக காவல் துறையே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே இந்த என்கவுன்டர் மீது முறையாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
- என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக