செவ்வாய், 4 டிசம்பர், 2012

பெண்கள் அலை பேசி வைத்திருந்தால் தண்டத் தொகை

பெண்கள் அலை பேசி  வைத்திருந்தால் தண்டத் தொகை: பீகாரில் பஞ்சாயத்து முடிவு

பாட்னா: பீகாரில் உள்ள, ஒரு கிராமத்தில், "இளம் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்தினால், 10 ஆயிரம் ரூபாயும், திருமணமான பெண்கள், வீட்டுக்கு வெளியில், மொபைல் போன்களை பயன்படுத்தினால், 2,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்' என, பஞ்சாயத்து நிர்வாகம், உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜஸ்தான், அரியானா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள, சில கிராமங்களில், இளம் பெண்கள், மொபைல் போன்களை பயன்படுத்துவதற்கு, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், "கிராம நிர்வாகத்தின் உத்தரவை மீறுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தான், அறிவிக்கப்பட்டதே தவிர, என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பற்றி, பகிரங்கமாக அறிவிக்கவில்லை.இந்நிலையில், பீகார் மாநிலம், கிசான்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள, சுந்தர்பதி என்ற கிராமத்தை சேர்ந்த, பஞ்சாயத்து நிர்வாகிகளின் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இதில், எடுக்கப்பட்ட முடிவு குறித்து, அந்த கூட்டத்துக்கு தலைமை வகித்த, முகமது மன்சூர் ஆலம் கூறியதாவது:இளம் பெண்கள், மொபைல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதித்து, பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இளம் பெண்கள், மொபைல் போன் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டால், அவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.திருமணமான பெண்கள், தங்களின் வீடுகளுக்கு வெளியில், மொபைல் போன் பயன்படுத்தியது தெரியவந்தால், அவர்களுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதே போல், பெண்கள், சாலையோரங்களில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.எங்கள் கிராமத்தை சேர்ந்த பெரியவர்களில் பெரும்பாலோனார், இந்த அபராதம் விதிப்பதற்கு, வரவேற்பு தெரிவித்துள்ளனர். மொபைல்போன் பயன்படுத்துவது, சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும் செயல். இளம் பெண்கள், காதல் வலையில் விழுவதற்கு, இது காரணமாக இருக்கிறது.இவ்வாறு முகமது மன்சூர் ஆலம் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக