செவ்வாய், 4 டிசம்பர், 2012

தமிழர் நலன்காக்கா இந்தியக்கடற்படை நாள்

தமிழக மீனவர்களைக்காக்க முடியாதபடி கடற்படையை மத்திய அரசு கட்டிப்போட்டுள்ளது. இச்சூழலில் இப்படையைப் பாராட்டுவதில் என்ன பொருள் உள்ளது? பெரிய மாநிலத்தின் மக்கள் நலனுக்குத் தீங்கும் உயிர்களுக்குக் கேடும் விளையும் பொழுது வாளாவிருப்பது இந்திய நலனுக்கு எதிராகப் போய் முடியும் என்பதை இக்கடற்படை நாளின் பொழுதாவது மத்திய அரசிற்குக்கடற்படை உணர்த்தட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
 கரையை க் காக்கும் படை: இன்று இந்திய க் கடற்படை நாள்
இந்தியா, மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட நாடு. இந்திய எல்லையின் பெரும்பகுதி கடற்கரையாக உள்ளது. இதனால், நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதில், இந்திய கடற்படையின் பங்கும் முக்கியம். இந்திய கடற்படை, உலகின் ஐந்தாவது பெரியது.
1971ல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே "ஆபரேஷன் டிரிடென்ட்' என்ற பெயரில் டிச., 4ல் போர் நடந்தது. இதில் இந்திய கடற்படை, பாகிஸ்தானின் துறைமுக நகரான, கராச்சி மீது தாக்குதல் நடத்தியது. இதன் விளைவாக, போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதை நினைவுபடுத்தும் விதமாக, கடற்படை சார்பில், டிச.,4ம் தேதி இந்திய கடற்படை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அழைக்கிறது கடற்படை :


இத்தினத்தில் கடற்படை சார்பில், பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பு துறையில் வீரத்துடன் போரிட்டு, இன்னுயிரை தியாகம் செய்யும் வீரர்களுக்கு, "பரம் வீர் சக்ரா' , "மகா வீர் சக்ரா' மற்றும் "வீர் சக்ரா' ஆகிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன. கடற்படையில் உள்ள வாய்ப்பை, இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடலோர பாதுகாப்பை, இன்னும் பலப்படுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக