உலகின் வயதான பெண்மணி அமெரிக்காவில் மரணம்
உலகிலேயே மிகவும் வயதான பெண்மணி என்று கூறப்பட்டு வந்த பெஸ்ஸி கூப்பர் தனது 116வது வயதில் காலமானார்.
2011ஆம் ஆண்டு உலகிலேயே மிக வயதான பெண்மணி என்ற சாதனைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பெஸ்ஸி கூப்பர் ஜார்ஜியாவில் நேற்று மரணமடைந்ததாக அவரது மகன் தெரிவித்துள்ளார். 1896ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி டென்னஸியில் பிறந்தவர் கூப்பர். 1924ஆம் ஆண்டு லூதர் என்பவரை திருமணம் செய்து கொண்ட கூப்பருக்கு, 4 குழந்தைகளும், 12 பேரக் குழந்தைகளும், 12க்கும் மேற்பட்ட கொள்ளுப் பேரக் குழந்தைகளும், ஏராளமான எள்ளுப் பேரக் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக