சொல்கிறார்கள்
என் வாழ்வின் கருவூலத் தருணம்!
என் வாழ்வின் கருவூலத் தருணம்!
தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு, 53 வயதிலும், சிட்டாக பறந்து உதவும்
ரோசியம்மா: என் சொந்த ஊர் தாளவாடி. 10ம் வகுப்பு முடித்து, மங்களூரில்,
இரண்டாண்டு டெய்லரிங் கோர்ஸ் படித்தேன். திருமண வாழ்க்கை, கை
கொடுக்கவில்லை.பின், "மைராடா' அமைப்பில் சேர்ந்து, ஒன்றரை ஆண்டு, 250
பேருக்கு டெய்லரிங் பயிற்சி கொடுத்தேன். அவர்களில், 100 பேருக்கு மேல்,
தனியாக தையல் கடை வைத்து, நல்ல வருமானத்துடன் இருக்கின்றனர்.
சுய உதவிக்குழு அமைப்பது, பாமர மக்களுக்கு கால்நடைகளை வளர்ப்பதற்கு
உதவுவது, சுகாதார நடவடிக்கை மேற்கொள்வது என, பலருக்கு உபயோகமாகவே இருந்தது,
என் நாட்கள்.காடுபசுவன்மாளம் என்ற ஊரில், "மைராடா' மூலம், மினி ஹெல்த்
சென்டர் அமைத்திருந்தனர். அடிப்படை வசதி எதுவும் இல்லாததால், நான் பார்த்த
பிரசவங்கள், என்னை ரொம்ப பெருமிதமாக உணர வைத்தன. குறிப்பாக, இரட்டை
குழந்தைகளையும், தாயையும், பிரசவ போராட்டத்தில் இருந்து, பத்திரமாக மீட்ட
நேரம், என் வாழ்வின் பொக்கிஷ தருணம்.
மலைவாழ் மக்கள் மத்தியில் பணியாற்றிய போது, வீட்டில் மூலிகைத் தோட்டம்
அமைக்க வைத்து, அதன் மூலம், அவர்களுக்கு ஆரோக்கியத்தை சொல்லிக் கொடுத்தேன்.
படிப்பறிவில்லாத பாமர மக்கள், அந்த எளிய மருத்துவத்தை, இன்றும்
பயன்படுத்தி வருகின்றனர்.மற்றவர்களுக்கு உதவுவதால் தான், இந்த வயதிலும்,
உடம்பு எனக்கு பாரம் இல்லாமல் இருக்கிறது.
எப்போதும், என்னை சுற்றி இருப்பவருக்கு, சிறு சிறு உதவிகள் செய்வதில்
ஆரம்பித்த பயணம், 33 ஆண்டுகளாக, சமூக சேவகியாக சுவீகரித்துக்
கொண்டுள்ளது.பண்களுக்கு தொழில் பயிற்சிகள் தருவது, வங்கிக் கடன் பெற
வழிகாட்டுவது, அரசு உதவித் தொகை பெற்றுத் தருவது மட்டுமின்றி, கல்வி
ஆரோக்கியம், வேளாண்மை, கால்நடை, சமூகநல மேம்பாடு என, எல்லா தளங்களிலும்,
என் சேவை பணி தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக