பாதாள ச் சாக்கடையில் 22 ஆண்டுகளாக க் குடும்பம் நடத்தும் வாழ்விணையர்
மெடிலின்: கொலம்பியா நாட்டை சேர்ந்த தம்பதியர், 22 ஆண்டுகளாக, பாதாள சாக்கடைக்குள் குடும்பம் நடத்தி வருகின்றனர். தென் அமெரிக்க நாடான கொலம்பியா, ஒரு காலத்தில், போதை கடத்தல் கும்பலின் புகலிடமாக இருந்தது. இதனால், மெடிலின் உள்ளிட்ட நகரங்களில், எப்போதும் வன்முறை நடந்து கொண்டே இருக்கும். அந்நாட்டு அரசின் தீவிர நடவடிக்கையால், போதை கடத்தல் கும்பல்கள் ஒழிக்கப்பட்டுள்ளன.
மெடிலின் நகரில் வசிப்பவர், மைக்கேல் ரெஸ்டிரிபோ, 62. இவரது மனைவி மரியா
கிரேசியா. கூலி வேலை செய்து வந்த மைக்கேல், போதைக்கு அடிமையானதால்,
வறுமையில் வாடினார். மெடிலின் நகரில் கட்டப்பட்ட பாதாள சாக்கøடையின் ஒரு
பகுதியை, நகராட்சி அதிகாரிகள் தேவையில்லை, என ஒதுக்கி விட்டனர். இதனால்,
இந்த பாதாள சாக்கடையை, மைக்கேல் தம்பதியினர் வீடாக மாற்றிக்கொண்டு, 22
ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு துணையாக ஒரு நாயும், இந்த கால்வாயில் வசிக்கிறது. மின் வசதியை
ஏற்படுத்தி கொண்ட மைக்கேல், ஒன்றரை அடி உயரம், 65 சதுர கொண்ட, பாதாள
அறையில் டிவி, மின்விசிறி, உள்ளிட்டவற்றை வைத்திருக்கிறார்.
மழை காலங்களில், பாதாள சாக்கøடையின் மூடியை வைத்து மூடிக்கொண்டு உள்ளே
இருக்கின்றனர். வெயில் காலங்களில், வெளிச்சத்துக்கு மூடியை திறந்துவைத்து
விடுகின்றனர். இவர்களுடன் வசிக்கும் நாயுடன் தான், இந்த பாதாள அறைக்குள்
தூங்குகின்றனர். இதுவரை நகராட்சி அதிகாரிகள் இவர்களை அகற்ற, எந்த நடவடிக்கை
எடுக்காததால், இவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நம்நாட்டில் சாக்கடைக் குழாய்களில் எண்ணற்றோ ர் வாழ்வதை அறிந்த நமக்கு இதில் ஒன்றும் விந்தை இல்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக