வெள்ளி, 7 டிசம்பர், 2012

பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் மனைவி மரணம்

பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் மனைவி மரணம்: வைகோ இரங்கல்
பாவலர் ஏறுபெருஞ்சித்திரனார் மனைவி மரணம்: வைகோ இரங்கல்
சென்னை, டிச. 7-
 
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
 
பாவலர் ஏறு பெருஞ்சித்திரனாரின் துணைவியார் தாமரை மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு தாங்க முடியாத அதிர்ச்சியும், துக்கமும் அடைந்தேன்.
 
தாமரை பாவலர் ஏறு பெருஞ்சித்திரனாரின் இலட்சியங்கள் நிறைவேறுவதற்கு அவரது வாழ்க்கை முழுவதும் உறுதுணையாக இருந்தவர். தமிழுக்காகவும், இனத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தனது கணவருக்கு பக்கத் துணையாக இருந்தவர்.
 
தனது மகன் பொழிலன் பொய் வழக்கு புனையப்பட்டு கொடுஞ்சிறையில் வாடுகிறார். அந்தக் கொடும் துயரத்தையும் ஏற்றுக் கொண்டு, தமது கணவர் வழியில் இனத்துக்காகவும், மொழிக்காகவும் தொடர்ந்து பணியாற்றியவர்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
 

1 கருத்து: