வியாழன், 25 பிப்ரவரி, 2010

மேற்கு வங்க தேர்தலை மையமாகக் கொண்ட பட்ஜெட்டா?



புது தில்லி, பிப்.24: மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் மேற்கு வங்க மாநிலத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் எனக் கூறப்படுவதால் மம்தா பானர்ஜி மிகுந்த வேதனையடைந்துள்ளார்.பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தனது வேதனையை அவர் வெளியிட்டார். இத்தகைய குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் ரீதியில் கூறப்படுபவை. அதே பாணியிலான கேள்வியை செய்தியாளர்களாகிய நீங்களும் கேட்காதீர்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு மேற்கு வங்க மாநிலத்துக்கு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளனவா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் இவ்விதம் பதிலளித்தார்.மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில் பல எம்பிக்கள் குறுக்கிட்டுக் கொண்டேயிருந்தனர். தங்கள் தொகுதிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டேயிருந்தனர். 800 மக்கள் பிரதிநிதிகளையும் ஒரு பட்ஜெட்டில் திருப்திபடுத்த இயலாது என்று அப்போது பானர்ஜி குறிப்பிட்டார். வேகன் தொழிற்சாலை ஒரிசா, ஆந்திரம் மற்றும் அசாமில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தொழிற்சாலைகள் பிற மாநிலங்களில்தான் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக மேற்கு வங்க மாநிலத்தைப் புறக்கணித்துவிட முடியாது. மற்ற அமைச்சர்கள் தங்கள் மாநிலங்களுக்கு எந்த வகையில் முக்கியத்துவம் அளிக்கிறார்களோ அதேபோலத்தான் தானும் செயல்படுவதாக அவர் கூறினார்.மேற்கு வங்க மாநிலம் வளர்ச்சிப் பணிகளிலிருந்து முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என்று அவர் கேள்வியெழுப்பினார்.கொல்கத்தா மெட்ரோ ரயில் இணைப்பு விரிவாக்கம், துறைமுக இணைப்புக்கு விரிவாக்கம், ரவீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த நாளை ஒட்டி சம்ஸ்கிருத எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம், பாரத தீர்த்த யாத்திரை ரயில் சேவை உள்ளிட்டவை மேற்கு வங்க மாநிலத்துக்காக அறிவிக்கப்பட்ட சிறப்புத் திட்டங்களாகும்.
கருத்துக்கள்

இரவீந்திர நாத தாகூர் அவர்களின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வங்கமொழியின் பெயரால் தொடர்வண்டி இயக்கவது அல்லது அவரது நூலான கீதாஞ்சலியின் பெயரால் இயக்குவது என்பது பொருத்தமாக இருக்கும். சமற்கிருதத்தின் பெயரால் இயக்குவதை நிறுத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/25/2010 3:10:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக