வியாழன், 25 பிப்ரவரி, 2010

யானைமலை விவகாரம்: முதல்வருக்கே தெரியாமல் அரசு ஆணையா? - வைகோ



சென்னை, பிப்.24- மதுரையில் யானைமலையைக் குடைந்து சிற்ப நகரம் உருவாக்கும் திட்டம் குறித்து அரசு சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ள நிலையில், அதுதொடர்பாக ஏற்கெனவே வெளியான அரசு ஆணை முதல்வருக்கே தெரியாமல் வெளியிடப்பட்டதா என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இயற்கை சிற்பமாக அமைந்துள்ள மிகப் பழமையான யானைமலையைக் குடையும் திட்டத்தை எதிர்த்து மார்ச் 4ம் தேதி மதுரை ஒத்தக்கடையில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தோம். ஆனால், யானைமலையைக் குடையும் எண்ணமே அரசுக்கு இல்லை என்றும், அரசின் சார்பில் அவ்வாறு எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை என்றும் அறிவித்த பின்னரும், சில அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி செய்கின்றனர் என்று முதல்வர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.

ஆனால், தமிழக அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறையின் செயலர் 2009, டிசம்பர் 30}ம் தேதியிட்ட அரசு ஆணை எண்.227}ன்படி யானைமலை குறித்து அரசு ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மதுரை மாவட்டம், ஒத்தக்கடை ஒற்றைப்பாறையினைக் குடைந்து சிற்ப நகரம் உருவாக்க ஆய்வுக் குழுவினை அமைத்து அந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையின் முதன்மைச் செயலர் தலைமையில் அக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், யானைமலையைக் குடையும் திட்டமே இல்லை என்று முதல்வர் இப்போது கூறுகிறார். அப்படியென்றால், முதல்வருக்கே தெரியாமல் அரசு ஆணை வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது. நிர்வாகம் முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லையென்றால் தமிழகத்திற்கு எவ்வளவு பெரிய ஆபத்து என்பது கவலையளிப்பதாக உள்ளது.

சைவ, வைணவ, சமண சமயங்களின் திருத்தலமாக யானைமலை திகழ்வதால் இத்திட்டத்துக்கு மிகப்பெரும் எதிர்ப்பு உருவாகியது.

யானைமலையை உடைத்தால் கிடைக்கும் கிரானைட் கற்களால் 10 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்றும் இத்திட்டத்துக்கு ஆதரவானவர்கள் கூறியதாக தெரிகிறது. இச்செய்தி பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது.

யானைமலையை உடைத்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதை உணர்ந்துகொண்டு தற்போது ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கத்தை முதல்வர் தருகிறார். யானைமலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டது என்றும், அதுதொடர்பான அரசு ஆணை ரத்து செய்யப்பட்டது என்றும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அதுவரை யானைமலை பாதுகாப்புப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

(தொடர்ச்சி) கலைஞர் கட்டுப்பாட்டில் நிருவாகம் இல்லை எனக் கூறுவதைவிட அவர் நம்பும் சிலர்அவரது பணிச்சுமையைப் பயன்படுத்தி,அவரை ஏமாற்றுகிறார்கள் என்றுதான் கருத வேண்டும். எனவே, உரிய ஆணைகளை உடனடியாகக் கலைஞர் நீக்க வேண்டும்; ஆணைகள் பிறப்பிக்கச் செல்வாக்கைப் பயன்படுத்தியவர்கள், உடன் பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/25/2010 2:47:00 AM

ஒரு வேளை கலைஞருக்குத் தெரியாமல் ஆணை பிறப்பித்திருக்கலாம். ஏனெனில் யானைமலையைச் சுக்கு நூறாக்கச் சுற்றுலாத் துறை மறுத்தபின்பு மேலிடச் செல்வாக்கால் ஆணை பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.(நேற்றே ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.) சுற்றுலாத் துறை குறித்துச் சுற்றுலா அமைச்சர்தான் விளக்கம் அல்லது மறுப்பு தெரவித்திருக்க வேண்டும். ஆனால் பள்ளிக் கல்வி அமைச்சர்தான் மறுப்பு தெரிவித்து இருந்தார். ஆனால் தொடர்புடைய அமைச்சரே மறுப்புதெரிவித்த பின்பு வேண்டுமென்றே எதிர்க்கட்சியினர் போராடுவதாகக் கலைஞர் தெரிவித்துள்ளார். வைக்கோ ஆணையை எண்ணுடன் குறிப்பிடுகிறார். அப்படியானால் துறையையேமாற்றிக்கூறும் கலைஞர் அவர்களுக்குத் தெரியாமல்தான் இது நடந்திருக்க வேண்டும். கலை பண்பாட்டுத் துறையிலும் கலைஞருக்குத் தெரியாமல் பல முறைகேடான மோசடியான நியமனங்கள் போடப்பட்டுள்ளன. எனவே கலைஞர் இப்படிப்பட்ட ஆணைகளுக்கு எல்லாம் யார் யார் காரணம் என அறிந்து உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கலைஞர் கட்டுப்பாட்டில் நிருவாகம் இல்லை எனக் கூறுவதைவிட அவர் நம்பும் சிலர்அவரது பணிச்சுமையைப் பயன்படுத்தி,அவரை ஏமாற்றகிறார்கள் என்றுதான் கருத வேண

By Ilakkuvanar Thiruvalluvan
2/25/2010 2:43:00 AM

Narayana intha kosu tholai thangala pa. ena dhan ya ungaluku problem, govt la seat ilana athukaga ipdiya ethavathu ethirupu solliyae arasiyal nadathiduvenga pola.....

By Raj
2/25/2010 1:52:00 AM

shame shame useless karunanithi. this is the high time to quit from politics!

By charan
2/25/2010 12:33:00 AM

correct statement,they looted all our government money and temple land ,now they plan for granite stone. KK family world no 1 rich family,looted entire tamilnadu resource, god will give punishment to them definetly.

By nambi
2/24/2010 11:03:00 PM

question nalla than iruke... answer than varathe ange irunthe...

By nallavan
2/24/2010 10:48:00 PM

Ranganathan, If you cannot appreciate good things, please keep mum. Don't criticise some one's good intention. Vaiko is doing something with out any expectation. You people won't vote to him, but he won't stop to work for world Tamilians. He will be keep going, no one can stop him except nature. Mr.Vaiko you please go ahead we are with you.

By Joseph Chandran, Republic of Congo.
2/24/2010 10:32:00 PM

Thamizhina thalaivanagum thaguthi padaitha ore Thalaivan! ezhutha padikka theriatha Kutti thalaivarkalum, anja nenjarkalum naadalum kevalam thodarvathu kalathin koolam andri verenna?

By Selvarajan
2/24/2010 9:34:00 PM

U R a right person in a wrong party (ADMK)

By M.Babu
2/24/2010 9:10:00 PM

The government of Tamilnadu should take suitable action to protect elephant rock(yananimalai) in othakadi of Madurai district.The rock having beautiful temples and shrines praising of saiva,vaishna and jainism religions. The government can draw comprehensive plan for development of othakadi city by providing basic amenities and other infrastructures.The government should bring out in world map to popularise the rock temples/shrines among the national and international visitors

By v.thatchanamoorthy
2/24/2010 7:59:00 PM

ADMK MLA'S IN DMK GENERAL COUNCIL ????????????? QUESTION BY MDMK GENERAL SECRETARAY ON BEHALF OF ADMK ??????????? SUPER JOKE AND COMADY MR.VAI.KO !!!!!!!!!!!!!!!!!!!

By S. RANGANATHAN
2/24/2010 7:18:00 PM

போராட்டம் நடத்தியே உங்கள் உடல்நலத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள். உடல் நலனில் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

By மு. சந்திரசேகரன்
2/24/2010 7:00:00 PM

"Very Good super u give statement like this ok}

By shan
2/24/2010 6:37:00 PM

SUper, super ....... keep it up....

By senthil, nanguneri
2/24/2010 5:41:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக