புதன், 24 பிப்ரவரி, 2010

ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து



சென்னை, ​​ பிப்.23:​ அ.தி.மு.க.​ பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன்.​ ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து,​​ அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:62-வது பிறந்தநாள் காணும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா,​​ நிறைந்த உடல் ஆரோக்கியத்துடன்,​​ நீடித்த ஆயுளோடு இருக்கவும்,​​ சமுதாயப் பணிச் சிறக்கவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

காட்சிக்கு எளியன் கடுஞசொல்லன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் என்னும் திருக்குறளைப் (384) பின்பற்றினால் அவருக்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது. தவறாக வழிகாட்டும் ஆரியக் கூட்டததைப் புறந்தள்ளித் தமிழ் நல முடிவுகளை எடுத்தால் நிலையான உயர்வைப் பெறுவார். இவரைத் தவிர வேறு யாரேனும் இவரது கட்சித் தலைமையில் இருந்திருந்தால் காங்.-தி.மு.க. கூட்டணி படுதோல்வியைச் சந்தித்திருக்கும். கடைசி நேரத்திலாவது தமிழ் ஈழத்திற்காகக் குரல் கொடுத்ததால்தான் இந்த அளவாவது வெற்றி காண முடிந்தது. அதற்குப்பின்னர் அதனை மறந்ததால் கட்சி வளர்ச்சி தேக்கநிலையாகி விட்டது. எனவே, இக் குறைகளைக் களைந்து பெருந்தலைவர், பேரறிஞர், கலைஞர் முதலானவர்களிடம் இருந்து மக்களுடனான தொடர்பு முறையைக் கற்றுக் கொண்டு.தான் என்ன இனம் ஆக இருந்தாலும் தமிழின மக்களுக்கான கட்சியின் தலைமையில் உள்ளமையை உணர்ந்து தமிழுக்கே தலைமை தமிழர்க்கே முதன்மை எனக் குரல் கொடுத்து தமிழர்களின் தாயகமாம் தமிழ் ஈழம் அமைய உலக நாடுகளில் குரல் கொடுத்து வெற்றி மா‌லை யணிந்து 100 ஆண்டு வாழ்வாராக!

By Ilakkuvanar Thiruvalluvan
2/24/2010 4:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக