ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

முல்லைப் பெரியாறு ஐவர் குழுவில் தமிழகப் பிரதிநிதி இடம் பெறத் தேவையில்லை: தி.மு.க. வலியுறுத்தல்



சென்னை,பிப்.20: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஆய்வு செய்யும் ஐவர் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதி இடம்பெறத் தேவையில்லை என்று தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தீர்மானங்கள் விவரம்:முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்கும் அளவை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று 27.2.2006}ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கேரளம் இத்தீர்ப்பை மதிக்காமல், அதற்கு மாறாக ஒரு சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்தது.இந்த சட்ட திருத்தம் தொடர்பாக தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு ஆய்வு நடத்த ஐவர் குழுவை உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தமிழக அரசின் வழக்கையே திசை திருப்பி, கேரளம் நிறைவேற்றிய சட்ட திருத்தத்துக்கு உட்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளது. இப்பிரச்னையில் உச்ச நீதிமன்றம் சார்பிலும், 7 பேர் கொண்ட மிட்டல் குழு சார்பிலும் ஏற்கெனவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அணை வலுவாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதி இடம்பெறத் தேவையில்லை என்று தி.மு.க. உறுதியாகக் கருதுகிறது.இலங்கைத் தமிழர் பிரச்னை: இலங்கையில் போர் முடிந்த பிறகும், இன்னும் சுமார் இரண்டரை லட்சம் தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்ப முடியாமல், முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் காலம் தாழ்த்தாமல், அவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும். இதைத் தவிர வேறு எந்தத் தீர்வும் கிடையாது. ஏற்கெனவே உறுதி அளித்தபடி, இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது ஒன்றுதான் நிரந்தர சக வாழ்வுக்கு வழி வகுக்கும். எனவே, அதற்கான அரசியல் தீர்வினைக் காண தேவையான முயற்சிகள் அனைத்தையும் மத்திய அரசு விரைவில் மேற்கொள்ள வேண்டும். மீனவர் பிரச்னை: இலங்கை அரசு பல வாக்குறுதிகளை வழங்கியும் கூட, தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படைத் தாக்குதல்கள் தொடர் கதையாகவே உள்ளன. இலங்கைக் கடற்படையின் இந்த வன்முறை கொடுமைகளுக்கு நிரந்தரமான ஒரு முடிவினை ஏற்படுத்த வேண்டும். அதற்கான உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.சேது சமுத்திர திட்டம்: ராமர் பாலம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், மதவாதக் காரணங்களைக் காட்டி, சேது சமுத்திர திட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இதற்கான வழக்கை விரைந்து முடித்திட மத்திய அரசு முயல வேண்டும். தமிழகத்தின் தென்மாவட்ட வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் இத்திட்டத்தின் எஞ்சிய பணிகளை விரைவில் நிறைவேற்றிட வேண்டும்.கட்டாய திருமணப் பதிவு: திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் குறித்து இஸ்லாமிய சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு ஐயங்கள் ஏற்பட்டுள்ளன. இஸ்லாமியர்களுக்கென தனியான திருமணச் சட்டங்கள் இருக்கும் நிலையில், இப்போதைய சட்டத்தின் மூலம் அவர்களது மார்க்க நடைமுறைகளுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று கவலை தெரிவிக்கின்றனர். எனவே, இப்பிரச்னை குறித்து இஸ்லாமிய சமுதாயப் பிரதிநிதிகளுடன் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இஸ்லாமிய சமுதாயத்தினருக்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மகளிர் மசோதா: சட்டப்பேரவை, நாடாளுமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும். மாநில சுயாட்சி: மாநில சுயாட்சியை உறுதிப்படுத்தும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். தமிழக ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கி, விரைவில் முடிக்க வேண்டும். சேலம் ரயில்வே கோட்டம் முழுமையாகச் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலம்:தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டல திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துக்கள்

1.) குழு என ஒன்று இருந்தால் அதில் நமது சார்பாளர் இல்லையேல் கருத்தினை எதிரொலிக்கவோ குழுவின் நடவடிக்கையை அறியவோ இயலாது. இவ்வாறான நழுவலான தவறான முடிவை எடுப்பதற்கு மாறாக இத்தகைய குழுவை அமர்த்துவதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து உடனடித் தீர்ப்பு வழங்க வலியுறுத்தி வெற்றி காண்பதே சரியாதாகும். 2)ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து எவ்வகைக் கண்டனமும் இரங்கலும் தெரிவிக்காமல் தமிழ் ஈழமே தீர்வு என்னும் ஈழத் தமிழர்களின் கோரிக்கயை ஏற்காமல் பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்னும் பசப்புத் தீர்மானம். 3.) மத்திய அரசு மீனவரகள் படுகொலையை நிறுத்தும் வகையில் நடவடிக்கையை எடுக்காகவிட்டால் தமிழக அரசே நேரடியாகக் களத்தில் இறங்கி நடவடிக்க எடுக்கும் என எச்சரிக்காமல் கொண்டு வந்துள்ள போலித் தீர்மானம். 4.) மாநிலத் தன்னாட்சி குறித்து ஒப்புக்குச் சப்பாணித் தீர்மானம். சரி!சரி! மக்கள் பார்க்க விரும்பாத திமுக நாடகம் எப்படி நடந்தால் என்ன?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/21/2010 4:55:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
இச்செய்தி குறித்து அதிகக் கருத்துகள் பதிவாகவில்லை. ஒரு வேளை திமுக தீர்மானங்கள் என எண்ணாமல் திமுகா - திராவிட முன்னேற்றக் காங்கிரசு எனப் பெயர் மாற்றம் செய்து விட்டார்கள் என எண்ணியுள்ளனர் போலும். காங்கிரசின் ஊதுகுழலாகத் திமுக செயல்படுவதை விட அவ்வாறு பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
2/21/2010 11:09:00 AM

1.) குழு என ஒன்று இருந்தால் அதில் நமது சார்பாளர் இல்லையேல் கருத்தினை எதிரொலிக்கவோ குழுவின் நடவடிக்கையை அறியவோ இயலாது. இவ்வாறான நழுவலான தவறான முடிவை எடுப்பதற்கு மாறாக இத்தகைய குழுவை அமர்த்துவதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து உடனடித் தீர்ப்பு வழங்க வலியுறுத்தி வெற்றி காண்பதே சரியாதாகும். 2)ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து எவ்வகைக் கண்டனமும் இரங்கலும் தெரிவிக்காமல் தமிழ் ஈழமே தீர்வு என்னும் ஈழத் தமிழர்களின் கோரிக்கயை ஏற்காமல் பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்னும் பசப்புத் தீர்மானம். 3.) மத்திய அரசு மீனவரகள் படுகொலையை நிறுத்தும் வகையில் நடவடிக்கையை எடுக்காகவிட்டால் தமிழக அரசே நேரடியாகக் களத்தில் இறங்கி நடவடிக்க எடுக்கும் என எச்சரிக்காமல் கொண்டு வந்துள்ள போலித் தீர்மானம். 4.) மாநிலத் தன்னாட்சி குறித்து ஒப்புக்குச் சப்பாணித் தீர்மானம். சரி!சரி! மக்கள் பார்க்க விரும்பாத திமுக நாடகம் எப்படி நடந்தால் என்ன?

By usanthan
2/21/2010 10:45:00 AM

மழுப்பலாக ஏதாவது செய்யவேண்டும் என்றால் பொதுக்குழுவை கூட்டுவார். உண்மையை சொல்லும்போது கூட கருணாநிதி பயந்து பயந்து சொல்ல வேண்டுமா?. வாயில் தலையை விட்டாலும் கடிக்காத கிழட்டு சிங்கம்தான் கருணாநிதி என்பதை அண்டை மாநிலத்தார்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார்கள். அண்டை மாநிலங்களை பகைத்துக் கொண்டால் தனது குடும்ப தொல்லை காட்சிகளின் வியாபாரம் பாதிக்கப்படும் அல்லவா!

By கழககோழை
2/21/2010 9:48:00 AM

மதிப்புக்குரிய இலக்குவனார் திருவள்ளுவர் அவர்களே ! நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் அவர்களுக்கு தெரியாததா ? அவர்கள் கழ்வும் மீனில் நழுவும் விலாங்குகள். எதை எப்படி செய்தால், என்ன என்ன பயன் கிடைக்கும் என்பதிலேயே குறியாக இருப்பவர்கள். தமிழ், தமிழர்கள், தமிழகம் எல்லாம் இவர்கள் சுகமாக, பணக்காரர்களாக, ஆட்சியாளர்களாக இருக்க உதவும் சொற்கள்; மற்றபடி அவர்கள் veettu pillai kuttihalai paarungal. English kaarargal pola iruppaargal. PADIPPADHU RAAMAAYANAM; IDIPADHU PERUMAL KOVIL. OORUKKUTHAAN UPADHESAM; IDHU KALANJAR PAANI.

By pannadai pandian
2/21/2010 6:58:00 AM

This is a dangerous and stupid decision.Mu.Ka betrays our state.He should ask his Central Ministers to get out and cut off the alliance with Congress.He will never do this as he enjoys BENEFITS from Power. When a committee is formed by the court(???),our case should be represented, or else, it will mean we have nothing to say or agrees whatever be the decision Of course, it is a fact that the orders of the supreme court will not be honored at all and this is only a custom/tradition.as we have witnessed in the case of Kavery. .

By Kaleelulla
2/21/2010 6:52:00 AM

அதனால் ரொம்ப அலட்டிக வேணாம் என்பதே இவரின் எண்ணம். அதுவும் உண்மை தான். திருமங்கலத்திலிருந்து வந்தவாசி வரை நாம் பார்த்தது என்னவோ பிரியாணி, சாராயத்தின் மகிமையே. எல்லாவற்றையும் கணக்கு போட்ட காங்கிரஸ், இவருடன் கூட்டணியை தொடர்ந்தால் பஞ்சமா பாதகத்துக்கு துணை போனதாக ஆகிவிடும் என்று எண்ணி, இவரை எப்படி கழட்டி விடுவது என்று எண்ணி கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நரி புத்தி வயோதிகரோ பெல்ட் போட்டு டைட்டாக கூட்டணியை பலவித சலுகைகள், மிரட்டல்கள் காங்கிரஸ் காரர்களுக்கு கொடுத்து மீளாதவாறு கட்டி வைத்திருக்கிறார்.

By N.Jiang
2/21/2010 6:39:00 AM

உலகத்தில் யாரும் இவரை போல வெட்டி பேச்சு பேசுபவர்கள் இல்லை. இந்த வெட்டி பேச்சின் பின்னே சுய நலம் பொதிந்திருக்கிறது. யார் அதிகமாக பேசுகிறார்களோ, அவர்கள் தங்கள் குற்றங்களை மறைக்க முயலுகிறார்கள் என்று அர்த்தம். இந்த வகையில் கலைஞரை மிஞ்ச உலகத்தில் வேறு ஒரு ஆள் பிறக்க வேண்டும். கலைஞரின் வாழ்வில் தற்போது அவர் கொண்டாடும் சுயநலத்தனம் அவர் வாழ்வில் எப்போதும் கொண்டதில்லை. ஏமாற்று கலையில் இவரை விட கை தேர்ந்த அரசியல் வாதிகள், மற்றும் அரசியலில் எவ்வளவுக்கு எவ்வளவு கீழ் தரமாக போக முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு கீழே போய் கரை கண்டவர் யாவரும் இல்லை. தற்போது முல்லை பெரியார் பிரச்சனையில் இவர் தமிழக நலனை கையாண்ட விதம் உள்ளங்கை நெல்லிக்கனி மாதிரி. கேரளாகாரனே வெட்கப்படும்படியாக பராசுரனை விட்டு கோர்ட்டில் நாடகமாடினார். இப்போது பொதுக்குழுவில் இன்னொரு நாடகம். இவர் என்ன நினைக்கிறார் என்றால், தமிழக மக்களுக்கு இருப்பதோ எருமை தோல்; இவர்களுக்கு நாம் செய்யும் தில்லு முள்ளு தனம் தெரிந்தாலும், வோட்டு போடும் பொது இந்த வோட்டு போடும் மஷின் நமக்குதான் குத்தும். அதனால் ரொம்ப அலட்டிக வேணாம் என்பதே இவரின் எண்ண

By N.Jiang
2/21/2010 6:36:00 AM

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
௫.)இந்தியக் கூட்டரசின் மொழியாகத் தமிழ் மொழியை ஏற்கச் செய்யாமல் காலந்தோறும் தீர்மானம் போட்டே மக்களை ஏமாற்றி விடலாமா?
-- தினமலர்
பிப்ரவரி 21,2010,00:00 IST
இதனால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் இன்று முதல திமுக வின் பெயர் திமுகா - திராவிட முன்னேற்றக் காங்கிரசு என மாற்றப்படுகிறது. பெரியார்,அண்ணா, கலைஞர் கொள்கைகளைக் கைவிட்ட பின்பும் நடிக்காமல்., நாங்கள் தழுவியுள்ள காங்கிரசில் இணைவதை விட ஒட்டுக காங்கிரசாகச் செயல்பட இப்பெயர் மாற்றம் போதும் என நாணயமாக நாங்கள் எடுத்த முடிவை அனைவரும் வரவேற்பீர்கள் என்று தெரியும். குறிப்பாக எங்கள் அண்ணன் இராசபக்சே மிகவும் மகிழ்ந்து எங்களை வாழ்த்துவார். அனைவருக்கும் முன்னதான நன்றி.
இப்படிக்கு ஒரு காலத்தில் திமுக எனச் செயல்பட்ட திமுகாங்கிரசு. -- இலக்குவனார் திருவள்ளுவன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக