ஈழத்தமிதழர் எல்லாரையும் கொன்றொழிப்பதுதான் காங், சிங்கள ஆட்சியாளர்களின் அரசியல் தீர்வு. அதைத்தான் செய்து முடித்துவிட்டார்களே! இலங்கை அரசோடு ஒருங்கிணைந்து செயல்படுவதாக உண்மையைத்தான் ஒத்துக் கொ்ணடார்களே! இனி இராசபக்சே ஆட்சி நிலைக்க வழி செய்ய வேண்டும். பொன்சேகா வந்து விட்டால் அவரையும் எப்படியாவது கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும். மற்றடி மனிதாபிமான உதவிகள் என்பனவெல்லாம் கருணாக்களுக்கும் கைக்கூலிகளுக்கும் தரும் பரிசுகள். இந்திய நிலைப் பகுதியைச் சீனாவிற்கும் பாகிசுதானுக்கும் காவுகொடுத்த இந்தியா வெட்கமின்றி ஈவு இரக்கமின்றிச் செய்த படுகொலைகளால் பெருமை பட்டுக் கொண்டு உள்ளது. இச்செய்தியை வெளிப்படுத்திய தினமலருக்குப பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++
இலங்கை பற்றியும் ஜனாதிபதி உரையில் இடம் பெற்றுள்ளது. அதாவது, "இலங்கை அரசோடு ஒருங்கிணைந்து செயலாற்றப்படும். இந்தியா - இலங்கை இடையிலான இருநாட்டு உறவுகள் மேலும் வலுவடையச் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அங்குள்ள தமிழர் களுக்கு மனிதாபிமான உதவிகள் அனைத்தும் செய்யப்படும். அவர் களின் மறுவாழ்வுக்கு ஏற் பாடுகள் செய்யப்படும்' என்று கூறப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே ஜனாதிபதி உரையில், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணப் படும் என்று ஒரு வாசகம் இருக்கும். அரசியல் தீர்வை இந்தியா வலி யுறுத்துவது வழக்கம். ஆனால், முதன் முறையாக அரசியல் தீர்வு பற்றி, ஜனாதிபதி உரையில் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக