ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

அழகிரி என்னை சந்திக்கவில்லை: மக்களவைத் தலைவர் மீரா குமார்



புது தில்லி, பிப்.20: மக்களவையில் தமிழில் பேசுவது தொடர்பாக மத்திய அமைச்சர் அழகிரி இதுவரை தன்னை சந்திக்கவில்லை என்று மக்களவைத் தலைவர் மீரா குமார் சனிக்கிழமை தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியது: மக்களவையில் தமிழில் பேசுவதற்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிப்பதற்காக என்னை சந்திக்க வருமாறு மத்திய அமைச்சர் அழகிரிக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால் இதுவரை அவர் என்னை சந்திக்கவில்லை. நாடாளுமன்றத்தில் 14 மொழிகளில் பேசுவதற்கான வசதி உள்ளது. இந்த வசதி தமிழில் வேண்டுமென்றால் முன்னதாகவே நோட்டீஸ் கொடுக்க வேண்டும். மக்களவைத் தலைவரின் அனுமதிக்கு பிறகு அந்த வசதி அளிக்கப்படும் என்றார் மீரா குமார்.
கருத்துக்கள்

உறுப்பினர்கள் முன்கூட்டித் தெரிவித்து விட்டுப் பேசும் வாய்ப்புஎன்பது தவறானது. அமைச்சர்கள் உட்பட அனைவருமே முன்னறிவி்ப்பின்றி இந்தி மொழி போல் தத்தம் தாய்மொழி யில் பேசும் உரிமை அளிக்கப்பட வேண்டும். தமிழ் இந்தியக் கூட்டரசின் மொழியாக அறிவிக்கப்பட்டு நாடாளுமன்றங்களில் இடம் பெற வேண்டும். இது தனிப்பட்டவரின் சிக்கல் அன்று. உறுப்பினருக்கு ஆங்கிலம் தெரியாமை தவறன்று; தாய்மொழியில் பேசத் தெரியாவிட்டால்தான் வெட்கப்பட வேண்டும். இச்சிக்கலில் அழகிரி தடம் புரண்டு, தான் பேசியது தவறாக ஊடகங்களில் வந்து விட்டது என்று சொல்லி விட்டார். எனவே, அவர் இவரைச சந்தித்தாலும் சந்திக்காவிட்டாலும் பெரும் மாற்றம் எதுவும் நிகழப் போவதில்லை. தமிழர்கள் தம் தேசிய மொழியான தமிழில் நாடாளுமன்ற அவைகளில் பேசும் உரிமையை அரசமைப்பு அடிப்பபடையில் வழங்க வேண்டும்.

By Ilakkuvanar Thiruvalluvan
2/21/2010 6:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

Latest indian and world political news information

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக