railway லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
railway லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 28 ஜனவரி, 2013

இலண்டன் தொடரித்துறையில் தமிழ் thamizh in london railway

இலண்டன் மாநகர தொடர்வண்டி பருவ பயண அட்டையை புதுப்பிக்கவும் மற்றும் தொடர்வண்டி பயணச் சீட்டை பெறுவதற்கும் தானியங்கி இயந்திர சேவையில் தமிழுக்கும் இடம் உண்டு. மற்ற ஐரோப்பிய மொழிகளிலும் இந்த சேவையை பயன்படுத்தலாம்.

ஆனால் இந்திய நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளாகியும் தொடர்வண்டியில் செல்வதற்கு தமிழில் முன்பதிவு செய்ய முடியாது. தமிழில் பயணிகள் பெயர்களை பார்க்க முடியாது. தமிழில் அறிவிப்புகள் பார்க்க முடியாது. அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலம் தான். இங்கிலாந்து நாட்டை போல் இந்தியாவும் தனது மொழித் தீண்டாமைக் கொள்கையை கைவிட வேண்டும். அனைத்து இன மக்களையும் சமமாக பாவிக்க வேண்டும். அப்போது தான் உலகின் தொன்மையான தமிழ் மொழிக்கு விடுதலை கிடைக்கும்.

படம் உதவி : தீசன் ராமநாதன்

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

இருப்புப் பாதைகள் அருகே வீடுகள் கட்டித்தர திட்டம்







இருப்புப் பாதைகள் அருகேயுள்ள குடிசைவாசிகளுக்கு வீடுகள் கட்டித்தர தொடரி அமைச்சகம் திட்டம்
புதுடில்லி:ரயில் பாதைகள் அருகேயுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக, குடிசைவாசிகளுக்காக, மும்பை, டில்லி மற்றும் திருச்சியில், குறைந்த செலவில் வீடுகளை கட்ட, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக, டில்லி யில், ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாட்டில் பல இடங்களில், ரயில்வேக்கு சொந்தமான இடங்களில், 1.34 லட்சம் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதாவது, ரயில்வேக்கு சொந்தமான மொத்த நிலங்களில், 981 எக்டேர் நிலங்கள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.வடக்கு ரயில்வே மண்டலத்தில், 220 எக்டேரும், வடகிழக்கு எல்லை ரயில்வே பகுதியில், 167 எக்டேரும், தென் கிழக்கு மண்டல ரயில்வே பகுதியில், 162 எக்டேர் நிலங்களும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளன.சீரான மற்றும் விரைவான ரயில் போக்குவரத்திற்கு தடையாக, ரயில் பாதைகளை ஒட்டியே, இந்த ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை அகற்றவும், அந்த இடங்களில் வசிக்கும் குடிசைவாசிகளுக்கு, மாற்றிடமாக, குறைந்த செலவில் வீடுகளை கட்டிக் கொடுக்கவும், ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்திற்கு, "சுகி கிரஹா' என, பெயரிடப்பட்டு, டில்லி, மும்பை நகரங்களில் இதற்கான பணிகள் துவங்கியுள்ளன. மும்பை நகரில், 22 கோடி ரூபாய் செலவிலும், டில்லியில், 11 கோடி ரூபாய் செலவிலும், குறைந்த செலவிலான வீடுகள் கட்டப்பட உள்ளன.இந்த திட்டமானது, 2011-12ம் ஆண்டு, ரயில்வே பட்ஜெட்டிலேயே, அப்போதைய, ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியால் அறிவிக்கப்பட்டது. இந்த வீடு கட்டும் திட்டம், நாட்டில் முதல் கட்டமாக, டில்லி, மும்பை, திருச்சி, சீல்தாக் மற்றும் சிலிகுரி ஆகிய ஐந்து இடங்களில் செயல்படுத்தப்படும்.

இதுதவிர, இந்த ரயில் பாதைகளை ஒட்டிய ஆக்கிரமிப்பு பிரச்னை, மத்திய நகர்ப்புற வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குடிசை வாசிகளை மாற்ற, மாநில அரசுகளுடன் இணைந்து, மேற்கொள் ளப் படும், "ராஜிவ் அவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழும், ரயில் பாதைகளுக்கு அருகே வசிப்பவர்களுக்கு வீடுகள் தர வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி கூறினார்.- தினமலர்


புதன், 22 பிப்ரவரி, 2012

Urging Colombo to rebuild railway to north evokes 143-year-old debate

Urging Colombo to rebuild railway to north evokes 143-year-old debate

[TamilNet, Tuesday, 21 February 2012, 00:39 GMT]
A group of politicians, academics and NGO workers in the South including some Tamils and Muslims of southern orientation, while urging implementation of several LLRC recommendations in consultation with the TNA, and at the same time urging demilitarisation and political solution based on devolution, concluded their signed statement on Friday, wondering it was “hard to understand delay in rebuilding the railway to the north – a one time artery of commerce and people movement.” The perception of the model of ‘integration’ with the Colombo-based system, evokes 143-year-old debate on ‘the tale of two cities’, started by the then British Government Agent in Jaffna, Sir William Twynham, whether the railway makes Jaffna independent or dependent of Colombo. Twynham in his time rather preferred to develop the external trade of the ports in Jaffna and land-link them with the rest of the island.

Further comments from an academic in Jaffna follow:

The railway has come to then British Ceylon in 1864.

The British colonial focus of the railway was linking their latest conquest in the island, Kandy, and the plantations in the hill country to facilitate the export of tea.

The immediate economic victim was Batticaloa, because until then the produce of the tea estates were largely exported through the Batticaloa port in the east of the country of Eezham Tamils.

But the British Government Agent Twynham in Jaffna was thinking in terms of the people of the land he was administering.

In 1869, Twynham built the Punnaalai causeway, linking the Kayts harbour with the rest of the island to improve the local economic independence and external trade that was at that time based on tobacco.

Long caravans of bullock carts starting from the Kayts harbour with commercial items coming in return from as far as Bengal, were taken to the south for trade.

Twynham, who loved the country and people he was administering, strongly argued with the British colonial office against linking Jaffna with Colombo by railway. Twynham retired in 1896, he chose to spend even his retirement life in Jaffna and died in Jaffna.

Twynham was proved right when the railway finally came to Jaffna with commodities coming from Colombo. The ports of Jaffna were closed and became ghost towns. The traders became subordinates by having their shops in the south – to be chased away after every pogrom and then to plead for their return, and not for their national rights. Others who continued with their ancient profession became ‘smugglers’.

The then leading politician of the north, who saw to it that a railway station was built at I’nuvil to facilitate his travels from Colombo, heralded a paradigm of ‘Colombo-Tamils’ deciding the polity of Eezham Tamils.

Now, we see a trend of Sinhala capital coming to the north with military protection and colonial enclaves for further subordination of the nation of Eezham Tamils. The diaspora is not allowed an independent entry to its land for investment. The forces of Colombo-centric thinking are keen in even luring the diaspora into the pattern. The railway, following its long colonial tradition, is now to enhance the agenda of the new colonial masters.

India could have helped the situation by swiftly opening the ports and trade in the north, by developing an appropriate communication through Naakappaddinam, Point Calimere and Athiraam-paddinam and by insisting on Colombo for the development of east coast link of Batticaloa and Trincomalee with Point Pedro. But New Delhi doesn’t want to do it, while its politicians in Tamil Nadu brag about the Thooththukkudi–Colombo ferry.

What is pricking to a Tamil mind is that the signatories of the statement who worry about “people movement” between Colombo and Jaffna have shown no concern at all about people movement within the nation of Eezham Tamils along the eastern and western coasts. Eezham Tamils are long deprived of this ‘people movement’ within their own nation, as Colombo has been deliberately sitting on it.

The formation of a civil society movement based on the grassroot organizations of the north and east has become a pricking problem for some of the Tamil minds seeking space but can’t conceive anything beyond the Colombo-centric life of subjugation, and have been conditioned to remain so, by forces inside and outside of the island. One could see that in the mushrooming Colombo-based Tamil signatories claiming ‘civil society’, but belonging to only certain families and esoteric groups.

Once a section of the elite and affluent of the Eezham Tamil nation bases its property, interests, professional opportunities and orientation of outlook in Colombo, its concern about the liberation of its nation is bound only to the extent of bringing in equilibrium to suit its interests, within the Colombo-centric system preserved at any cost. Eezham Tamils in the island and in the diaspora, as well as grassroot Tamil Nadu should carefully understand where the ultimate problems exist and what to do about them.

External Links:
The Island: An appeal to the Tamil Community and its civil and political representatives
The Island: Practical steps to meaningful reconciliation

செவ்வாய், 27 டிசம்பர், 2011

Social service by railway labourers: இதுவல்லவோ மனித நேயம்! :




கோவை: கோவையில், ஆதரவற்ற குழந்தைகளை மீட்டு, மறுவாழ்வு அளிப்பதற்கு ஆட்டோ, டாக்சி டிரைவர்கள், ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்கள், பிளாட்பார வியாபாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்களை கொண்ட, 50க்கும் மேற்பட்ட, சமூக தன்னார்வ பாதுகாப்பு குழுக்கள் செயல்படுகின்றன. இக்குழுவினர், 74 குழந்தைகளை மீட்டுள்ளனர். அந்த சிறுவன் பெயர் சுரேஷ் பாபு. 20 ஆண்டுகளுக்கு முன், கோவையின் ஏதோ ஒரு தெருவில் இருந்து, மீட்டு வரப்பட்ட அந்த சிறுவனுக்கு, கோவை டான் பாஸ்கோ அன்பு இல்லத்தில், அடைக்கலம் கிடைத்தது. அந்த சிறுவன் இன்று வளர்ந்து, அதே அன்பு இல்லத்தில் பணியாற்றுகிறார்.
தன்னைப் போன்ற, ஆதரவற்ற சிறுவர்களை மீட்டு, மறுவாழ்வு அளிப்பது தான், அவரது குறிக்கோள். ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பல்வேறு பகுதிகளில், உற்றார் உறவினர்களை இழந்து, நிர்கதியாக நிற்கும் ஆதரவற்ற குழந்தைகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறார். இதனால், ரயில்வே தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், பிளாட்பார கடை வியாபாரிகள் என பலருக்கும் அறிமுகம் ஆனார். இவர்களை இணைத்து, "சமூக தன்னார்வலர் குழு' என்ற, மீட்புக்குழுவை அமைத்துள்ளார், சுரேஷ்பாபு.
இவரது முயற்சியால், இன்று ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பொது இடங்களில் 50 சமூக தன்னார்வ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 74.

சமூக தன்னார்வ குழுவின் பணி குறித்து, சுரேஷ்பாபு கூறியதாவது: ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் அளிக்கும், டான் பாஸ்கோ அன்பு இல்லம், சைல்டுலைன் மற்றும் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து இப்பணியை மேற்கொள்கிறோம். எங்கள் குழுவில் இருப்பவர்கள், சாதாரண தொழிலாளர்கள் தான். அன்றாட வருமானத்திற்காக தினக்கூலி செய்யும் ரயில்வே பார்சல் தொழிலாளர்கள், ஆட்டோ - டாக்சி டிரைவர்கள் என, சிலரை தேர்வு செய்து, இந்த குழுவை அமைத்துள்ளோம். ஆதரவற்ற குழந்தைகள், மனநலம் குன்றியோர் என யாராவது ஒருவரைப் பார்க்க நேரிட்டால், தன்னார்வ குழுவினர், உடனடியாக சைல்டுலைன் மற்றும் போலீசாருக்கு, தகவல்களை தெரிவிப்பர். முதலில் குழந்தைகளை மீட்டு, உணவு மற்றும் உதவிகளை அளிப்பர். குழந்தைகள் பேசும் நிலையில் இருந்தால், "சைல்டுலைன்' கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவர். விபத்தில் சிக்கியவர்களை, மருத்துவமனையில் அனுமதிப்பது, ரத்தம் தேவைப்பட்டால் ரத்த தானம் செய்வது,பெற்றோரிடம் கோபித்து வந்த குழந்தைகளுக்கு கவுன்சலிங் அளிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். இவ்வாறு, சுரேஷ் பாபு கூறினார்.

சமூக பாதுகாப்பு குழுவில், இடம்பெற்றுள்ள, ரயில்வே பார்சல் தொழிலாளிகள் ராமமூர்த்தி, செந்தில்குமார் கூறியது: வழியும், மொழியும் தெரியாத வட மாநில குழந்தைகள், குடிகார தந்தையால் வீட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்ட குழந்தைகள், வீட்டு எஜமானர்களின் சித்ரவதையை தாங்க முடியாத வேலைக்கார சிறுவர்கள், தாயின் கள்ளக்காதலனால் விரட்டப்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், மனநலம் குன்றியோர் என, பலரும், கோவையின் பல்வேறு தெருக்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, கோவை ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில், சித்தபிரமை பிடித்தது போன்று, முழு நிர்வாணமாக நின்ற 13 வயது சிறுவன் மீட்கப்பட்டான். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உடலும், மனமும் சோர்ந்த நிலையில் நின்ற, அந்த சிறுவனை மீட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது' என்றனர்.

50 குழுக்களில் 900 உறுப்பினர்கள் : சமூக தன்னார்வ பாதுகாப்பு குழுவின், ஒருங்கிணைப்பாளர் ஜாக்குலின் கூறியதாவது: மீட்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர் அல்லது உறவினர்களிடம் சேர்ப்பது, பெற்றோரை இழந்த குழந்தைகளை ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்த்து, அவர்களுக்கு கல்வி உள்ளிட்ட உதவிகளை செய்து வருகிறோம். சமூக தன்னார்வலர் குழுவில் சேர்ந்துள்ள, ரயில்வே தொழிலாளர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளோம். 50 குழுக்களில் மொத்தம் 900 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுடன் அடிக்கடி தொடர்பு வைத்துக்கொண்டு, பணி குறித்து ஆய்வு செய்வோம். மாதாந்திர கூட்டங்கள் நடத்தி பணியின் மேம்பாடு குறித்து விவாதிக்கப்படுகிறது. சிறந்த பணிக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில், குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகள் மனோபாவம், குழந்தைகள் நல திட்டங்கள், சமூக பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும். குழந்தைகள் கடத்தல், துன்புறுத்தலில் இருந்து பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வு குறித்தும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு, ஜாக்குலின் தெரிவித்தார்.

புதன், 13 ஜூலை, 2011

Dinamani editorial about train accidents: உயிருடன் விளையாடுகிறார்கள்!

பொறுப்புடனும் விளக்கமாகவும் நன்கு எழுதப்பட்டுள்ளது. உணரவேண்டியவர்கள் உணர்வார்களாக! 
பாராட்டுடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


உயிருடன் விளையாடுகிறார்கள்!

First Published : 13 Jul 2011 12:08:49 AM IST


அதிகாரிகளின் அறிவுரையைக் கேட்காமல் ஓர் அமைச்சர் தன்விருப்பப்படி நடந்துகொண்டால் என்ன நடக்கும் என்பதற்கு தொலைத்தொடர்புத் துறையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் ஓர் எடுத்துக்காட்டு. அதுபோல, அதிகாரிகளின் கையில் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, ஓர் அமைச்சர் தனது மாநில அரசியலைக் கவனிக்கச் சென்றுவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கு, ரயில்வேயின் சீரற்ற நிர்வாகமும் விபத்துகளும் எடுத்துக்காட்டு.உத்தரப் பிரதேச மாநிலத்தில், கல்கா ரயில் விபத்தில் 35 பேர் பலியான சம்பவம் குறித்து செய்தி வெளியான அடுத்த கணமே விமர்சனக் கணைகள் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மீது பாய்ந்ததில் தவறு காண முடியாது.மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தல் தொடங்கிய நாள் முதலாகவே மம்தா பானர்ஜி ரயில்வே துறையில் கவனம் செலுத்தவே இல்லை என்பது வெளிப்படையான உண்மை. அதன் பின்னர், உள்ளாட்சித் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த வெற்றி, அவரைச் சட்டப்பேரவைத் தேர்தல் பற்றிய சிந்தனையில் ஆழ்த்தி தனது ரயில்வே அமைச்சர் பதவிக்கான கடமைகளைச் செய்யாத நிலைமையை ஏற்படுத்தியது.மார்ச் மாதம் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் முழுநேரமும் தனது மாநிலத்தில் செலவிட்டாரே தவிர, ரயில்வே அமைச்சகத்துக்கு வந்தாரா என்பதேகூட சந்தேகம்தான். வெற்றி பெற்று முதல்வரானதும், அவர் இனி இந்த அமைச்சர் பதவியைத் தொடரப் போவதில்லை என்று வெளிப்படையாக, சட்டப்பூர்வமாக உறுதியான பிறகும், மே 13-ம் தேதி முதல் சுமார் இரண்டு மாத காலம் எந்த மாற்றமும் செய்யாமல், ரயில்வே அமைச்சரை மாற்றாமல் வெறுமனே வேடிக்கை பார்த்த பெருமை நமது பிரதமர் மன்மோகன் சிங்கைச் சாரும்.மம்தா பானர்ஜி தன் பொறுப்பை உணர்ந்து, இந்த அமைச்சர் பதவியை தன் கட்சியைச் சேர்ந்த மற்றொருவரிடம் ஒப்படைத்துவிட்டு விலகியிருந்தாலும்கூட நிர்வாகத்தில் ஏற்பட்ட மெத்தனப் போக்கு ஓரளவு குறைந்திருக்கும். ஆனால், அதையும் அவர் செய்யவில்லை. ரயில்வே துறை முற்றிலுமாகச் சீர்கெட்ட பிறகு இப்போதுதான் ரயில்வே அமைச்சர் பதவியைத் துறக்கும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.ரயில்வே துறையில் மிக முக்கிய பொறுப்புகளுக்கான பதவிகளில் சுமார் 2 லட்சம் பதவிகள் காலியாக, நிரப்பப்படாமல் இருக்கின்றன. இந்தப் பணி நியமனங்களுக்கான உத்தரவுகளைப் போடாமல், கோப்புகள் கிடப்பில் உள்ளதற்குக் காரணம் அமைச்சர் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான். இப்பணிகளில் மிகவும் அதிகமாக காலியாக உள்ள பணிகள் எதுவென்றால், பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் தொழில்பிரிவுகளில்தான்.அதிகாரிகளை அந்தந்தப் பதவிகளில் நிரப்பிவிட்டால் போதுமா, விபத்து குறைந்துவிடுமா என்று கேட்கலாம். அதிகாரிகளை நியமித்து, சரியாகப் பணியாற்றும் வாய்ப்பை உருவாக்கினால் நிச்சயமாக விபத்துகள் குறையும் என்பதில் சந்தேகமே இல்லை. கல்கா பயணிகள் ரயில் விபத்து நடந்தது குறித்து இன்னும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள் என்ற நிலையிலும், அந்த வழித்தடத்தில் அடிக்கடி பயணிக்கும் "தினமணி'யின் தில்லி வாசகர் ஒருவர் தெரிவிக்கும் கருத்தையும் சிந்திக்க வேண்டியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் அடிக்கடி ரயில் விபத்து அல்லது ரயில் தடம்புரளுதல் ஏற்படக் காரணம், கட்டுப்பாடே இல்லாமல் அபாயச் சங்கிலியை இழுத்தல் (செயின் புல்லிங்) நடைபெறுவதுதான் என்கிறார் அவர். பல வடமாநிலங்களில் ரயிலில் அபாயச்சங்கிலியை இழுத்த நிகழ்வுகளுக்கான பதிவேட்டில் இவை பதிவு செய்யப்படுவதும் இல்லை என்கிறார். இதை முறையாகப் பதிவுசெய்து அந்தத் தடத்தில் கூடுதல் போலீûஸ அனுப்பி, தவறு செய்தவர்களைத் தண்டிக்கும் வழக்கம் நடைமுறைக்கு வராதவரையிலும் இந்த விபத்துகள் தொடரும் என்கிறார் அவர்.தமிழ்நாட்டில், அபாயச் சங்கிலியை இழுத்து ரயில் நிறுத்தப்படுமேயானால் அந்தப் பெட்டிக்கு ரயில்வே ஊழியர் வந்து யார் இழுத்தது என்று விசாரிப்பார். காரணம் பதிவு செய்யப்படும். காரணம் சரியில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். ஆனால், உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களில் ரயில்களை அவரவர் வேண்டிய இடத்தில் நிறுத்துவதற்காக அபாயச் சங்கிலியை இழுப்பது என்பது மிகமிக சகஜம். ஒரு ரயில் வேகமாகச் செல்லும்போது இவ்வாறு சங்கிலியை இழுக்கும்போது, தண்டவாளம் சரியாகப் பொருத்தப்படாமல் பலவீனமாக உள்ள இடமாக இருந்தால், தண்டவாளம் விலகி ரயில் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.இந்த வேளையில் தில்லி வாழ், ரயில்வே உயர் அதிகாரி ஒருவர், ஒரு பத்திரிகைக்குப் பேட்டி அளிக்கும்போது, ""சரக்கு ரயில்களில் எவ்வளவு டன் எடை சரக்கு ஏற்றப்பட வேண்டும் என்கிற கட்டுப்பாடு இல்லாமல், அதைக் கவனிக்க ஆளில்லாமல், நிறைய எடையுள்ள பொருள்கள் ஏற்றப்படுவதால், தண்டவாளங்கள் விரைவில் வலுவிழந்து போகின்றன. அதனால்தான் ""இதுபோன்ற ரயில் தடம்புரளுதல் நிகழ்கின்றன'' என்று கூறியுள்ள கருத்தையும் ரயில்வே நிர்வாகம் கவனிக்க வேண்டும்.மேலும், ரயில்வே துறையில் தண்டவாளங்களை இணைக்கும் ஸ்லீப்பர் எனப்படும் குறுக்குக்கட்டைகள் முன்பு மரத்தால் ஆனவை. இப்போது கான்கிரீட் பலகைகளால் நிறுவப்படுகின்றன. இதைச் செய்து தருவது தனியார் நிறுவனங்கள். இதில் மிகப்பெரும் ஊழல் நடப்பதாகவும், இதனால் தரமற்ற ஸ்லீப்பர்கள் விநியோகம் செய்யப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இரு தண்டவாளங்களைத் தாங்கிப் பிடிக்கும் இவை வலுவற்றுப்போனால் விபத்து நேரிடுவது தவிர்க்க முடியாதது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ரயில்வே அமைச்சர், இத்தகைய அடிப்படையான விவகாரங்களைக் கவனத்தில்கொண்டு செயல்பட்டால் ரயில் விபத்துகளைத் தவிர்க்கலாம். 2009-10-ம் ஆண்டில் ரயில் விபத்துகளில் பலியானோர் 225 பேர். இந்த நிதியாண்டில் ஜனவரி வரை ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 336-ஆக உயர்ந்துவிட்டது. இந்த வேதனையை சாதனையாகக் கொள்ள முடியாது என்பதை ரயில்வே அதிகாரிகளும் அமைச்சகமும் உணர்ந்தால்தான் விபத்துகள் குறையும்.

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

சென்னை: ரயில்கள் புறப்படும் நேரம்


சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள்எண் விரைவு ரயிலின் பெயர் புறப்படும் நேரம்2675 சென்னை - கோயம்புத்தூர் கோவை விரைவு ரயில் காலை 6.15. 6057 சென்னை - திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் காலை 6.25.2639 சென்னை - பெங்களூர் பிருந்தாவன் விரைவு ரயில் காலை 7.15.2842 சென்னை - ஹவுரா கொரமண்டல் ரயில் காலை 8.45.6627 சென்னை - மங்களூர் வெஸ்ட் கோஸ்ட் ரயில் காலை 11.30.1042 சென்னை - மும்பை சிஎஸ்டி விரைவு ரயில் காலை 11.55.2609 சென்னை - பெங்களூர் விரைவு ரயில் பகல் 1.35.6053 சென்னை - திருப்பதி விரைவு ரயில் பகல் 1.50.2679 சென்னை - கோயம்புத்தூர் இன்டர்சிட்டி விரைவு ரயில் பிற்பகல் 2.30.2695 சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயில் மாலை 3.25.              2607 சென்னை - பெங்களூர் லால்பாக் விரைவு ரயில் மாலை 3.35.6203 சென்னை - திருப்பதி கருடாத்ரி விரைவு ரயில் மாலை 4.35.6089 சென்னை - திருப்பத்தூர் ஏலகிரி விரைவு ரயில் மாலை 5.55.2615 சென்னை - புதுதில்லி கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் இரவு 7.15.2671 சென்னை - மேட்டுப்பாளையம் நீலகிரி விரைவு ரயில் இரவு 9.00.2601 சென்னை - மங்களூர் மெயில் இரவு 8.25.6041 சென்னை - ஆலப்புழை விரைவு ரயில் இரவு 9.15.6222 சென்னை - மைசூர் காவேரி விரைவு ரயில் இரவு 9.30.2621 சென்னை - புதுதில்லி தமிழ்நாடு விரைவு ரயில் இரவு 10.00.2681 சென்னை - கோயம்புத்தூர் சேரன் விரைவு ரயில் இரவு 10.10.6669 சென்னை - ஈரோடு ஏற்காடு விரைவு ரயில் இரவு 10.40.1028 சென்னை - மும்பை சிஎஸ்டி மெயில் இரவு 10.50.2657 சென்னை - பெங்களூர் விரைவு ரயில் இரவு 11.15.2840 சென்னை - ஹவுரா விரைவு ரயில் இரவு 11.40.2691 சென்னை - ஸ்ரீ சத்ய சாயி பிரசாந்தி நிலையம்       (வாராந்திர- வெள்ளிக்கிழமைகளில்) விரைவு ரயில் இரவு 11.30.எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்கள்103 சென்னை - புதுச்சேரி விரைவு பாசஞ்சர் ரயில் காலை 6.35.2164 சென்னை - தாதர் விரைவு ரயில் காலை 6.50.6127 சென்னை - குருவாயூர் விரைவு ரயில் காலை 7.50.6853 சென்னை - திருச்சி விரைவு ரயில் காலை 8.20.2635 சென்னை - மதுரை வைகை விரைவு ரயில் பகல் 12.40.6735 சென்னை - திருச்செந்தூர் (வாராந்திர- வெள்ளி) ரயில் பிற்பகல் 2.40.2605 சென்னை - திருச்சி பல்லவன் விரைவு ரயில் மாலை 3.45.6713 சென்னை - ராமேசுவரம் விரைவு ரயில் மாலை 5.00.2633 சென்னை - கன்னியாகுமரி விரைவு ரயில் மாலை 5.30.6115 சென்னை - புதுச்சேரி விரைவு ரயில் மாலை 6.10.2667 சென்னை - நாகர்கோவில் (வாராந்திர-வியாழன்) ரயில் மாலை 6.50.6723 சென்னை - திருவனந்தபுரம் அனந்தபுரி விரைவு ரயில் இரவு 7.15.2693 சென்னை - தூத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில் இரவு 7.35.2661 சென்னை - செங்கோட்டை விரைவு ரயில் இரவு 8.05.2631 சென்னை - நெல்லை விரைவு ரயில் இரவு 8.50.2637 சென்னை - மதுரை பாண்டியன் விரைவு ரயில் இரவு 9.15.6701 சென்னை - ராமேசுவரம் விரைவு ரயில் இரவு 9.40.6177 சென்னை - கும்பகோணம் மலைக்கோட்டை ரயில் இரவு 10.30.2793 சென்னை - மதுரை (வாரம் இருமுறை- வெள்ளி,ஞாயிறு) இரவு 10.45.1063 சென்னை - சேலம் விரைவு ரயில் இரவு 11.30.6175 சென்னை - நாகூர் விரைவு ரயில் இரவு 11.35.

திங்கள், 17 மே, 2010

தில்லி ரயில் நிலை​யத்​தில் கூட்ட நெரிச​லில் சிக்கி 2 பேர் சாவு



புது தில்லி,​​ மே 16: ​ தில்லி ரயில் நிலை​யத்​தில் ஞாயிற்​றுக்​கி​ழமை கூட்ட நெரிச​லில் சிக்கி பெண்​ணும்,​​ சிறு​வ​னும் உயி​ரி​ழந்​த​னர்;​ 8 பேர் காய​ம​டைந்​த​னர்.​க​டைசி நிமி​ஷத்​தில்,​​ 2 ரயில்​கள் புறப்​ப​டும் பிளாட்​பார்ம்​கள் மாற்​றப்​பட்​ட​தால்,​​ ரயி​லைப் பிடிப்​ப​தற்​காக பய​ணி​கள் முண்​டி​ய​டித்​துக் கொண்டு ஓடி​னர்.​ இத​னால் இந்த துய​ரச் சம்​ப​வம் நிகழ்ந்​துள்​ளது.​ப​லி​யான பெண் பகல்​பூ​ரைச் சேர்ந்த சோனி ​(35) என்று கண்​ட​றி​யப்​பட்​டுள்​ளது.​ இறந்​து​போன சிறு​வ​னுக்கு சுமார் 10 வயது இருக்​கும்,​​ அவன் யார் என்​பது அடை​யா​ளம் காணப்​ப​ட​வில்லை.​இந்த சம்​ப​வம் குறித்து விசா​ரணை நடத்தி,​​ இதற்​குக் கார​ண​மா​ன​வர்​கள் மீது கடும் நட​வ​டிக்கை எடுக்​கு​மாறு ரயில்வே உய​ர​தி​கா​ரி​க​ளுக்கு அத்​துறை அமைச்​சர் மம்தா பானர்ஜி உத்​த​ர​விட்​டுள்​ளார்.​எப்​போ​துமே கூட்​டம் அதி​கம் காணப்​ப​டும் தில்லி ரயில் நிலை​யத்​தில்,​​ கோடை விடு​முறை காலம் என்​ப​தால் ஞாயிற்​றுக்​கி​ழமை பய​ணி​கள் கூட்​டம் சற்று அதி​கம் காணப்​பட்​டது.​பிற்​ப​கல் 2.45 மணி​ய​ள​வில்,​​ தில்​லி​யில் இருந்து முஸô​பர்​பூர் செல்​லும் சம்​பூ​ரண கிராந்தி ​(முழுப் புரட்சி)​ எக்ஸ்​பி​ரஸ்,​​ தில்​லி​யில் இருந்து பகல்​பூர் செல்​லும் விக்​ர​ம​சீலா எக்ஸ்​பி​ரஸ் ஆகி​யவை வரும் பிளாட்​பா​ரம்​கள் மாறு​வ​தாக அறி​விப்பு வெளி​யா​னது.​அந்த ரயில்​கள் கிளம்ப சில நிமி​ஷங்​களே இருந்​த​தால்,​​ பய​ணி​கள் அனை​வ​ரும் தங்​கள் பொருள்​க​ளு​டன் முண்​டி​ய​டித்​துக் கொண்டு ஓடி​னர்.​ இத​னால் 12 மற்​றும் 13-வது பிளாட்​பார்ம்​க​ளில் கடும் கூட்ட நெரி​சல் ஏற்​பட்​டது.​÷இ​தில் பலர் கீழே விழுந்து மிதி​பட்​ட​னர்,​​ நெரி​ச​லால் சிலர் மூச்​சுத்​தி​ண​றல் ஏற்​பட்டு மயக்​க​ம​டைந்​த​னர்.​ இதில் பகல்​பூ​ரைச் சேர்ந்த சோனி என்ற பெண்​ணும்,​​ ஒரு சிறு​வ​னும் உயி​ரி​ழந்​த​னர்.​ மேலும் மூன்று பெண்​கள் உள்​பட 8 பேர் காய​ம​டைந்​த​னர்.​ர​யில்வே துறை​யின் அலட்​சி​ய​மான போக்​கால்​தான் 2 பேர் உயி​ரி​ழந்​த​தாக பய​ணி​கள் பலர் குற்​றம்​சாட்​டி​னர்.​இது குறித்து ரயில்வே கோட்ட மேலா​ளர் அஸ்​வின் லுகானி கூறி​யது:​13-வது பிளாட்​பார்​மில் வர​வேண்​டிய சம்​பூ​ரண கிராந்தி எக்ஸ்​பி​ரஸ் 12-வது பிளாட்​பார்​மி​லும்,​​ 12-வதில் வர​வேண்​டிய விக்​ர​ம​சீலா எக்ஸ்​பி​ரஸ் 13-வது பிளாட்​பார்​மி​லும் மாறி வந்​து​விட்​டது.​இந்த இரு ரயில்​க​ளுமே சுமார் 2.45 மணி​ய​ள​வில் கிளம்ப வேண்​டும் என்​ப​தால் கடைசி நேரத்​தில் பிளாட்​பார்ம் மாற்ற அறி​விப்பை வெளி​யிட வேண்​டி​ய​தா​யிற்று என்​றார் அவர்.​"பிளாட்​பார்ம் மாற்ற அறி​விப்பு வந்து உடன் பய​ணி​க​ளில் ஒரு​வரை ஒரு​வர் தள்ளி விட்டு அடுத்த பிளாட்​பார்​முக்கு மாற முயன்​ற​னர்.​ பலர் பெரிய சூட்​கேஸ்​கள்,​​ பேக்​கு​களை வைத்​தி​ருந்​த​தால் அது மற்​ற​வர்​கள் மீது இடித்து கீழே தள்​ளி​யது.​ பய​ணி​கள் செல்​வ​தற்​காக அமைக்​கப்​பட்ட பாலத்​தில் கூட்ட நெரி​சல் ஏற்​பட்​ட​தில் அதில் இருந்து ஒரு​வர் கீழே விழுந்​து​விட்​டார்.​ காய​ம​டைந்​த​வர்​கள் மருத்​து​வ​ம​னை​க​ளில் சேர்க்​கப்​பட்​டுள்​ள​னர்' என்று மற்​றொரு ரயில்வே அதி​காரி தெரி​வித்​தார்.​கடும் நட​வ​டிக்கை இந்த சம்​ப​வத்​துக்கு கார​ண​மா​ன​வர்​கள் மீது கடும் நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என்று ரயில்வே அமைச்​சர் மம்தா பானர்ஜி கூறி​யுள்​ளார்.​இது தொடர்​பாக விசா​ரணை நடத்த 3 நபர்​குழு ஒன்​றை​யும் அவர் அமைத்​துள்​ளார்.​உ ​யி​ரி​ழந்​த​வர்​க​ளின் குடும்​பத்​துக்கு தலா ரூ.​ 2 லட்​ச​மும்,​​ காய​ம​டைந்து மருத்​து​வ​ம​னை​யில் உள்ள 8 பேருக்கு தலா ரூ.​ 50 ஆயி​ர​மும்,​​ லேசாக காய​ம​டைந்​த​வர்​க​ளுக்கு ரூ.​ 15 ஆயி​ர​மும் ரயில்வே துறை​யால் வழங்​கப்​ப​டும் என்​றும் மம்தா அறி​வித்​துள்​ளார்.​
கருத்துக்கள்

இவ்வாறு நடைமேடை மாறுவதை அறிவிப்பதுமுதல் முறை யல்ல. எனக்கும் நான்கைந்து முறை இந்தஅவதி ஏற்பட்டுள்ளது. ஒரு முறை மதுரையில் மாறி மாறி 5 முறை நடைமேடை மாறுவதாக அறிவித்து அங்கும் இங்கும் அலைய விட்டார்கள். அதுபோல் கும்பகோணத்தில இருந்து சென்னை வருகையில் திருச்சிராப்பள்ளியில் மலைக்கோட்டை உடனே வேறு நடைமேடையில் இருந்து புறப்படுவதாக அறிவித்து அனைவரையும் அல்லல் படுத்தினர். ஆனால், கூட்ட நெரிசலில் சாவு ஏற்பட்ட முதல் துன்ப நிகழ்வாக இஃது இருக்கலாம். எனவே, இந்நிகழ்விற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பொதுவாக நாடு முழுமையும் இவ்வாறு அவ்வப்பொழுது நடைமேடை மாற்றம் முன்கூட்டி முடிவெடு்க்காமல் பயணிகளையும் வரவேற்கவும் வழியனுப்பவும வந்திருப்பவர்களையும் தொல்லைக்கு ஆளாக்கும் கெடுபிடி இடர்களைக் களைய தொடர்வண்டித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/17/2010 2:33:00 AM

இதெல்லாம் படிக்கிறபோதே நமக்கு பரிதாபமாக இருக்கிறதென்றால்,பாவம் அந்த இரண்டு ஜீவன்களும் குறிப்பாக அந்த சிறுவன் என்ன பாடுபட்டிருப்பான் ,உண்மையில் அந்த அதிகாரியை டிஸ்மிஸ் செய்யவேண்டும்,இல்லாவிட்டால் இதுமாதிரியான அலட்சிய அறிவிப்பை செய்யமுடியாது

By புண்ணாக்கு
5/17/2010 2:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

வியாழன், 25 பிப்ரவரி, 2010

மேற்கு வங்க தேர்தலை மையமாகக் கொண்ட பட்ஜெட்டா?



புது தில்லி, பிப்.24: மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் மேற்கு வங்க மாநிலத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் எனக் கூறப்படுவதால் மம்தா பானர்ஜி மிகுந்த வேதனையடைந்துள்ளார்.பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தனது வேதனையை அவர் வெளியிட்டார். இத்தகைய குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் ரீதியில் கூறப்படுபவை. அதே பாணியிலான கேள்வியை செய்தியாளர்களாகிய நீங்களும் கேட்காதீர்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு மேற்கு வங்க மாநிலத்துக்கு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளனவா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் இவ்விதம் பதிலளித்தார்.மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில் பல எம்பிக்கள் குறுக்கிட்டுக் கொண்டேயிருந்தனர். தங்கள் தொகுதிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டேயிருந்தனர். 800 மக்கள் பிரதிநிதிகளையும் ஒரு பட்ஜெட்டில் திருப்திபடுத்த இயலாது என்று அப்போது பானர்ஜி குறிப்பிட்டார். வேகன் தொழிற்சாலை ஒரிசா, ஆந்திரம் மற்றும் அசாமில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தொழிற்சாலைகள் பிற மாநிலங்களில்தான் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக மேற்கு வங்க மாநிலத்தைப் புறக்கணித்துவிட முடியாது. மற்ற அமைச்சர்கள் தங்கள் மாநிலங்களுக்கு எந்த வகையில் முக்கியத்துவம் அளிக்கிறார்களோ அதேபோலத்தான் தானும் செயல்படுவதாக அவர் கூறினார்.மேற்கு வங்க மாநிலம் வளர்ச்சிப் பணிகளிலிருந்து முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என்று அவர் கேள்வியெழுப்பினார்.கொல்கத்தா மெட்ரோ ரயில் இணைப்பு விரிவாக்கம், துறைமுக இணைப்புக்கு விரிவாக்கம், ரவீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த நாளை ஒட்டி சம்ஸ்கிருத எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம், பாரத தீர்த்த யாத்திரை ரயில் சேவை உள்ளிட்டவை மேற்கு வங்க மாநிலத்துக்காக அறிவிக்கப்பட்ட சிறப்புத் திட்டங்களாகும்.
கருத்துக்கள்

இரவீந்திர நாத தாகூர் அவர்களின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வங்கமொழியின் பெயரால் தொடர்வண்டி இயக்கவது அல்லது அவரது நூலான கீதாஞ்சலியின் பெயரால் இயக்குவது என்பது பொருத்தமாக இருக்கும். சமற்கிருதத்தின் பெயரால் இயக்குவதை நிறுத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/25/2010 3:10:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
பிராந்திய மொழிகளில் ரயில்வே தேர்வு: மம்தா அறிவிப்பு



புது தில்லி, பிப். 24: ரயில்வே தேர்வுகள் பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும் என்று மம்தா அறிவித்தார்.நாடாளுமன்றத்தில் புதன்கிழமை ரயில்வே பட்ஜெட் உரையில் இது குறித்து அவர் மேலும் கூறியது:ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வுகள் அனைத்தும் ஒரே நாளில் நடத்தப்படும். பணியாளர்கள் தேர்வு முறைகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்படும்.இனி மாநில மொழிகளிலும் ரயில்வே தேர்வுகளை எழுதலாம். ஹிந்தி, உருது, ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் கேள்வித்தாள்கள் தயாரிக்கப்படும் என்று மம்தா தெரிவித்தார்.முன்னதாக கடந்த நவம்பரில் மாநில மொழிகளிலும் ரயில்வே தேர்வுகள் நடத்தப்படும் என்று மம்தா உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தேர்வுக் கட்டணம் இல்லை: பொருளாதார ரீதியில் பின் தங்கிய, அதாவது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்துக்கு உள்பட்ட மகளிர் தேர்வுக் கட்டணம் இல்லாமலேயே ரயில்வே தேர்வு எழுதலாம் என்றும் பட்ஜெட் உரையில் மம்தா அறிவித்தார்.
கருத்துக்கள்

தாய்மொழிகளில் தேர்வு எழுத வாய்ப்புநல்கும் மம்தாவிற்குப் பாராட்டுகள். இதனை அனைத்துத் துறைகளும் தனியார் நிறுவனங்களும் பயன்படுத்தி மொழிச் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் தேசிய மொழிகளின் உரிமைகள் காக்கப்பட்டு இந்தியக் கண்டத்தின் ஒற்றுமையும் பேணப்படும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/25/2010 2:55:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

புதன், 23 டிசம்பர், 2009

மாநிலங்கள் பிரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்!: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்



சென்னை, ​​ டிச.​ 22: ""மாநிலங்கள் பிரியாமல் மத்திய அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்'' என்று தமிழக முதல்வர் கருணாநிதி வலியுறுத்தினார்.சென்னை சென்ட்ரல்}​ மங்களூர் விரைவு ரயில் ​(வாரத்தில் 6 நாள்)​ நீட்டிப்பு சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார்.இதன்பின் விழா மேடையில் இருந்தவாறு "விடியோ கான்பரன்ஸ்' முறையில்,​​ திருநெல்வேலி}​ பிலாஸ்பூர்,​​ ஜம்முதாவி}மதுரை ரயில் சேவை திருநெல்வேலி வரை நீட்டிப்பு ​(வாரம் இருமுறை)​ மற்றும் ராமேசுவரம்}​ கன்னியாகுமரி ஆகிய ​அதிவிரைவு ரயில் சேவைகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.​ அப்போது அவர் பேசியதாவது:தமிழகத்தில் ரயில் வசதிகள் மேம்படுத்தப்பட்டாலும்,​​ இன்னமும் அதிகமான அளவுக்கு பல ஊர்களுக்கு இந்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.இப்போது ஜப்பான்,​​ அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தண்டவாளத்தில் ரயில் செல்வது இல்லை.​ அதற்கும் நான்கு விரல் உயரத்துக்கும் மேலே ரயில் போகிறது.​ சில நேரங்களில் நிர்வாகத்துக்கும்,​​ அரசுக்கும் தொடர்பு இல்லாமல் இயங்குவதைப் போல ரயிலும் போகிறது.​ இத்தகைய விஞ்ஞான வளர்ச்சியால் வேகமான,​​ ​எளிதான ரயில் சேவை வசதி வர வேண்டும்.பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் சேர்ந்ததுதான் ஒரு ரயில்.​ நாம் பெட்டியில் ​இருக்கிறோம். ​ நாம் ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்தால் முன்னால் இருக்கும் என்ஜின் இழுத்துச் செல்கிறது.​ இதுதான் ஒரு நாட்டின் அமைப்பு.தில்லி "என்ஜின்'...இந்தியாவைப் பொறுத்தவரை நமக்கு என்ஜினாக இருப்பது தில்லி.​ அது நம்மை இழுத்துச் செல்கிறது.​ அந்த என்ஜினுடன் இணைக்கப்பட்ட பெட்டிகளாகத் தான் மாநிலங்கள் உள்ளன.​ அதில் ஒரு மாநிலம் தான் தமிழகம்.நான் இப்படிச் சொல்லுகிற காரணத்தால்,​​ இந்தப் பெட்டி தனியாக வர வேண்டும் என்பதல்ல.​ சில பெட்டிகளிலே கோளாறு உள்ளது.​ அந்தக் கோளாறை,​​ நீக்கி அந்த பெட்டிகளை தன்னோடு இழுத்துச் செல்லும் லாவகத்தை இந்தியாவை ஆளும் மத்திய அரசு பெற வேண்டும்.அதே நேரத்தில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று கழன்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.​ கழன்றுபோனால் பிறகு இந்தியா என்ற ஒரு தேசிய நிலை நமக்குக் ​கிட்டாமல் போய் விடும்.இந்தியா பெரிய நாடாக வலிமையாக இருப்பதால்தான் வல்லரசுகள் நம்மோடு கைகோர்த்து வருகின்றன.​ நம்மோடு நட்புடன் பழகி,​​ நாம் ஆதரித்தால் தான் உலக நாடுகளில் ஒரு நாடாக மலரும் நிலை உள்ளது.​ இதை மற்ற நாடுகள் உணர்ந்துள்ளன.அந்த பலத்தை,​​ இந்த ரயில் பெட்டிகள் மூலம் நாம் உணர வேண்டும்.​ பெட்டிகளை இழந்தால் என்ஜின் மட்டும் தனியாக போக முடியாது.​ தனியாகப் போகும் என்ஜினில் யாரும் ஏறமாட்டார்கள்.எனவே,​​ பெட்டிகளையும் பாதுகாத்து என்ஜினையும் பாதுகாத்து ரயிலை இயக்க வேண்டும்.​ ரயில் பாதையால் அனைத்து பகுதிகளையும் இணைத்தால் அது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்'' என்றார் முதல்வர் கருணாநிதி.இந்த விழாவில் ரயில்வே இணை அமைச்சர் இ.​ அகமது,​​ மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்,​​ கனிமொழி எம்.பி,​​ மாநகர மேயர் மா.​ சுப்பிரமணியன்,​​ தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிரிஷன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

நம்மோடு நட்புடன் பழகி,​​ நாம் ஆதரித்தால் தான் உலக நாடுகளில் ஒரு நாடாக மலரும் நிலை உள்ளது.​ ஆனால் நம்முடன் நட்புடன் பழகிய ஈழத் தமிழ் நாட்டைச் சிதைத்தது ஏன்? நாம் ஆதரித்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் என்ற உண்மையை உரைத்ததற்குப் பாராட்டுகள். ஆனால் நட்பு நாடி வந்தவர்களை விரட்டி யடித்து விட்டு வஞ்சகர்களுடன் கைகோத்துக் கொத்துக் கொத்தாகவும் எரி குண்டுகள் மூலமும் வஞ்சகச் செயல்கள் மூலமும், வெண்கொடி ஏந்தி வரச் செய்தும் அழித்தொழிததது ஏன்? மனச் சான்று எட்டிப பார்ப்பதால் காங்கிரசுடன் உறவு முறியும் பொழுது உண்மை வெளிவரும். ஆனால் உயிரிழந்த நம்மவர்கள் மீண்டு வருவார்களா? உடலுறுப்புகளை இழந்தோரும் உடைமைகளை இழந்தோரும மீள் நிலைக்குத் திரும்புவார்களா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/23/2009 3:21:00 AM

பெட்டிகளில் பயணம் செய்யப் பதிவு செய்தோர் மிகுதியாக இருக்கும் பொழுது கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதில்லையா? அது போல் சூழலுக்கேற்பத்தான் முடிவெடுக்க வேண்டும். உவமைகள் செய்தியைப் புரிந்து கொள்ள உதவலாமே தவிர உண்மையாகிவிடாது. தமிழ் நாட்டைப் பிரிக்கலாமா அல்லது வேண்டாவா எனக் கூறும் உரிமை நமக்கு உண்டு. பிற மாநிலங்களைப் பொறுத்தவரை அந்தந்த மாநிலத்தவர்தான் முடிவெடுக்க வேண்டும். தலையிடும் உரிமை பிற மாநிலத்தவருக்குக் கிடையாது. 1947க்குப் பின்னர்ப் புதிய மாநிலங்கள் பல உருவாகியிருக்கும் பொழுது மேலும் மாநிலங்கள் பிரிக்கப்படுவது கொலைபாதகச் செயலன்று. அதேநேரம் பிரித்துத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமுமன்று. எனவே, உரிய மாநிலததவர் அமைதியான வழீயில் அணுகி உரிய தீர்வுகளை எட்ட வேண்டும். பிற மாநிலத்தவர் தலையிடுவதற்கான உரிமையைத் தரக் கூடாது. மாநிலங்களைப் பிரிக்கக் கூடாது என்றால்தான் இந்தியன் என்ற தேசப்பற்று முத்திரை கிடைக்கும் என எண்ணுவது அறியாமை அல்லவா?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/23/2009 3:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்க

செவ்வாய், 22 டிசம்பர், 2009

தலையங்கம்: 'உள்நோக்கம்' சரியில்லை!



நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை இப்படி ஓர் அதிசயம் நடந்தது இல்லை.​ தனக்கு முன் ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் ஆட்சிக்காலம் ​(2004-2009) ரயில்வே துறையின் பொற்காலம் அல்ல என்று நிரூபிக்க வெள்ளை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் இப்போதைய ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி.லாலு பிரசாதின் ஆட்சிக்காலத்தில் ரயில்வே நிர்வாகம்,​​ அதிலும் குறிப்பாக நிதி நிர்வாகம் எப்படி இருந்தது என்று அறிய "ஆலோசகர்' ஒருவரை நியமித்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.​ அறிக்கை தெரிவிக்கும் சில முக்கிய அம்சங்கள் என்ன தெரியுமா?லாலு ஆட்சிக் காலத்தில் வருவாய்க்கணக்கில் மொத்தமாக 96,000 கோடி ரூபாய் உபரி கிடைத்ததாகக் கூறப்பட்டது தவறான தகவல்.​ உண்மையில் அந்தத் தொகை 39,500 கோடி ரூபாய்தானாம்.புதிய வகை கணக்கீட்டு முறையால்தான் இந்த உபரி கிடைத்திருக்கிறது என்றும் அத்துடன் ஆறாவது நிதிக்குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப ரயில்வே ஊழியர்களுக்குத் தர வேண்டிய ஊதியம்,​​ நிலுவை போன்றவை கழித்துக் காட்டப்படாததாலும்தான் உபரி அதிகமாகவே கணக்கில் வந்தது என்கிறது அறிக்கை.லாலு பிரசாத் காலத்தில் போக்குவரத்து வளர்ச்சி வீதம் சராசரிக்கும் குறைவுதான்.​ அத்துடன் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருள் உற்பத்திக்கு ​(ஜி.டி.பி.)​ ரயில்வே துறையின் பங்களிப்பு வெறும் 1.15 சதவீதமாகத்தான் இருந்தது.சரக்குப் போக்குவரத்து இனத்தில் வருவாய் அதிகரித்தது;​ சரக்கு ரயில் பெட்டிகளின் கொள்திறன் கூட்டப்பட்டதால் வருவாயும் உயர்ந்தது.​ சரக்கு ரயில் போய் நிற்கும் கடைசி நிலையத்தில் அதிக நாள்கள் அதைத் தங்கவிடாமல் பெட்டிகளைக் காலி செய்து உடனே பயன்பாட்டுக்குக் கொண்டு வந்ததாலும் வருவாய் உயர்ந்தது.​ பராமரிப்புப் பணிகளை அதிகப்படுத்தியதும் அதற்கு ஒரு காரணம்.பயணிகள் ரயில் பயன்பாடும் அதிகரித்தது,​​ ஆனால் சர்வதேச செயல்திறனுக்கு இணையாக இந்தியாவில் இது உயரவில்லை.​ பயணிகள் போக்குவரத்துக்கு நாட்டில் இருந்த தேவைக்கு ஏற்பவும் இது இல்லை.​ இதனால் பல்வேறு நீண்டதூர ரயில்களில் எல்லா பருவங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தபடியே இருக்கிறது.சரக்கு,​​ பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றே தொடர்ந்து பட்ஜெட்டின்போது கூறப்பட்டாலும் சரக்குக் கட்டணம் சராசரியாக 37% உயர்ந்திருக்கிறது.​ உணவுப் பண்டங்களைக் கொண்டு செல்வதற்கான கட்டணம் 44%-ம்,​​ உரங்களை ஏற்றிச் செல்வதற்கான கட்டணம் 35%-ம் இதே காலத்தில் ஏறியிருக்கிறது.அத்துடன் பயணிகள் ரயில் கட்டணத்தில் முதல் வகுப்பு பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டது.​ தட்கல் முறையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.​ வெறும் எக்ஸ்பிரஸ்,​​ மெயில் ரயில்கள் சூப்பர்-ஃபாஸ்ட் ரயில்களாக அறிவிக்கப்பட்டு உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டது.​ இதனால் ரயில்வே துறைக்கு வருவாய் உயர்ந்தது.அதாவது கட்டணங்களை உயர்த்தவில்லை என்பது உண்மையல்ல,​​ மறைமுகமாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டன,​​ அந்தச் சுமை பயணிகள் மீது விழுந்தது.லாலு பிரசாத் ஆட்சிக் காலத்தில் விபத்துகளின் எண்ணிக்கையும் ரயில்களில் நடைபெறும் குற்றச் செயல்கள் எண்ணிக்கையும் குறைந்தன என்பது உண்மை.​ அதேபோல ரயில்வே பணியாளர்களின் உற்பத்தித் திறனும் கணிசமாக அதிகரித்தது.குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் திட்டமிட்ட செலவு கணிசமாக அதிகரித்து 135% என்ற உயர் அளவை எட்டியது.​ இது ஆரோக்கியமான ஒரு குறியீடாகும்.இவ்வாறு முந்தைய ஆட்சியில் ரயில்வே துறையின் நன்மை தீமைகளைப் பட்டியலிட்டிருக்கிறது வெள்ளை அறிக்கை.லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராகப் பதவி வகித்ததும் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான்.​ எனவே முந்தைய ஆட்சியில் மிகப்பெரிய மோசடி நடந்திருக்கிறது,​​ மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்,​​ முந்தைய ரயில்வே அமைச்சர் தவறான தகவலை அளித்திருக்கிறார் என்று மறைமுகமாகத் தெரிவித்திருக்கிறார் மம்தா பானர்ஜி.​ நாடாளுமன்றத்துக்கே தவறான தகவலைத் தந்தார் லாலு பிரசாத் என்றுகூட உரிமைப் பிரச்னை கொண்டுவரப்படலாம்.நம் கேள்வி அதுவல்ல;​ சிறந்த நிர்வாக நிபுணர் என்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாராட்டுப் பெற்று,​​ வெளிநாட்டு நிர்வாகவியல் மாணவர்களுக்கெல்லாம் பாடம் நடத்திய அளவுக்கு உயர்ந்த லாலு பிரசாதை நிர்வாகம் தெரியாதவர் என்று வெள்ளை அறிக்கை மூலம் தோல் உரிக்க வேண்டிய அவசியம்தான் என்ன?​ இந்தத் தவறுகளுக்கு எல்லாம் பிரதமரும் பொறுப்பேற்க வேண்டாமா?​ ​பிரதமர் மன்மோகன் சிங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியும் நாட்டுக்கும் மக்களுக்கும் இதற்கு ​ விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டவர்கள்.​ கூட்டணிக் கட்சிகள் மாறினாலும் ஆட்சியில் தொடர்வது என்னவோ ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதானே?​ அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்பது அதுதானே?இதேபோல பிற துறைகளுக்கும் வெள்ளை அறிக்கை வெளியிடுவார்களா?​ சேற்றை வாரி இறைப்பதற்கு வெள்ளை அறிக்கை என்று பெயர் போலிருக்கிறது....
கருத்துக்கள்

தடி எடுத்தவன் தண்டல்காரன் என்னும் நிலை காங்கிரசுக் கூட்டணியில் இருப்பதை நன்றாகத் தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள். பாராட்டுகள்! ஆனால், இவர்கள் கைகளில் ஆட்சிப பொறுப்பை விடுகிறோமே என்று மக்கள் என்று வெட்கப்படப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/22/2009 3:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 9 நவம்பர், 2009

மாநில நலனும் முக்கியம்!



நாடு முழுவதிலும் உள்ள ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத் தலைவர்கள் அனைவரையும் அப்பதவியிலிருந்து நீக்க ஆணை பிறப்பித்துள்ளார் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி. வாரியத் தலைவர்கள் அனைவரும் முன்பு லாலு பிரசாத் யாதவால் நியமிக்கப்பட்டவர்கள் என்பது மட்டுமன்றி, தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் வெளியான விவகாரமும் இதற்கு ஒரு காரணம். மேலும், மாநில மொழிகளில் ரயில்வே பணிக்குத் தேர்வுகள் எழுதலாம் என்று அனுமதித்துள்ள மம்தா பானர்ஜி, அதற்கேற்ப குழுக்களை மாற்றியமைக்கவும் திட்டமிடுவதாகச் சொல்லப்படுகிறது. ரயில்வே பணிக்குத் தேர்வு நடத்தி பணியில் அமர்த்தும்போது, அந்தந்த மாநிலத்தவருக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்காமல் இருந்த நிலை இதனால் மாறும் என்று எதிர்பார்க்கலாம். அப்படி நடக்குமெனில் இப்போதே மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துகள். ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வுகளில் தகுதியுள்ள இந்தியர் யாரும் கலந்துகொள்ளலாம். இருப்பினும், பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் யார், அந்த வாரியத்தில் உறுப்பினர்கள் யார் என்பதைப் பொறுத்து, சில பாரபட்சமான போக்குகள் உள்ளன என்பது வெளிப்படை. ரயில்வே தேர்வு வாரியத்தால் நியமனம் பெற்று தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களைப் பட்டியலிட்டால், அவர்களில் தமிழர்கள் 30 சதவீதம் இருந்தால் அதுவே அதிகம். பெரும்பாலும் அண்டை மாநிலத்தவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். தமிழர்கள் இத்தேர்வுகளை எழுதவில்லை என்றோ, தமிழர்களில் அத்தகுதி உள்ளவர்கள் இல்லை என்றோ அர்த்தமல்ல. ஆனாலும், அது அப்படியாகத்தான் ஆகிவருகிறது. அதேபோன்று, தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் கடைகள், உணவுக்கூடங்கள், ஓடும் ரயில்களில் உணவுவிநியோகம் எல்லாவற்றுக்கும் உரிமம் பெற்றுள்ளவர்கள் யார் யார் என்று பட்டியலிட்டாலும், தமிழர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடியதாகவே இருக்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்கள் சுண்டல், வேர்க்கடலை விற்பதோடு சரி. இந்த நிலையை மாற்றுவதற்கு மத்திய முன்னாள் ரயில்வே இணை அமைச்சர் (பாமக) ஆர்.வேலு சில முயற்சிகளை மேற்கொண்டும் முடியவில்லை. சேலம் கோட்டத்தை உருவாக்க அவர் எதிர்கொண்ட சிக்கல்கள் ஏராளம். சேலம் ரயில்வே கோட்டத்தில் கோவையைச் சேர்ப்பதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது. சென்னை-திருச்சி அகலரயில்பாதை ஆவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னை-திருவனந்தபுரம் அகலரயில்பாதை ஆகிவிட்டது. மின்பாதையாக மாற்றப்பட்டது. தமிழகத்தில் விழுப்புரம்- திருச்சி ரயில்வே மின்பாதைப் பணியே இன்னும் முடியவில்லை. இதற்கு முதன்மையான காரணம், தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே கோட்டங்களில், ரயில்வே வாரியம் நியமனம் செய்யும் ஊழியர்களில் தமிழர்கள் பெரும்பான்மையினராக இல்லை. ஆகவே, தமிழ்நாட்டு நலன் கருதும் திட்டங்களை முன்வைக்கவோ அல்லது புறக்கணிக்கப்படும்போது குரல் எழுப்பவோ அல்லது திட்டநிதியை ஒதுக்குவதில் தமிழகத்துக்கு முன்னுரிமை கொடுக்கவோ ஆளில்லை. தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே நிர்வாகத்தில் தமிழர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்று சொல்வதன் மூலம், மும்பை நவநிர்மாண் சிவசேனா சொல்வதைப்போல தமிழ் மண் தமிழருக்கே என்று சொல்வது அல்ல நோக்கம். தமிழ் மண்ணில் தமிழர்தான் வாழவேண்டும் என்கிற கோரிக்கை ஏற்புடையதல்லதான். ஆனால், தமிழ் மண்ணில் தமிழருக்கு வாய்ப்பில்லை என்றால் அது அவலம். அந்த அவலம் பிரிவினைவாதத்துக்கு வித்திடும் அபாயமாகக்கூட மாறிவிடும். தமிழ்நாடு என்று மட்டுமல்ல, ஒவ்வொரு மாநிலத்திலும் ரயில்வே பணிகள் மட்டுமன்றி மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் அந்தந்த மாநிலத்தவருக்கு குறிப்பிட்ட விழுக்காடு ஒதுக்கப்பட்டால், பொதுவான நல்லுணர்வை வலுப்படுத்த உதவும். அந்தந்த மாநில மக்களின் நலனும், மாநிலத்தின் நலனும் பாதுகாக்கப்படும். அகில இந்திய மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வுகளில் 15 சதவீத இடங்கள் மட்டுமே பிற மாநிலத்தவருக்காக ஒதுக்கப்படுகின்றன. தேசிய பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதம் அந்தந்த மாநிலத்தவருக்கும், மீதமுள்ள இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதேபோன்ற நடைமுறையை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளலாம். வாரியம் தேர்வு நடத்திப் பணியாளர்களை நியமிக்கும்போது அந்தந்த மாநிலத்தவருக்குக் குறைந்தது 85 சதவீதமாகவும் பிற மாநிலத்தவருக்கு 15 சதவீதமாகவும் பணி ஆணை வழங்கலாம். ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்திலும் அந்தந்த மாநிலத்தவர் பெரும்பான்மையாக இருக்கும்படி நியமனம் செய்யப்பட வேண்டும்.
கருத்துக்கள்

தமிழ் மண்ணில் தமிழருக்கு வாய்ப்பில்லை என்றால் அவலம் என இடித்துரைக்கும் தினமணிக்குப் பாராட்டுகள்! தொடர் வண்டித்துறை என்று மட்டுமல்ல எல்லா பணி வாய்ப்புகளிலும் இந்த அவலம்தான் உள்ளது. இதனைத் துடைத்தெறிய அரசியல் கட்சிகளை நம்பாமல் மக்கள் பாடுபட வேண்டும். 80 விழுக்காடு மாநிலத்தவர்க்கு 20 விழுக்காடு அந்தந்த மாநில மொழிகளை அறிந்த பிற மாநிலத்தவருக்கு எனப் பொது விதி வகுத்தால் மண்ணின் மைந்தர் உரிமை காப்பாற்றப்படும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By lakkuvanar Thiruvalluvan
11/9/2009 3:03:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

புதன், 21 அக்டோபர், 2009

கடற்கரை-தாம்பரம் மின் ரயில்களில் தமிழில் அறிவிப்பு



சென்னை, அக். 20: சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இயக்கப்படும் புறநகர் மின் ரயில்களில், தமிழில் ஒளிரும் எழுத்துகளுடன் செவ்வாய்க்கிழமை முதல் அறிவிப்பு செய்யப்படுகிறது.
இந்த மின் ரயில்களின் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மின்னணு பலகைகளில், அடுத்து வரும் ரயில் நிலையங்கள், நேரம் குறித்து ஆங்கிலத்தில் மட்டுமன்றி தமிழிலும் இனி அறிவிப்பு செய்யப்படும் என தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏதோ அயல்நாட்டில் தமிழில்அறிவிப்பு செய்வது போல் சொல்ல வேண்டிய கொடுமை விடுதலை இந்தியாவில் அடிமைத் தமிழுக்கு இருக்கிறது என்பது இதன் மூலம் புரிகின்றது.தொடர்வண்டித்துறையிலும் தொலை பேசித் துறை முதலான பிற மத்திய அரசு அலுவலகங்களிலும் நமசுகார் எனப் பதிவுக் குரலை ஒலிபரப்பாமல் வணக்கம் என ஒலி பரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கும் தமிழ் என்பதை இன்னும் வாய்ப்பேச்சாகச் சொல்லிக் கொண்டிராமல் செயலாக்கம் காண வேண்டும். தமிழ் நாட்டில் தமிழ் கடைநிலை மொழியாக இருக்கும் அவல நிலையை உடனே போக்க வேண்டும். தமிழுக்கு மதிப்பு தந்தால் தமிழன் தானாக உயருவான். தமிழனை உயர்த்தினாலும் தமிழ் வளம் பெறும். இரண்டும் இணையாக நடைபெற வேண்ணடும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/21/2009 2:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 6 அக்டோபர், 2009

தாய்மொழியில் ரயில்வே தேர்வு எழுதலாம்: அமைச்சர் மம்தா அறிவிப்பு



சிலிகுரி, அக். 5: இனி ரயில்வே தேர்வுகளை அவரவர் தாய்மொழியிலேயே எழுதலாம் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். சிலிகுரியில் புதிய ரயில் சேவையைத் திங்கள்கிழமை தொடங்கிவைத்து மம்தா பானர்ஜி கூறியதாவது: சிலிகுரியில் ரயில்வே தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) மையம் சில மாதங்களில் செயல்படத் தொடங்கும். நாட்டின் 21-வது மையமாகும் இது. இனி அவரவர் தாய்மொழியிலேயே ரயில்வே தேர்வுகளை எழுதலாம் என்றார்.

கருத்துக்கள்

பாராட்டுகள். இதுபோல் மத்திய அரசு நடத்தும் அனைத்துத் தேர்வுகளையும் அவரவர் தாய்மொழியில் எழுத உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். சான்றாகக் கோயம்புத்தூரில் உள்ள படைப் பள்ளியான சைனிக் பள்ளி போன்று நாடெங்கும் உள்ள பள்ளிகளில் சேர இந்தி அல்லது ஆங்கிலத்திலதான் தேர்வு எழுத வேண்டும். இந்தி தெரிந்தவர்கள்தாம் படைத்துறைக்குத் தகுதியானவர்கள் என்று மத்திய அரசு செயல்படுவது நமக்கெல்லாம் இழுக்கல்லவா? தமிழ் தமிழ் என்று முழங்குவோர் இதுபற்றி யெல்லாம் கவலைப்படுவதில்லை. அவரவர் குடும்பச் சிக்கல்களில் கருத்து செலுத்தவே நேரம் போதாத பொழுது இதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கப் போகிறது? மம்தாவை அனைத்துத் துறையினரும் பின்பற்றி மண்ணின் மொழிகளை மதிக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/6/2009 2:54:00 AM

ரைல்வே தேர்வுகள் இனி அவரவர் தாய் மொழியில் எழுதலாம் என்ற முடிவு படி தமிழ் மொழியிலும், எழுதலாம் என்பது , தமிழ் மொழிக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகும். வாழ்க! தமிழ். அமைச்சர் மம்தா பநர்ஜி அவர்களுக்கு அனைத்து தமிழர்களின் நன்றி ! நல்வாழ்துக்கள்

By Ibnusalih,abudhabi,uae.
10/6/2009 12:11:00 AM

excellent

By Moorthy
10/5/2009 10:10:00 PM

Congrats! Good move Mamta. Keep it up. Also instruct to use local languages in all the Trains, Flights.

By keeran
10/5/2009 8:37:00 PM

நல்ல முயற்சி பாராட்டுக்கள் மம்தா அவர்களே. அப்படியே மக்களவையில் அழகிரிக்காக கொஞ்சம் குரல் கொடுங்களேன்!?

By மங்கைதாசன்
10/5/2009 8:31:00 PM

very good

By ravi
10/5/2009 8:15:00 PM

mamtha done a good job. congrats to mamtha

By suresh.s, qatar
10/5/2009 7:53:00 PM

WELCOME WELCOME MAM MAMTHA CONGRATULATIONS................

By tamilan
10/5/2009 7:53:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *