mamta banerjee லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
mamta banerjee லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 மார்ச், 2011

Mamta announced candiates list independently:; கூட்டணிப் பேச்சு முடியும் முன்னரே தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மம்தா

<நடிகர் சிரஞ்ஜீத்> இவ்வாறு, மீண்டும் மீண்டும் தினமணி கிரந்தத்திணிப்பில்  ஈடுபட்டு வருவது அதற்கு நல்லதல்ல. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /

கூட்டணிப் பேச்சு முடியும் முன்னரே தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மம்தா

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அக்கட்சித் தலைவரும்,
கொல்கத்தா, மார்ச் 18: மேற்கு வங்க மாநிலத்தில், பேரவைத் தேர்தலுக்கான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலை அக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை தன்னிச்சையாக வெளியிட்டார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 18 முதல் மே 10 வரை 6 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் இடதுசாரி கூட்டணியை வீழ்த்துவதற்காக இந்தத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட காங்கிரஸýம், திரிணமூல் காங்கிரஸýம் பேச்சு நடத்திவந்தன. 90-க்கும் அதிகமான தொகுதிகளை கோரிவந்த காங்கிரஸ், கடைசியாக குறைந்தபட்சம் 70 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால், வெள்ளிக்கிழமை வரை எந்த முடிவும் எட்டப்படாததால் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 64 தொகுதிகளை காங்கிரஸýக்கும், 2 தொகுதிகளை மற்றொரு கூட்டணிக் கட்சியான எஸ்யூசிஐ-க்கும் ஒதுக்கிவிட்டு மீதமுள்ள 228 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை மம்தா அறிவித்தார். திங்கள் வரை கெடு: பட்டியலை வெளியிட்டபின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒதுக்கப்பட்ட 64 தொகுதிகளுக்கு தனது வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்தால் மகிழ்ச்சி. இல்லையெனில் அந்த தொகுதிகளுக்கும் எங்கள் வேட்பாளர்களை திங்கள்கிழமை அறிவிப்போம். காங்கிரஸ் தலைவர்களுடன் வியாழக்கிழமை இரவு வரை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அப்போது காங்கிரஸ் தலைவர்கள் ஒப்புக் கொண்டதன் அடிப்படையிலேயே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பேச்சு நடத்த மேலும் கால அவகாசம் கேட்பது சரியல்ல. வேட்பு மனு விண்ணப்பங்கள் கடைசித் தொகுதி வரை சென்று சேர வேண்டியுள்ளது. போதுமான அளவு காத்திருந்தாகிவிட்டது. காங்கிரஸ் தலைமை விரும்பியபோதெல்லாம் பேசியாகிவிட்டது என்றார் மம்தா. முக்கிய வேட்பாளர்கள்:ஜாதவ்பூர் தொகுதியில் முதல்வர் புத்ததேவ் பட்டாசார்யவுக்கு எதிராக முன்னாள் தலைமைச் செயலர் மனீஷ் குப்தாவும், கார்தாஹா தொகுதியில் மாநில நிதியமைச்சர் அசிம் தாஸ் குப்தாவுக்கு எதிராக ஃபிக்கி பொதுச் செயலர் அமித் மித்ராவும் திரிணமூல் சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர நடிகை தேபஸ்ரீ ராய், நடிகர் சிரஞ்ஜீத், நாடக நடிகர் விரத்ய பாசு, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் ரச்பால் சிங், சுல்தான் சிங், சாஃப்வி, அபானி ஜோர்தார், லாலு பிரசாத் மீதான தீவன ஊழல் வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் மண்டல இயக்குநர் உபேன் பிஸ்வாஸ் உள்ளிட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 2007-ல் ஹிந்து தொழிலதிபரின் மகளைத் திருமணம் செய்தபின் மர்மமான முறையில் இறந்த ரிஸ்வானூர் ரெஹ்மானின் சகோதரர் ருக்பானூர் ரெஹ்மானுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த 42 பேருக்கும், மகளிர் 34 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மம்தா போட்டியில்லை: இந்தத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடப் போவதில்லை என ஏற்கெனவே அறிவித்திருந்தார். திரிணமூல் ஆட்சியைப் பிடித்தால் 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆவேன் என்றும் அவர் அறிவித்திருந்தார். மேலிடம் முடிவு செய்யும்- காங்கிரஸ்: மம்தாவின் முடிவு குறித்து மேற்கு வங்க காங்கிரஸ் பொறுப்பாளர் ஷகீல் அகமது கூறியதாவது: திரிணமூல் ஒதுக்கியுள்ள 64 தொகுதிகளில் போட்டியிடுவதா அல்லது 294 தொகுதிகளிலும் போட்டியிடுவதா என்பது குறித்து கட்சியின் மேலிடம் முடிவு செய்யும். திரிணமூல் காங்கிரஸýடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவே விரும்புகிறோம். இரு கட்சிகளும் இணைந்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றார் அவர். 

புதன், 9 மார்ச், 2011

Free train pass for girl students: மாணவிகளுக்கு இலவசத் தொடரிச் சீட்டு (இரயில் சீசன் டிக்கெட்)

பாராட்டுகள். நல்ல திட்டம். எனினும்  இருபால் மாணவர்களுக்குமே  இலவசச் சீட்டை வழங்கலாம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!/ 

மாணவிகளுக்கு இலவச ரயில் சீசன் டிக்கெட்


புதுதில்லி, மார்ச் 8- உள்ளூர் ரயிலில் பயணம் செய்ய மாணவிகளுக்கு கல்லூரிப் படிப்பு வரை இலவச சீசன் டிக்கெட் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.மாநிலங்களவையில் இன்று ரயில் பட்ஜெட் குறித்த விவாதத்தின்போது அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.மேலும், ரயில்வேத்துறை சார்பில் பல்வேறு நகரங்களில் பெண்களுக்கான தொழிற் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்றும் மம்தா கூறினார்.

புதன், 11 ஆகஸ்ட், 2010

தலையங்கம்: அது விபத்து, இது ஆபத்து!

 ஒரு பேச்சுக்கு யோசித்துப் பார்ப்போம். ஈழத்தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் முடிவுக்கும், கண்ணோட்டத்துக்கும் எதிரான நிலைப்பாட்டை, தமிழக அரசும், கூட்டணிக் கட்சியான திமுகவும் எடுத்திருந்தால், வெளிப்படையாக ராஜபட்ச அரசைக் கண்டித்துப் போராடவும், விடுதலைப் புலிகளுக்குச் சாதகமாகச் செயல்படவும் முனைந்திருந்தால் மத்திய அரசு அதை மௌனம் காத்து ஜீரணித்திருக்குமா? மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு இருக்கும் துணிவு தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இல்லாமல் போய்விட்டது என்பதா? இல்லை, தமிழகத்தில் திமுகவைத் தட்டிக் கேட்கத் தைரியமுள்ள மத்திய அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியையும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியையும் பகைத்துக் கொள்ளும் துணிவு இல்லை என்பதா?மத்திய அரசால் பயங்கரவாதக் கும்பல் என்று வர்ணிக்கப்பட்டு, ராணுவத்தின் மூலம் அடக்க மாநில அரசுக்கு ஒத்துழைப்பும் தரப்படும் மாவோயிஸ்ட்டுகளுடன், ஒரு மத்திய அமைச்சர் தொடர்பு வைத்துக் கொள்கிறார். பிரதமரால், இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்று வர்ணிக்கப்பட்ட அதே மாவோயிஸ்ட்டுகளின் துணையோடு ஒரு மிகப்பெரிய பேரணியை மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி மேற்கு வங்கம் லால்கரில் கூட்டுகிறார். மத்திய அரசும் பிரதமரும் மௌனமாக வேடிக்கை பார்க்கிறார்கள். "லால்கர் சலோ' என்கிற கோஷத்துடன் மாபெரும் பேரணியைத் தனது கட்சியின் சார்பில் கூட்டாமல், "மாவோயிஸ்ட்' தீவிரவாதிகளின்மீது அரசு இயந்திரம் மனிதாபிமானமற்ற முறையில் முடுக்கி விடப்பட்டிருப்பதை எதிர்க்கும் அறிவுஜீவிகளின் பெயரில் கூட்டினார் மம்தா பானர்ஜி. அந்தப் பேரணியில் பேசியவர்கள் யாருமே மாவோயிஸ்ட்டுகள் பற்றியோ, தீவிரவாதத்தைக் கைவிடுவது பற்றியோ, சமாதானம் ஏற்பட வழிகோலுவது பற்றியோ பேசினார்களா என்றால் இல்லை. எல்லோருடைய அறைகூவலும், மாவோயிஸ்ட்டுகளை அகற்றுவது பற்றியல்ல, மேற்கு வங்க ஆட்சியிலிருந்து மார்க்சிஸ்ட்டுகளை அகற்றுவது பற்றி மட்டுமே இருந்ததுதான் குறிப்பிடத்தக்க விஷயம்.மம்தா பானர்ஜியின் பேரணியின் வெற்றிக்குப் பாடுபட்டவர்கள் யார் தெரியுமா? மத்திய உள்துறை அமைச்சரால் மாவோயிஸ்ட்டுகளின் முகமூடிகள் என்று வர்ணிக்கப்பட்ட "காவல்துறை அடக்குமுறைக்கு எதிரான மக்கள் குழு' என்கிற அமைப்பினர். தலைமறைவாக இருக்கும் மாவோயிஸ்ட் தலைவர்களான கிஷண்ஜி, மனோஜ் மஹாதோ போன்றவர்கள், மம்தா பானர்ஜியின் லால்கர் பேரணியை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று அறைகூவலே விடுத்திருந்தனர்.பல தலைமறைவு மாவோயிஸ்ட் தலைவர்கள் அந்தப் பேரணியில் காணப்பட்டனர் என்று தெரிகிறது. ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தின் பின்னணியில் செயல்பட்டதாகக் கூறப்படும் ஆஷிஷ் மஹாதோ அந்தப் பேரணியில் கலந்து கொண்டிருக்கிறார் என்று காவல்துறை தகவல் அனுப்பி இருக்கிறது. மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்காமலும் நடந்து கொள்ளும் அமைப்புகளின் ஆதரவில், மத்திய அமைச்சர் ஒருவர் பேரணி நடத்துகிறார். அதைப் பிரதமரும், மத்திய அரசும் வேடிக்கை பார்க்கிறது.பேரணியில் மத்திய ரயில்வே அமைச்சரின் கொள்கை முழக்கங்களைக் கேட்டால், மெய்சிலிர்க்கிறது. ஆந்திரப் பிரதேச அடிலாபாத் பகுதியில் சமீபத்தில் காவல்துறையினருடனான துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்தார், மாவோயிஸ்ட்டுகளின்  செய்தியாளரான செருக்குரி ராஜ்குமார் என்கிற ஆசாத். இவரைக் காவல்துறையினர் கொன்றது தவறு என்று முழங்கி இருக்கிறார் மம்தா பானர்ஜி. ஒரு மத்திய அமைச்சர் அரசின் நடவடிக்கையைப் பகிரங்கமாக விமர்சிக்கலாமா என்று கேட்கக் கூடாது. ஏனென்றால், மம்தா பானர்ஜியைத் தட்டிக் கேட்கும் துணிவு மத்திய அரசுக்குத்தான் கிடையாதே! "ஆப்பரேஷன் கிரீன்ஹன்ட்' என்பது, மத்திய, மாநில காவல்படைகளால், மேற்கு வங்கத்தில் லால்கர் பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக நடத்தப்படும் தேடுதல் வேட்டைக்குப் பெயர். இந்த "ஆப்பரேஷன் கிரீன்ஹன்ட்' நிறுத்தப்படும் என்கிற கொள்கைமுடிவை அந்தப் பேரணியில் அறிவித்திருக்கிறார் மம்தா பானர்ஜி. பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, முதலமைச்சரோ அறிவிக்க வேண்டிய இதுபோன்ற கொள்கை முடிவை, மத்திய அமைச்சரவைகூடி எடுக்க வேண்டிய முடிவை, ரயில்வே அமைச்சரும், கூட்டணிக் கட்சியின் தலைவியும் எப்படி அறிவிக்கலாம் என்று அசட்டுத்தனமாகக் கேள்வி எழுப்பக் கூடாது. காரணம், மம்தா பானர்ஜியைத் தட்டிக் கேட்கும் துணிவு பிரதமருக்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ கிடையாதே!மாவோயிஸ்ட்டுகளுடன் சமரசம் பேசி அவர்களை வன்முறையைக் கைவிட்டுப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதுதான் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் நோக்கம் என்றேகூட வைத்துக் கொள்வோம். அப்படியானால் என்ன செய்திருக்க வேண்டும்? மத்திய அமைச்சரவையில் விவாதித்து, அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம், பிரதமருடனும், உள்துறை அமைச்சருடனும் கலந்தாலோசித்து, அவர்களது அனுமதியுடன் பேரணியில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.தன்னிச்சையாக, அறிவிப்புகளைச் செய்ய மம்தா பானர்ஜி யார் என்று கேட்காதீர்கள். அவர் 19 மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட கூட்டணிக் கட்சித் தலைவி! அது போதாதா?எல்லாவற்றையும்விட வேடிக்கை என்ன தெரியுமா? தனது கூட்டணிக் கட்சியான காங்கிரûஸப் பேரணிக்கு அழைத்திருக்க வேண்டாமா? பெயருக்காவது, மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டித் தலைவரையாவது கூப்பிட்டிருக்க வேண்டாமா? மாவோயிஸ்ட்டுகளே அவர் பின்னால் இருக்கும்போது மம்தா பானர்ஜி ஏன் காங்கிரஸ் கட்சியைப் பற்றியோ, மத்திய அரசைப் பற்றியோ, அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு பற்றியோ கவலைப்படப் போகிறார்?மேற்கு வங்கத்தில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி ஆட்சி எல்லா வகையிலும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான ஆட்சி என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதற்கு மாற்றாக அமைய இருப்பது மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் கூட்டணியாக இருக்கப் போகிறதே என்னும்போது அச்சமும் பீதியுமாக இருக்கிறது!மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறதோ இல்லையோ, மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கூட்டுப் பொறுப்பு நகைப்புக்கிடமாகி இருக்கிறது. பாவம், பிரதமர்!
கருத்துக்கள்

முதல்பத்தியில் குறிப்பிட்டவாறு ஆட்சி போனாலும் போகட்டும் என்ற துணிவுடன் மயிலை மாங்கொல்லையில் அறிவித்தவர்தான் இனமானக் காவலர் கலைஞர். குடும்பநலனைக் காவுகொடுக்க வேண்டி வரும் என்பது காங்கிரசால் உணர்த்தப்பட்டபின்பு காங்கிரசிற்கு மட்டுமல்ல இராசபக்சேவிற்கும் ஊதுகுழலாக மாறினார். காங்கிரசை எதிர்க்கும் துணிவு இவருக்குமில்லை. மம்தாவைப் பகைக்கும் துணிவு காங்கிரசிற்கும் இல்லை. அடிமையாக இருந்தால் தூக்கிப் போற்றப்படுவதும் இல்லையேல் தாக்கித் தூற்றப்படுவதுமான ஆரியத்தை அப்படியே பின்பற்றும் மத்திய ஆரிய அரசு திராவிடத் தலைவரையும் தன்வயமாக்கிக் கொண்டது. ஒருவேளை வரும் தேர்தல் இரண்டையும் எதிர் எதிர் அணியில் சந்திக்க வைத்தால் திமுக விற்கு வீரம் வரலாம். அன்று சொன்னோம் கேட்கவில்லை. கட்டுண்டோம். பொறுத்திருந்தோம். இனிப் பொறுப்பதில்லை என எழுந்து நிற்கிறோம் என வீர உரையாடல் வரலாம். தன்மானத்தையும் இனமானத்தையும் புதைகுழியில் தள்ளும் அரசியலில் இஃதெல்லாம் இயற்கைதானே! வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/11/2010 4:20:00 AM
Mamtha is a veiled supporter of Maoist. She should be removed from the Ministry. PM cannot do anything as his hands are cuffed by .... What's your action on Mamtha's recent meetings with the support of Maoist in Lalgar, Soniyaji?
By BAALAA
8/11/2010 4:03:00 AM
ஈழத்தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் முடிவுக்கும், கண்ணோட்டத்துக்கும் எதிரான நிலைப்பாட்டை, தமிழக அரசும், கூட்டணிக் கட்சியான திமுகவும் எடுத்திருந்தால், வெளிப்படையாக ராஜபட்ச அரசைக் கண்டித்துப் போராடவும், விடுதலைப் புலிகளுக்குச் சாதகமாகச் செயல்படவும் முனைந்திருந்தால் மத்திய அரசு அதை மௌனம் காத்து ஜீரணித்திருக்குமா? என்ற கேள்விக்கு இல்லையென்ற பதில் தான் வரும் ஆனால் திராவிட தெலுங்கன் குடும்பமான‌ தட்சணாமூர்த்தி என்ற கருணா(க)நிதிக்கு அப்படி என்ன தமிழர்மேல் அக்கறைவரப்போகிறது ஈழதமிழருக்கு சார்பாக நடப்பது இருக்கட்டும் வர்தேறிகளின் மானிலத்திலுள்ள தமிழக மீனவரை கொல்கிறான். தெலுங்கன் தங்கபாலும் சிதம்பரமும் கூறுகிறான் தமிழன் சாகவில்லையாம் இந்த காங்கிரஸ் தெலுங்கனுகளும் தி மு கா திராவிட தெலுங்கருக்கும் சாவது தமிழர் தானே என்ற இழக்காரம் அடம்பன் கொடியும் மிரண்டால் காடு தாங்காது என்ற பழமொழி போல் கொலைஞ்யன் தட்சனாமூர்த்திக்கு தமிழர்கள் விரைவில் தேர்தல் மூலம் பதிலடி வழங்குவார்கள்
By கரிகால்சோழன்
8/11/2010 2:58:00 AM
ஈழத்தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் முடிவுக்கும், கண்ணோட்டத்துக்கும் எதிரான நிலைப்பாட்டை, தமிழக அரசும், கூட்டணிக் கட்சியான திமுகவும் எடுத்திருந்தால், வெளிப்படையாக ராஜபட்ச அரசைக் கண்டித்துப் போராடவும், விடுதலைப் புலிகளுக்குச் சாதகமாகச் செயல்படவும் முனைந்திருந்தால் மத்திய அரசு அதை மௌனம் காத்து ஜீரணித்திருக்குமா? என்ற கேள்விக்கு இல்லையென்ற பதில் தான் வரும் ஆனால் திராவிட தெலுங்கன் குடும்பமான‌ தட்சணாமூர்த்தி என்ற கருணா(க)நிதிக்கு அப்படி என்ன தமிழர்மேல் அக்கறைவரப்போகிறது ஈழதமிழருக்கு சார்பாக நடப்பது இருக்கட்டும் இந்த காங்கிரஸ் தெலுங்கனுகளும் தி மு கா திராவிட தெலுங்கருக்கும் சாவது தமிழர் தானே என்ற இழக்காரம் அடம்பன் கொடியும் மிரண்டால் காடு தாங்காது என்ற பழமொழி போல் கொலைஞ்யன் தட்சனாமூர்த்திக்கு தமிழர்கள் விரைவில் தேர்தல் மூலம் பதிலடி வழங்குவார்கள்
By கரிகால்சோழன்
8/11/2010 2:53:00 AM
காங்கிரஸ் கட்சி!!!நகைப்புக்கிடமாகி இருக்கிறது.
By Rafeei,Madina Munawara
8/11/2010 2:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வியாழன், 25 பிப்ரவரி, 2010

மேற்கு வங்க தேர்தலை மையமாகக் கொண்ட பட்ஜெட்டா?



புது தில்லி, பிப்.24: மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் மேற்கு வங்க மாநிலத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் எனக் கூறப்படுவதால் மம்தா பானர்ஜி மிகுந்த வேதனையடைந்துள்ளார்.பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தனது வேதனையை அவர் வெளியிட்டார். இத்தகைய குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் ரீதியில் கூறப்படுபவை. அதே பாணியிலான கேள்வியை செய்தியாளர்களாகிய நீங்களும் கேட்காதீர்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு மேற்கு வங்க மாநிலத்துக்கு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளனவா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் இவ்விதம் பதிலளித்தார்.மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில் பல எம்பிக்கள் குறுக்கிட்டுக் கொண்டேயிருந்தனர். தங்கள் தொகுதிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டேயிருந்தனர். 800 மக்கள் பிரதிநிதிகளையும் ஒரு பட்ஜெட்டில் திருப்திபடுத்த இயலாது என்று அப்போது பானர்ஜி குறிப்பிட்டார். வேகன் தொழிற்சாலை ஒரிசா, ஆந்திரம் மற்றும் அசாமில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தொழிற்சாலைகள் பிற மாநிலங்களில்தான் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக மேற்கு வங்க மாநிலத்தைப் புறக்கணித்துவிட முடியாது. மற்ற அமைச்சர்கள் தங்கள் மாநிலங்களுக்கு எந்த வகையில் முக்கியத்துவம் அளிக்கிறார்களோ அதேபோலத்தான் தானும் செயல்படுவதாக அவர் கூறினார்.மேற்கு வங்க மாநிலம் வளர்ச்சிப் பணிகளிலிருந்து முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என்று அவர் கேள்வியெழுப்பினார்.கொல்கத்தா மெட்ரோ ரயில் இணைப்பு விரிவாக்கம், துறைமுக இணைப்புக்கு விரிவாக்கம், ரவீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த நாளை ஒட்டி சம்ஸ்கிருத எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம், பாரத தீர்த்த யாத்திரை ரயில் சேவை உள்ளிட்டவை மேற்கு வங்க மாநிலத்துக்காக அறிவிக்கப்பட்ட சிறப்புத் திட்டங்களாகும்.
கருத்துக்கள்

இரவீந்திர நாத தாகூர் அவர்களின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வங்கமொழியின் பெயரால் தொடர்வண்டி இயக்கவது அல்லது அவரது நூலான கீதாஞ்சலியின் பெயரால் இயக்குவது என்பது பொருத்தமாக இருக்கும். சமற்கிருதத்தின் பெயரால் இயக்குவதை நிறுத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/25/2010 3:10:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
பிராந்திய மொழிகளில் ரயில்வே தேர்வு: மம்தா அறிவிப்பு



புது தில்லி, பிப். 24: ரயில்வே தேர்வுகள் பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும் என்று மம்தா அறிவித்தார்.நாடாளுமன்றத்தில் புதன்கிழமை ரயில்வே பட்ஜெட் உரையில் இது குறித்து அவர் மேலும் கூறியது:ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வுகள் அனைத்தும் ஒரே நாளில் நடத்தப்படும். பணியாளர்கள் தேர்வு முறைகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்படும்.இனி மாநில மொழிகளிலும் ரயில்வே தேர்வுகளை எழுதலாம். ஹிந்தி, உருது, ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் கேள்வித்தாள்கள் தயாரிக்கப்படும் என்று மம்தா தெரிவித்தார்.முன்னதாக கடந்த நவம்பரில் மாநில மொழிகளிலும் ரயில்வே தேர்வுகள் நடத்தப்படும் என்று மம்தா உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தேர்வுக் கட்டணம் இல்லை: பொருளாதார ரீதியில் பின் தங்கிய, அதாவது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்துக்கு உள்பட்ட மகளிர் தேர்வுக் கட்டணம் இல்லாமலேயே ரயில்வே தேர்வு எழுதலாம் என்றும் பட்ஜெட் உரையில் மம்தா அறிவித்தார்.
கருத்துக்கள்

தாய்மொழிகளில் தேர்வு எழுத வாய்ப்புநல்கும் மம்தாவிற்குப் பாராட்டுகள். இதனை அனைத்துத் துறைகளும் தனியார் நிறுவனங்களும் பயன்படுத்தி மொழிச் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் தேசிய மொழிகளின் உரிமைகள் காக்கப்பட்டு இந்தியக் கண்டத்தின் ஒற்றுமையும் பேணப்படும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/25/2010 2:55:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 22 டிசம்பர், 2009

தலையங்கம்: 'உள்நோக்கம்' சரியில்லை!



நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை இப்படி ஓர் அதிசயம் நடந்தது இல்லை.​ தனக்கு முன் ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் ஆட்சிக்காலம் ​(2004-2009) ரயில்வே துறையின் பொற்காலம் அல்ல என்று நிரூபிக்க வெள்ளை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் இப்போதைய ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி.லாலு பிரசாதின் ஆட்சிக்காலத்தில் ரயில்வே நிர்வாகம்,​​ அதிலும் குறிப்பாக நிதி நிர்வாகம் எப்படி இருந்தது என்று அறிய "ஆலோசகர்' ஒருவரை நியமித்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.​ அறிக்கை தெரிவிக்கும் சில முக்கிய அம்சங்கள் என்ன தெரியுமா?லாலு ஆட்சிக் காலத்தில் வருவாய்க்கணக்கில் மொத்தமாக 96,000 கோடி ரூபாய் உபரி கிடைத்ததாகக் கூறப்பட்டது தவறான தகவல்.​ உண்மையில் அந்தத் தொகை 39,500 கோடி ரூபாய்தானாம்.புதிய வகை கணக்கீட்டு முறையால்தான் இந்த உபரி கிடைத்திருக்கிறது என்றும் அத்துடன் ஆறாவது நிதிக்குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப ரயில்வே ஊழியர்களுக்குத் தர வேண்டிய ஊதியம்,​​ நிலுவை போன்றவை கழித்துக் காட்டப்படாததாலும்தான் உபரி அதிகமாகவே கணக்கில் வந்தது என்கிறது அறிக்கை.லாலு பிரசாத் காலத்தில் போக்குவரத்து வளர்ச்சி வீதம் சராசரிக்கும் குறைவுதான்.​ அத்துடன் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருள் உற்பத்திக்கு ​(ஜி.டி.பி.)​ ரயில்வே துறையின் பங்களிப்பு வெறும் 1.15 சதவீதமாகத்தான் இருந்தது.சரக்குப் போக்குவரத்து இனத்தில் வருவாய் அதிகரித்தது;​ சரக்கு ரயில் பெட்டிகளின் கொள்திறன் கூட்டப்பட்டதால் வருவாயும் உயர்ந்தது.​ சரக்கு ரயில் போய் நிற்கும் கடைசி நிலையத்தில் அதிக நாள்கள் அதைத் தங்கவிடாமல் பெட்டிகளைக் காலி செய்து உடனே பயன்பாட்டுக்குக் கொண்டு வந்ததாலும் வருவாய் உயர்ந்தது.​ பராமரிப்புப் பணிகளை அதிகப்படுத்தியதும் அதற்கு ஒரு காரணம்.பயணிகள் ரயில் பயன்பாடும் அதிகரித்தது,​​ ஆனால் சர்வதேச செயல்திறனுக்கு இணையாக இந்தியாவில் இது உயரவில்லை.​ பயணிகள் போக்குவரத்துக்கு நாட்டில் இருந்த தேவைக்கு ஏற்பவும் இது இல்லை.​ இதனால் பல்வேறு நீண்டதூர ரயில்களில் எல்லா பருவங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தபடியே இருக்கிறது.சரக்கு,​​ பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றே தொடர்ந்து பட்ஜெட்டின்போது கூறப்பட்டாலும் சரக்குக் கட்டணம் சராசரியாக 37% உயர்ந்திருக்கிறது.​ உணவுப் பண்டங்களைக் கொண்டு செல்வதற்கான கட்டணம் 44%-ம்,​​ உரங்களை ஏற்றிச் செல்வதற்கான கட்டணம் 35%-ம் இதே காலத்தில் ஏறியிருக்கிறது.அத்துடன் பயணிகள் ரயில் கட்டணத்தில் முதல் வகுப்பு பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டது.​ தட்கல் முறையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.​ வெறும் எக்ஸ்பிரஸ்,​​ மெயில் ரயில்கள் சூப்பர்-ஃபாஸ்ட் ரயில்களாக அறிவிக்கப்பட்டு உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டது.​ இதனால் ரயில்வே துறைக்கு வருவாய் உயர்ந்தது.அதாவது கட்டணங்களை உயர்த்தவில்லை என்பது உண்மையல்ல,​​ மறைமுகமாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டன,​​ அந்தச் சுமை பயணிகள் மீது விழுந்தது.லாலு பிரசாத் ஆட்சிக் காலத்தில் விபத்துகளின் எண்ணிக்கையும் ரயில்களில் நடைபெறும் குற்றச் செயல்கள் எண்ணிக்கையும் குறைந்தன என்பது உண்மை.​ அதேபோல ரயில்வே பணியாளர்களின் உற்பத்தித் திறனும் கணிசமாக அதிகரித்தது.குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் திட்டமிட்ட செலவு கணிசமாக அதிகரித்து 135% என்ற உயர் அளவை எட்டியது.​ இது ஆரோக்கியமான ஒரு குறியீடாகும்.இவ்வாறு முந்தைய ஆட்சியில் ரயில்வே துறையின் நன்மை தீமைகளைப் பட்டியலிட்டிருக்கிறது வெள்ளை அறிக்கை.லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராகப் பதவி வகித்ததும் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான்.​ எனவே முந்தைய ஆட்சியில் மிகப்பெரிய மோசடி நடந்திருக்கிறது,​​ மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்,​​ முந்தைய ரயில்வே அமைச்சர் தவறான தகவலை அளித்திருக்கிறார் என்று மறைமுகமாகத் தெரிவித்திருக்கிறார் மம்தா பானர்ஜி.​ நாடாளுமன்றத்துக்கே தவறான தகவலைத் தந்தார் லாலு பிரசாத் என்றுகூட உரிமைப் பிரச்னை கொண்டுவரப்படலாம்.நம் கேள்வி அதுவல்ல;​ சிறந்த நிர்வாக நிபுணர் என்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாராட்டுப் பெற்று,​​ வெளிநாட்டு நிர்வாகவியல் மாணவர்களுக்கெல்லாம் பாடம் நடத்திய அளவுக்கு உயர்ந்த லாலு பிரசாதை நிர்வாகம் தெரியாதவர் என்று வெள்ளை அறிக்கை மூலம் தோல் உரிக்க வேண்டிய அவசியம்தான் என்ன?​ இந்தத் தவறுகளுக்கு எல்லாம் பிரதமரும் பொறுப்பேற்க வேண்டாமா?​ ​பிரதமர் மன்மோகன் சிங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியும் நாட்டுக்கும் மக்களுக்கும் இதற்கு ​ விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டவர்கள்.​ கூட்டணிக் கட்சிகள் மாறினாலும் ஆட்சியில் தொடர்வது என்னவோ ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதானே?​ அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்பது அதுதானே?இதேபோல பிற துறைகளுக்கும் வெள்ளை அறிக்கை வெளியிடுவார்களா?​ சேற்றை வாரி இறைப்பதற்கு வெள்ளை அறிக்கை என்று பெயர் போலிருக்கிறது....
கருத்துக்கள்

தடி எடுத்தவன் தண்டல்காரன் என்னும் நிலை காங்கிரசுக் கூட்டணியில் இருப்பதை நன்றாகத் தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள். பாராட்டுகள்! ஆனால், இவர்கள் கைகளில் ஆட்சிப பொறுப்பை விடுகிறோமே என்று மக்கள் என்று வெட்கப்படப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/22/2009 3:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 6 அக்டோபர், 2009

தாய்மொழியில் ரயில்வே தேர்வு எழுதலாம்: அமைச்சர் மம்தா அறிவிப்பு



சிலிகுரி, அக். 5: இனி ரயில்வே தேர்வுகளை அவரவர் தாய்மொழியிலேயே எழுதலாம் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். சிலிகுரியில் புதிய ரயில் சேவையைத் திங்கள்கிழமை தொடங்கிவைத்து மம்தா பானர்ஜி கூறியதாவது: சிலிகுரியில் ரயில்வே தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) மையம் சில மாதங்களில் செயல்படத் தொடங்கும். நாட்டின் 21-வது மையமாகும் இது. இனி அவரவர் தாய்மொழியிலேயே ரயில்வே தேர்வுகளை எழுதலாம் என்றார்.

கருத்துக்கள்

பாராட்டுகள். இதுபோல் மத்திய அரசு நடத்தும் அனைத்துத் தேர்வுகளையும் அவரவர் தாய்மொழியில் எழுத உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். சான்றாகக் கோயம்புத்தூரில் உள்ள படைப் பள்ளியான சைனிக் பள்ளி போன்று நாடெங்கும் உள்ள பள்ளிகளில் சேர இந்தி அல்லது ஆங்கிலத்திலதான் தேர்வு எழுத வேண்டும். இந்தி தெரிந்தவர்கள்தாம் படைத்துறைக்குத் தகுதியானவர்கள் என்று மத்திய அரசு செயல்படுவது நமக்கெல்லாம் இழுக்கல்லவா? தமிழ் தமிழ் என்று முழங்குவோர் இதுபற்றி யெல்லாம் கவலைப்படுவதில்லை. அவரவர் குடும்பச் சிக்கல்களில் கருத்து செலுத்தவே நேரம் போதாத பொழுது இதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கப் போகிறது? மம்தாவை அனைத்துத் துறையினரும் பின்பற்றி மண்ணின் மொழிகளை மதிக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/6/2009 2:54:00 AM

ரைல்வே தேர்வுகள் இனி அவரவர் தாய் மொழியில் எழுதலாம் என்ற முடிவு படி தமிழ் மொழியிலும், எழுதலாம் என்பது , தமிழ் மொழிக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகும். வாழ்க! தமிழ். அமைச்சர் மம்தா பநர்ஜி அவர்களுக்கு அனைத்து தமிழர்களின் நன்றி ! நல்வாழ்துக்கள்

By Ibnusalih,abudhabi,uae.
10/6/2009 12:11:00 AM

excellent

By Moorthy
10/5/2009 10:10:00 PM

Congrats! Good move Mamta. Keep it up. Also instruct to use local languages in all the Trains, Flights.

By keeran
10/5/2009 8:37:00 PM

நல்ல முயற்சி பாராட்டுக்கள் மம்தா அவர்களே. அப்படியே மக்களவையில் அழகிரிக்காக கொஞ்சம் குரல் கொடுங்களேன்!?

By மங்கைதாசன்
10/5/2009 8:31:00 PM

very good

By ravi
10/5/2009 8:15:00 PM

mamtha done a good job. congrats to mamtha

By suresh.s, qatar
10/5/2009 7:53:00 PM

WELCOME WELCOME MAM MAMTHA CONGRATULATIONS................

By tamilan
10/5/2009 7:53:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *