வியாழன், 25 பிப்ரவரி, 2010

Latest indian and world political news information

சென்னை:"முல்லைப் பெரியாறு அணை தொடர்பான குழுவில் இடம்பெறுவதால் ஏற்படும் சாதக, பாதகங்களை எண்ணிப் பார்த்து தான் தி.மு.க., முடிவு எடுத்தது. இது, கோர்ட்டுக்கு எதிர்ப்பானது அல்ல' என்று சட்ட அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு பதிலளித்துள்ளார்.அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை:



முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. தமிழகம், அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என, சுப்ரீம் கோர்ட் 2006 பிப்ரவரியில் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை முடக்கும் வண்ணம் கேரள அரசு, "கேரளா பாசன மற்றும் பாதுகாப்பு திருத்தச் சட்டம் -2006' என்ற சட்டத்தை, சட்டசபையில் நிறைவேற்றியது.



இந்தச் சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட் போனாராம். அந்த வழக்கை கருணாநிதி முறையாக நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். 2006 மார்ச் 31ம் தேதி தமிழக அரசின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் சிவில் வழக்கு தொடர ஒரு மனுவை ஜெயலலிதா போட்டாரே தவிர, அந்த மனுவுக்கு ஒரு நம்பரை கூட வாங்க வில்லை. நம்பர் போடாத வழக்கு விசாரணைக்கே வராது.



தி.மு.க., அரசு அமைந்த பின் தான், அந்த மனுவுக்கு நம்பர் வாங்கி, அதை கோர்ட் விசாரணைக்கு தகுதியுள்ளதாக்கி, வழக்கையும் நடத்தி வருகிறோம். ஜெயலலிதா காலத்தில் இந்த முல்லைப் பெரியாறு வழக்கில் வாதாடிய அதே வக்கீலும் சேர்ந்து தான் இப்போதும் தமிழகத்துக்காக வாதாடி இருக்கின்றனர். ஜெயலலிதா ஆட்சியில் வக்கீல்கள் வாதம் சிறப்பாக இருக்குமாம், கருணாநிதி ஆட்சியில் சிறப்பாக இருக்காதாம். இது என்ன வாதமோ?



இவ்வழக்கை அரசியல் சாசன பிரிவுக்கு சுப்ரீம் கோர்ட் அனுப்பிய போது நாம் ஏன் எதிர்க்கவில்லை என்கிறார் ஜெயலலிதா. இவ்வழக்கை, எந்த பிரிவு "பெஞ்ச்' விசாரிக்க வேண்டுமென முடிவு செய்வது நீதிமன்றத்தின் உரிமை. அதை நாம் எதிர்க்க முடியாது. இவ்வழக்கு இரு மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்னை.இதில் அரசியல் சட்ட சம்பந்தப்பட்ட விவகாரங்களும் அடங்கியிருக்கிறது என்று கோர்ட் கருதினால் அதை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றும் முழு அதிகாரம் நீதிமன்றத்துக்கு தான் உண்டே தவிர அதை எதிர்ப்பதில் எந்த பயனும் இல்லை.



ஐவர் குழுவில் தமிழகம் இடம்பெறாவிட்டால் முந்தைய தீர்ப்புக்கு எதிரான கேரளாவின் சட்டத்தை தமிழக அரசு ஆதரிப்பதாக அர்த்தம் ஆகிவிடாதா?' என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.கேரள அரசு பிறப்பித்த சட்டம் சரியா, இல்லையா என்பதை ஆராய அல்ல இந்த ஐவர் குழு; மீண்டும் அணையின் பலத்தை சோதித்து பார்க்க, நீரின் உபயோகத்தை கண்டறிய என்று தான் சுப்ரீம் கோர்ட் கூறியிருக்கிறது.



ஐவர் குழுவில் இடம்பெறாவிட்டால் அது எப்படி கேரள சட்டத்துக்கு ஆதரவாகி விடும்?இன்னும் சொல்லப்போனால், இந்த ஐவர் குழுவை வரவேற்றிருக்கிறார் கேரளா முதல்வர். அதுமட்டுமல்ல, இந்த குழு அமைக்கப்பட்டதால், சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய தீர்ப்பு ரத்தாகி விட்டது என்றும், தன் கருத்தை தெரிவித்திருக்கிறார். இப்போது புரிகிறதா ஜெயலலிதாவுக்கு, ஐவர் குழு யாருக்கு சாதகம் என்று?



இந்திய அரசியல் சட்டத்தின் மீது பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல்வர், சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பை விமர்சிக்கலாமா என்றும் ஜெயலலிதா கேள்வி கேட்டிருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டில் உள்ள ஒரு பெஞ்ச் அல்ல, சுப்ரீம் கோர்ட்டே அரசியல் சட்டத்தின் பாதுகாவல் அரண் தான்.



அந்த சுப்ரீம் கோர்ட், பெரியாறு அணை பிரச்னையில் ஒரு தீர்ப்புச் சொல்லி, அதை இரண்டு முறை மீண்டும் உறுதி செய்து தீர்ப்பளித்த பின்பும், அந்தத் தீர்ப்பை முடக்கும் வகையில் கேரளா ஒரு திருத்த சட்டத்தை நிறைவேற்றி விட்டதே, அதற்கு கேரளா அரசு பெற்றிருக்கிற தண்டனை என்ன?ஒரு குழுவில் இடம் பெறுவதும், பெறாமல் இருப்பதும் நமது விருப்பம். நாட்டு நலன் கருதி, குழுவில் பெறுவதால் ஏற்படும் சாதக, பாதகங்களை எண்ணிப் பார்த்து இது நாம் எடுத்திருக்கிற முடிவு. நீதிமன்றத்துக்கு எதிர்ப்பானது அல்ல.



முல்லைப் பெரியாறு பிரச்னையில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக, பிரதமர், கேரளா முதல்வர்களுடன் எட்டு முறைக்கு மேல் முதல்வர் கருணாநிதியே நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். ஜெயலலிதா தன் ஆட்சியில் ஒரு முறையேனும் இப்படி கலந்து உரையாடியது உண்டா?



பிரதமருக்கும், மத்திய நீர்வளத் துறை, பாதுகாப்புத் துறை அமைச்சர்களுக்கும், முல்லைப் பெரியாறு பிரச்னை குறித்து 15 முறை கடிதங்களை முதல்வர் எழுதியிருக்கிறார். ஆனால், ஜெயலலிதா எழுதிய கடிதங்கள் மூன்றே மூன்று தான். இந்த லட்சணத்தில் கருணாநிதி உரிமையை விட்டு விட்டதாக அறிக்கை வேறு விடுகிறார்.இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.





வாசகர் கருத்து
திராவிட என்ற சொல்லை தமிழ் நாட்டு கட்சிகள் பேட்டர்ன் போட்டு கொண்டுள்ளன. நமது பழைய கலாசாரம் என்ன என்று தெரியாமல் பிதற்றி கொண்டு இருக்கிறார்கள். ஒன்பது மணிக்கு ஒயின் ஷாப்க்கு போனால் தெரியும் நமது கலாச்சார வழி தோன்றல்கள். நமது அரசியல் வாதிகள் உரம் போட்டு வளர்ப்பது மக்களின் முட்டாள் தனத்தை தானே.
by P Ram,Jakarta,Indonesia 24-02-2010 18:05:23 IST
நன்றி துரைமுருகன் அவர்களே! '''' சுப்ரீம் கோர்ட்டே அரசியல் சட்டத்தின் பாதுகாவல் அரண் தான்'''' என்று சொன்னதற்கு. இதை தலைவர் காதிலும் போடுங்கள் ; ஏனெனில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ,நம் கட்சி காரர் தொழிலுக்கு இடைஞ்சல் ஆகா இருந்தால் ஏற்க மறுக்கிறோம் அல்லவா !!

by FG Smith,London,United Kingdom 24-02-2010 18:01:49 IST
முக்கியமான விஷயங்களில் எல்ல கட்சியினரையும் கலந்து முடிவெடுபதுதான் நல்லது .
by G Divaharan,Tirunelveli,India 24-02-2010 09:55:49 IST
ippadiye 1voru alukum vilakam koduthu time wast pannama kadamaiyai seithal makalukku nallathu
by m rajaram,sivaganga,India 24-02-2010 09:55:39 IST
என்ன அய்யா சொல்ல வறீங்க. இப்பிடி மாத்தி மாத்தி அறிக்கை விடாம எதாவது பண்ணி தொலைங்க.
எப்ப தான் போட்டி போட்டு மக்களுக்கு நல்லது செய்வீங்களோ?
கலைஞர் இப்ப தான் துரைமுருகனுக்கு வாய தொறக்க உத்தரவு குடுத்தாரு போல இருக்கு.
நீங்க ஆஸ்திரேலியால காலேஜ் கட்டுரீங்கலாமே அது உண்மையா?
நம்ம தமிழ்நாடு மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு / வெளி ஒதுக்கீடு எதாவது கொடுங்க சார்.
உங்களை வாழ வச்ச தமிழ் மக்களுக்கு தண்ணி மட்டுமாவது கொடுங்க.
by RK Sudhan,dubai,United Arab Emirates 24-02-2010 09:14:34 IST
போதும் மூடு...நீ எவ்ளோ கேவலமானவன் நு தெரியும்.வேலூர் ல நீ அடிக்கிற கூத்து எங்களுக்கு தெரியும்
by SD சத்,okc,ok,United States 24-02-2010 08:11:22 IST
திருவள்ளுவன் சென்னை எழுதியிருக்கிறத பார்த்தா தமாஷா இருக்கு. யார ஆரியதாசர்கள்னு சொல்றார்னு புரியலை. இந்த பிரச்சனைல எங்கேர்ந்து ஆரியர் திராவிடர் பிரச்சனை வந்தது? ஏதோ வீராவேசமா கருத்து சொல்லணுமேனு உளறி கொட்டினா மாதிரி இருக்கு.
by வெங்கடேசன்,Chennai,India 24-02-2010 07:21:59 IST
அய்யா துறைசிங்கம், உங்க அறிக்கையில் ஒன்றும் என்னை போன்ற பாமரன் மண்டையில் ஏறவில்லை. ஜெ திட்டிய அறிக்கை தான் இது.
by mokka சாமீ,jawa,Indonesia 24-02-2010 07:08:35 IST
முல்லை பெரியார் பிரச்சனையில் கேரளாவின் சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதா அரசு மார்ச் 31ல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டதாக துரைமுருகனே கூறுகிறார், இந்நிலையில் சரியாக மே மாதம் 16ஆம் தேதி மைனாரிட்டி திமுக அரசு பதவியேற்றது. நானும் வழக்கறிஞர் என்ற முறையில் எனக்கு தெரிந்தவரை, வழக்கு நம்பர் ஆகி விசாரணைக்கு வர ஒரு மாதத்துக்கு மேல் ஆகும், அந்த ஒரு மாத இடைவெளியில் மைனாரிட்டி அரசு பதவிக்கு வந்துவிட்டது. ஆகவே வழக்கை மேற்கொண்டு நடத்தவேண்டிய பொறுப்பு கருணாநிதி&கோ வசம் மாற்றப்படுகிறது. துரைமுருகனுக்கு போதுமான அறிவு இல்லை என்பதால்தான் பொதுப்பணிதுறை பறிக்கப்பட்டு திமுகவில் ஓரம் கட்டப்பட்டு விட்டார். இழந்த பதவியை மீட்க தரம் இல்லாத அறிக்கை விட்டு தடுமாறுகிறார்.
by N பாலகிருஷ்ணன் ,Ramnad,India 24-02-2010 06:59:53 IST
அறைவேக்கட்டுத்தனமான அறிக்கை விடுவதில் ஜெயாவை யாரும் மிஞ்ச யாராலும் முடியாது
by P Amal,Castries,Saint Lucia 24-02-2010 04:58:38 IST
ஐயோ! ஐயோ! ஏன்தான் இப்படி வேண்டுமென்றே குழப்புகிறார்களோ! ஐவர் குழு வாயிலாக அணை வலிமையற்று உள்ளதாகக் கூறச் சொன்னால் கேரள அரசின் சட்டம் சரியென்றுதானே உ நீ ம சொல்லும்? உ நீ ம தீர்ப்புகளையே கேரள அரசு மீறும் பொழுது அதன் தீர்ப்பை எதிர்ப்பது ஒன்றும் தவறல்லவே! காங்கிரசு வாயை மூடிக் கொண்டிருக்கச் சொன்னதால்தான் திமுக அரசு தவறான முடிவை எடுத்துத தானும் குழம்பி மக்களையும் குழப்புகிறதோ! தமிழக நலன்கைள விட்டுக் கொடுப்பதே தமிழக ஆட்சியாளர்களின் பொழுது போக்கு என்றானபிறகு நாம் என்ன செய்ய முடியும்? இந்திய அரசியலில் ஆரியர்களின் செல்வாக்கும் ஆரியத்தில் ஊறிய மலையாளிகள் செல்வாக்கும் மிகுதியாக உள்ளமையால் ஆரியதாசர்களான திராவிடம் அடிபணிந்து கிடக்கிறது.எனவே, கட்சி அரசியல்களுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நம் உரிமைகளை மீட்டு வெற்றி பெற வேண்டும்.
by I. thiruvalluvan,chennai,India 24-02-2010 04:52:25 IST
DMK,only,was part of Central Govt,for more than 13 years,as against AIADMK of 10 months.Why DMK has not influnced in Mullai Periyaru,eventhough,DMK had Environment Ministry?
by R Karuppiah Sathiyaseelan,Kinshasa,Congo (Zaire) 24-02-2010 03:38:51 IST
அறிக்கையில் ஜேஜே வை நக்கல் செய்வதை தவிர்த்து பார்த்தால், அறிக்கையில் சாதகமான அம்சத்தையும் பாதகமான அம்சத்தையும் காணோம்.
by B Sivanesan,London,United Kingdom 24-02-2010 03:05:26 IST
பச்சை சீலைக்கு சரியான நெத்தியடி பதில்!
ஆனா அந்த கூட்டத்துக்குதான் ஒரு மண்ணும் தெரியாதே!
கும்மாளம் போட தோழியோட திராட்சை தோட்டத்துக்கு போக விடாம பண்ணிட்டாங்க,இப்போ கொடநாட்டுகும் போக வழி இல்லை!
by S செந்தில் ,India,India 24-02-2010 03:03:19 IST

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக