நிதிநிலை அறிவிப்புகள் வரும நிதியாண்டு முதல்தானே நடைமுறைக்கு வரும். அவ்வாறிருக்க இவ்விலை உயர்வை மட்டும் உடனே நடைமுறைக்குக் கொண்டு வருவது எப்படி சரியாகும்? 2.) இவ்விலை உயர்வைத் தவறு எனக் கருதுவோர் கூட இவ்வாறு முதல்வர் மடல் எழுதியுள்ளதை நாடகமாகக் கருதுகின்றனர் என்பதைத் தினமணியின் கருத்துக் கணிப்பில் 81% வாசகர்கள் வாக்கு மெய்ப்பிக்கின்றது. தமிழினப் படுகொலையின் பொழுது நாடகம் அரங்கேறியதால் எல்லாவற்றையுமே நாடகமாகப் பார்க்கச் செய்கின்றது. ஆட்சிநலன் கருதி திமுக காங்கிரசை விட்டு விலகாது என்பது அனைவரும் அறிந்த செய்தியாக இருந்த போதிலும் மகளுக்கு மந்திரி பதவி கிடைக்காமையால் அல்லது மகனின் மந்திரி பதவி பறிபோகும் சூழல் எழுந்துள்ளமையால் கலைஞர் எதிர்ப்புக் குரலை எழுப்புவதாகக் கருதச் செய்கிறது. எனவே, இத்தகைய பழியைத் துடைக்கும் வண்ணம் கலைஞர் தமிழ்நலப் பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவரது குரலுக்கு மதிப்பிருக்கும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
2/28/2010 3:15:00 AM
கர்னாடக முதலமைச்சர் எடியூரப்பா மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் ரயில்வே திட்டங்களுக்காக, கர்னாடக மாநில அரசு, 2500 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யும்' என்று அறிவித்துள்ளார். 10 திட்டங்களுக்கு நிலம் இலவசமாக வழங்கியும், மாநில அரசும் ரயில்வேயும் பாதிப்பாதி நிதி அளிப்பது என்ற திட்டத்தின் அடிப்படையிலும், ஐந்து திட்டங்கள் அரசு - தனியார் பங்களிப்பிலும் நிறைவேற்றுவதற்கு கர்னாடக முதலமைச்சர் எடியூரப்பா ஒப்புதல் அளித்துவிட்டார். அனால் நம்ம தலையெழுத்தை பாருங்கள். மாதம் ஒரு ரெக்கார்டு டான்ஸ் பார்த்துக்கிட்டு ஒரு முதலமைச்சர். ஆமாம் பணம், பாட்டில், பிரியாணி வாங்கிக்கிட்டு ஓட்டு போடும் நாம் அதுக்கெல்லாம் ஆசைப்படக்கூடாதுதான்.
2/28/2010 2:16:00 AM