வியாழன், 25 பிப்ரவரி, 2010

பிராந்திய மொழிகளில் ரயில்வே தேர்வு: மம்தா அறிவிப்பு



புது தில்லி, பிப். 24: ரயில்வே தேர்வுகள் பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும் என்று மம்தா அறிவித்தார்.நாடாளுமன்றத்தில் புதன்கிழமை ரயில்வே பட்ஜெட் உரையில் இது குறித்து அவர் மேலும் கூறியது:ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வுகள் அனைத்தும் ஒரே நாளில் நடத்தப்படும். பணியாளர்கள் தேர்வு முறைகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்படும்.இனி மாநில மொழிகளிலும் ரயில்வே தேர்வுகளை எழுதலாம். ஹிந்தி, உருது, ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் கேள்வித்தாள்கள் தயாரிக்கப்படும் என்று மம்தா தெரிவித்தார்.முன்னதாக கடந்த நவம்பரில் மாநில மொழிகளிலும் ரயில்வே தேர்வுகள் நடத்தப்படும் என்று மம்தா உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தேர்வுக் கட்டணம் இல்லை: பொருளாதார ரீதியில் பின் தங்கிய, அதாவது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்துக்கு உள்பட்ட மகளிர் தேர்வுக் கட்டணம் இல்லாமலேயே ரயில்வே தேர்வு எழுதலாம் என்றும் பட்ஜெட் உரையில் மம்தா அறிவித்தார்.
கருத்துக்கள்

தாய்மொழிகளில் தேர்வு எழுத வாய்ப்புநல்கும் மம்தாவிற்குப் பாராட்டுகள். இதனை அனைத்துத் துறைகளும் தனியார் நிறுவனங்களும் பயன்படுத்தி மொழிச் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் தேசிய மொழிகளின் உரிமைகள் காக்கப்பட்டு இந்தியக் கண்டத்தின் ஒற்றுமையும் பேணப்படும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/25/2010 2:55:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக